நீங்கள் அலுவலகத்தில் அல்லது ஏதோவொரு நிறுவனத்தில் வேலை செய்பவர் என்றால் நிச்சயமாக எப்போதும் ஒரே மாதிரியான அல்லது சாதகமான அனுபவங்களை தினசரி எதிர்கொள்ள மாட்டீர்கள். சில நேரங்களில், உங்கள் பாஸ் அல்லது மேல் அதிகாரி எப்போதுமே உங்களை நோகடிக்கும் எண்ணத்துடன் பேசிக் கொண்டிருப்பார். நிறுவனத்திற்காக அல்லது அலுவலகத்திற்காக இரவு, பகல் பாராமல் மிகுந்த கடின உழைப்பாளியாக நீங்கள் இருப்பீர்கள். உங்களை பாராட்டா விட்டாலும் கூட பரவாயில்லை, ஆனால், மனம் நோகச் செய்யும்படி கடுமையாக பேசிவிடுவார்கள்.
ஒரு சில பணியிடங்களில் பாஸ் அல்லது மேல் அதிகாரி பேசும் பேச்சுக்கள் நஞ்சு போல இருக்கும். ஆனால், அதுபோன்ற விஷயங்களை காதில் வாங்கிக் கொள்ளாமல் நீங்கள் செவ்வனே கடமையாற்ற வேண்டியதுதான். குறிப்பாக, உங்கள் பாஸ் அல்லது மேல் அதிகாரியிடம் இருந்து கீழே பட்டியலில் உள்ளதைப் பேசினால், நிச்சயமாக அவரிடம் தான் குறை இருக்கிறது என்று அர்த்தம்.
நான் உங்கள் கருத்தை கேட்கவில்லை:
நல்ல தலைமை பண்புக்கு எது அழகு என்றால், சக ஊழியர்களின் கருத்தை மதித்து கேட்டு, அவற்றை பரிசீலனை செய்து அதன் அடிப்படையில் முடிவெடுப்பது தான். ஆனால், உங்கள் பாஸ் அல்லது மேல் அதிகாரி உங்கள் கருத்தை முன்வைப்பதற்கான வாய்ப்பை மறுக்கிறார் என்றால், நிச்சயம் அவருக்குள் ஆணவம் பிடித்த எண்ணம் இருக்கக் கூடும். வெளிப்படையாகவே, உங்கள் கருத்தை கேட்கவில்லை என்று முகத்தில் அடித்தது போல பேசிவிடுவார்.
also read :இந்த 5 குணங்கள் இருக்கும் பெண்களை ஆண்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்..
நானே எல்லா வேலையும் செய்ய வேண்டியிருக்கிறது:
நிறுவனத்திற்காக ஒவ்வொரு ஊழியரும் வியர்வை சிந்தி அல்லது அரும்பாடு பட்டு உழைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால், உங்கள் மேல் அதிகாரி, ரொம்ப சிம்பிளாக, நீங்கள் யாரும் எந்த வேலையும் செய்வதில்லை, நானே எல்லா வேலையும் செய்து கொண்டிருக்கிறேன் என்று பெருமைபட சொல்லிக் கொள்வார். அதே சமயம், பணி நேரத்தைக் காட்டிலும் கூடுதலாக உழைக்கும் உங்களுக்கு கூடுதல் ஊதியம் எதையும் கொடுக்க மாட்டார்கள்.
also read : உங்கள் இதயம் எவ்வளவு ஆரோக்கியமானது? ஒவ்வொரு பெண்ணும் பின்பற்ற வேண்டிய 5 டிப்ஸ்!
இந்த வேலையை செய்து முடி, கேள்வி கேட்காதே:
பெரும்பாலான அலுவலகங்களில் இந்த வாசகத்தை நிச்சயமாக ஒவ்வொரு ஊழியரும் எதிர்கொண்டு வந்திருப்பீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலையில் ஏதேனும் சில குறைபாடுகள் இருக்கும். அதுகுறித்து நீங்கள் சந்தேகமோ, கேள்வியோ முன்வைத்தால், உங்கள் பாஸ் அதை ஓரம்கட்டி வைத்துவிட்டு, “பேசாம சொன்ன வேலையை செய்யுங்க, தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்காதீங்க’’ என்று கடிந்து கொள்வார்.
உங்களுக்கு லக் அடிப்படையில் மட்டுமே பாராட்டு கிடைக்கும்:
நீங்கள் மாய்ந்து, மாய்ந்து உழைத்து சோர்வடைந்து காணப்படுவீர்கள். அப்போது திடீர் அதிசமயாக உங்கள் மேல் அதிகாரிகள் உங்களை அழைத்து பாராட்டுவார்கள். சில சமயம் போனஸ் கிடைக்கும். சில சமயம், பதவி உயர்வு கிடைக்கும். ஆனால், இதெல்லாம் உங்களுக்கு கிடைத்த லக் என்று குறிப்பிடுவார்கள். நாமும் வேறுவழியின்றி ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.