தாய்ப்பால் சுரக்க உதவும் பூண்டு குழம்பு எப்படி சமைக்க வேண்டும் ?

ஆறு மாதத்திற்குக் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 

தாய்ப்பால் சுரக்க உதவும் பூண்டு குழம்பு எப்படி சமைக்க வேண்டும் ?
பூண்டு குழம்பு
  • News18
  • Last Updated: August 14, 2019, 7:49 PM IST
  • Share this:
பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள் எண்ணிலடங்காதவை. அதில் ஒன்றுதான் தாய்ப்பால் சுரக்க உதவும் குணம். குழந்தைப் பிரசவித்த பின் பெரும்பாலான தாய்மார்களுக்கு இருக்கும் பிரச்னை தாய்ப்பால் வற்றுதல். ஆறு மாதத்திற்குக் கட்டாயம் தாய் பால் கொடுக்க வேண்டும். 

இரண்டு மூன்று மதங்களிலேயே தாய்ப்பால் இல்லாமல் போவதால் குழந்தையின் பசியைப் போக்க முடியாத அவலம் ஏற்படுகிறது. அதேசமயம் குழந்தையின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. தாய்ப்பால் சுரக்க உணவு முறைகளில் சில மாற்றங்கள் செய்வது அவசியம். அந்த வகையில் தாய்ப்பால் சுரக்க பூண்டு குழம்பு செய்து சாப்பிட்டால் நன்கு பால் சுரக்கும். எவ்வாறு சமைப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்


வெங்காயம் - 7

முழு பெரிய பூண்டு - 4

பச்சை மிளகாய் - 2மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

மிளகு, சீரகம் - 1/2 ஸ்பூன்

வெந்தயம் - 1 ஸ்பூன்

தக்காளி - 3

குழம்பு மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்

கடுகு - 1/2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

நல்ல எண்ணெய் - 2 ஸ்பூன்

புளி - எலுமிச்சை அளவு

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவுசெய்முறை :

புளியை சமைப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னரே ஊற வைத்துவிடுங்கள்.

சமைக்கும்போது புளியை கரைத்து தண்ணீரை தணியாக பிழிந்து எடுத்துக்கொள்ளவும். அதோடு மிளகாய்த்தூள் கலந்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தையத்தைச் சேர்க்கவும். பொறிந்ததும் உரித்த பூண்டுகளைச் சேர்த்து வதக்கவும். பின் கறிவேப்பிலை சேர்க்கவும். பொன்னிறமாக மாறாமல் பார்த்துக்கொள்ளவும்.

அடுத்ததாக வெங்காயம் சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி குழைந்து வந்ததும் கரைத்து வைத்துள்ள புளிக் கரைசலை சேர்த்துக் கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

நன்குக் கொதிக்கவிடுங்கள். நீர் சுண்டி எண்ணெய் பிரிந்து வரும் அப்போது அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லி தழைத் தூவவும்.

சுவையான பூண்டுக் குழம்பு தயார்.
First published: August 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்