இன்றையக் குழந்தைகள் அதிகம் செலவிடும் நேரம் தொலைக்காட்சி முன்பும், கணினி முன்பும்தான். பெற்றோர்களும் குழந்தை வீட்டில் பாதுகாப்பாகத்தானே இருக்கிறது என்று நினைக்கின்றனர். ஆனால் அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் ஆரோக்கியத்தின் பாதுகாப்பை நசுக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை.
ஆம், 6 வயது வரை உள்ள குழந்தை ஒரு நாளைக்கு 2 மணி நேரம்தான் திரையைப் பார்க்க வேண்டும் என்கிறது ஆய்வு. 8 வயது முதல் 18 வயது வரை என்றால் 4 மணி நேரம் என ஆய்வுகள் மட்டுமன்றி மருத்துவர்களும் அறிவுறுத்துகின்றனர்.
ஆனால் குறிப்பிட்ட நேரத்தை மீறிய திரை நேரம் அவர்களை உடல் பருமன், ஆக்ரோஷ நடவடிக்கை, விபரீத குணாதிசயங்கள், கல்வியில் கவனமின்மை, இயல்பு வாழ்க்கையிலிருந்து கற்பனையில் வாழுதல் என இப்படி பல பிரச்னைகளால் பாதிக்கப்படுவார்கள்.
எனவே இதைத் தவிர்க்க சிறந்த வழி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் திரை நேரத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதுதான்.
அதற்கு முதலில் நீங்கள் உங்களுடைய செல்ஃபோன், டிவி, கணினி போன்ற பயன்பாட்டின் நேரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக டிவி, செல்ஃபோன் போன்றவற்றை அதிக நேரம் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகளை குழந்தைக்கு புரிய வைக்க வேண்டும். அவர்களை ஆரோக்கியமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும். அதற்கு நீங்களும் அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும்.
டிவியில் எல்லா சேனல்களையும் ஆக்டிவேட் செய்யாமல் குறிப்பிட்ட ஒன்று இரண்டு சேனல்களை மட்டும் ஆக்டிவேட் செய்ய வேண்டும். இதனால் அவர்களுக்கான அக்சஸ் லிமிட் குறைவாக இருக்கும். இவை தவிர்த்து புத்தகம் வாசித்தல், ஓவியம், போர்ட் கேம்ஸ் போன்ற விஷயங்களை ஊக்குவிக்கலாம்.
படிப்படியாக அவர்களின் திரை நேரத்தில் மாற்றம் ஏற்பட்ட பின் முற்றிலுமாக திரை நேரத்தை தவிர்க்க முயலுங்கள். அவர்களுடைய வாழ்க்கையில் நீங்கள் முழுமையாக உடன்பட வேண்டும். அவர்கள் பேசுவதை கேட்க வேண்டும். அவர்களின் செயல்களை ரசிக்க வேண்டும். நல்லெண்ணங்கள், நல்ல விஷயங்களை கற்றுக்கொடுங்கள். குடும்பம், உறவுகளின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுங்கள். ஒன்றாக அமர்ந்து சாப்பிடுதல், தூங்குவது, விளையாடுவது, வெளியே பைக் ரைட், கார் ரைட் செல்வது இப்படி அவர்களின் வாழக்கையோடு பெற்றோர்களாகிய நீங்கள் இணைந்திருந்தால் அவர்களுக்கு திரை நேரமே தேவைப்படாது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mobile Phone Users