மலேரியா தொற்றுகளைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

மலேரியா வந்த பிறகு வருத்தப்படுவதை விட வருமுன் காப்பதே சிறந்தது.

மலேரியா தொற்றுகளைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
கொசு
  • News18
  • Last Updated: August 20, 2019, 8:03 PM IST
  • Share this:
மலேரியா இல்லா உலகை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் மலேரியாவை ஒழிக்க முடியவில்லை என்பதே உண்மை. அதனால்தான் அரசாங்கமும் ஒவ்வொரு வருடமும் மலேரியா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மலேரியா வந்த பிறகு வருத்தப்படுவதை விட வருமுன் காப்பதே சிறந்தது.

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் : வீட்டிற்குள்ளும், வீட்டை சுற்றிலும் அடைப்புகளின்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டை தினமும் துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரைத் தேக்கி வைப்பதைச் சுத்தமாகத் தவிர்க்கவும். அப்படியே வைத்திருந்தாலும் அதை பாதுகாப்பாக மூடி வைய்யுங்கள்.

நோய் எதிர்ப்புத் சக்தியை அதிகரிக்கவும் : நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தாலே தொற்றுக் கிருமிகள் நம்மை நெருங்காது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். இது மலேரியா மட்டுமல்ல. எல்லா நோய்களுக்கும் எதிர்வினையாற்றும்.


சுகாதாரமற்றக் கடைகளில் உண்பதைத் தவிருங்கள் : அதிக அசுத்தம் நிறைந்த உணவுக் கடைகள். காற்று மாசுப்பாடு, தண்ணீர் மாசுப்பாடு உள்ள கடைகளில் உண்பதைத் தவிருங்கள். அவை நோய்த் தொற்றை எளிதில் பரப்பக் கூடியவை.கொசுவை விரட்டி அடியுங்கள் : கொசு நம்மை நெருங்காதவாறு, கொசுவத்திகள், லிக்குவிடுகள், கிரீம், ஸ்பிரே, கொசு வலை போன்றவைப் பயன்படுத்தலாம். இதனால் கொசு அழிவது மட்டுமன்றி நம்மையும் நெருங்காது.வீட்டை சுற்றி வாசனையைப் பரப்புங்கள் : கொசுக்கள், வாசனை நிறைந்த திரவங்கள், செடிகளை விரும்பாது. வீட்டில் வாசனை நிறைந்த செடிகளை வளருங்கள். குறிப்பாக எலுமிச்சை, ரோஸ்மெர்ரி, சாமந்தி , புதினா போன்றவற்றை முற்றிலும் கொசு விரும்பாது. இந்த வாசனைகளை வீட்டில் பரப்பினாலும் கொசு நெருங்காது.

வீட்டில் வலைகள் பொருத்துங்கள் : ஜன்னல், நுழைவு வாயில்களில் கொசு வலைகள் பொருத்தலாம். இதனால் கொசு வீட்டிற்குள் புகுவதைத் தடுக்கலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading