சிறுவர்களுக்கு கேரட் சாதம் என்றால் மிகவும் விருப்பம். அவர்களுக்காக கேரட் சாதம் செய்ய முடிவு செய்திருந்தால் இந்த ஸ்டைலை பின்பற்றிப் பாருங்கள். மிச்சமில்லாமல் சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
அரிசி - 1 கப்
எண்ணெய் - 1 tsp
பிரிஞ்சு இலை - 1
சோம்பு - 1/2 tsp
ஏலக்காய் - 2
பட்டை - 1 இன்ச்
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp
கேரட் - 2
கொத்தமல்லி - ஒரு கையளவு
கரம் மசாலா - 3/4 tsp
மிளகாய் தூள் - 1/2 tsp
முந்திரி - 12
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
அரிசியை தனியாக வேக வைக்கவும். அரிசி உதிரியாக இருக்க வேண்டும்.
வெந்ததும் தட்டில் சாதத்தைக் கொட்டி காற்றாட விடவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய், இலை , சோம்பு சேர்த்து வதக்கவும், வதங்கியதும் வெங்காத்தை சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக்கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் கேரட்டை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அதோடு உப்பு சேர்த்துக் கிளறவும்.
தற்போது கரம் மசாலா, மிளகாய்ப் பொடி சேர்த்து வதக்கி பச்சை வாசனை போனதும் கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனைகள் போனதும் அடுப்பை அணைத்துவிடவும்.
தற்போது காற்றாட வைத்திருக்கும் சாதத்தை கேரட் கலவையில் கொட்டிக் கிளறவும்.
இறுதியாக முந்திரியை எண்ணெயில் வதக்கி அதில் போட்டுக் கிளறவும். சுவையான கேரட் சாதம் தயார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.