• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஒரே இரவில் கழிவறையை சுத்தப்படுத்த ஒரு பல் பூண்டு போதும்..எப்படி தெரியுமா..?

ஒரே இரவில் கழிவறையை சுத்தப்படுத்த ஒரு பல் பூண்டு போதும்..எப்படி தெரியுமா..?

காட்சி படம்

காட்சி படம்

நம் வீட்டு சமையலறையில் இருக்கும் ஒரு பொருள் கழிவறையில் ஒரே இரவில் மாயங்களை ஏற்படுத்தி கிருமிகளை அழிக்கும் என்று சொன்னால் நம்பமுடிகிறதா ?

  • Share this:
ஒருவர் இவ்வுலகில் வாழ்வதற்கு தேவையானது மூன்று விஷயம் தான் உணவு, உடை , இருப்பிடம். அதிலும் நாம் வாழும் வீடு என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும். வசிக்கும் வீடு வாடகை வீடோ, சொந்த வீடோ ஆனால் வீட்டை பராமரிக்கும் வேலை என்பது ஒன்று தான். அதிலும் வீட்டில் குழந்தைகள் இருந்தால் வீட்டை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

நம் வீட்டிலேயே மிகவும் அசுத்தமான இடம் என்றால் தான் அது கழிவறை தான். அதை சுத்தமாக வைத்துக்கொள்ள பல பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் நம் வீட்டு சமையலறையில் இருக்கும் ஒரு பொருள் கழிவறையில் ஒரே இரவில் மாயங்களை ஏற்படுத்தி கிருமிகளை அழிக்கும் என்று சொன்னால் நம்பமுடிகிறதா ?

ஆம். அது தான் பூண்டு. ஒரு பல் பூண்டு கழிவறையை சுத்தப்படுத்த உதவும்.பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட பூண்டில் அற்புதமான சுத்தப்படுத்தும் தன்மையும் இருக்கிறது.



பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் தான் பூண்டிற்கு தனித்துவமான நறுமணத்தை வழங்குகிறது. மேலும் இந்த பொருள் தான் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அண்ட விடாமல் தடுக்கிறது.இப்போது பூண்டை வைத்து கழிவறையை  எப்படி சுத்தப்படுத்துவது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

பூண்டை வைத்து கழிவறையை சுத்தம் செய்ய இரண்டு வழிகள் இதோ..

1. நீங்கள் இரவு தூங்குவதற்கு முன் ஒரு பல் பூண்டை நன்கு தட்டி கழிவறையில் போட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் ஒரு முறை தேய்த்து கழுவினால், கழிவறையில் உள்ள துர்நாற்றம் நீங்குவதோடு கிருமிகளும் அழிந்துவிடும்.

2.ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நீரானது நன்கு கொதித்த பின்பு இரண்டு பல் பூண்டுகளை பொடியாக நறுக்கி போட்டு நன்கு கொதித்த பின்பு அடுப்பை அணைக்க வேண்டும்.

Also Read  : வீட்டில் புதிய தோட்டம் வைக்க போறீங்களா? அப்ப வாஸ்து படி செய்யுங்க வீட்டில் செல்வம் பெருகும்..

பின்பு 15 நிமிடங்கள் கழித்து அந்நீரை கழிவறையில் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து மறு நாள் காலையில் தேய்த்து கழுவ வேண்டும்.

கழிவறையில் இருக்கும் துர்நாற்றத்தில் குடியிருப்பது பாக்டீரியாக்கள் தான். அதை அழிக்க பூண்டு மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் உங்கள் கழிவறையில் இருக்கும் கிருமிகளை அழிக்க இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: