Home /News /lifestyle /

இயர்ஃபோன், ஏர் பாட்ஸ்-களை சுத்தம் செய்யும் பழக்கம் உண்டா..? இல்லையெனில் இதுதான் நடக்கும்..!

இயர்ஃபோன், ஏர் பாட்ஸ்-களை சுத்தம் செய்யும் பழக்கம் உண்டா..? இல்லையெனில் இதுதான் நடக்கும்..!

இயர் ஃபோன்

இயர் ஃபோன்

இயர்ஃபோன், ஏர் பாட்ஸில் படிந்திருக்கும் அழுக்கு, தூசிகளை கவனிக்காமல் காதுகளில் மாட்டினால் அவை நேரடியாக காதுகளுக்குள் சென்று அடைப்பை ஏற்படுத்தலாம்.

  • News18
  • Last Updated :
    பயன்படுத்தும் செல்ஃபோனைதான் பத்திரமாக துடைப்பது, கீரல் விழாமல் இருக்க ஸ்டிக்கர், உறை என பாதுகாப்பாக வைத்துக்கொள்வார்கள். ஆனால் அதே அளவுப் பாதுகாப்பு அதன் அக்ஸசரீஸுகளுக்கும் அவசியம் என்பது தெரியுமா..?

    குறிப்பாக செல்ஃபோன் பயன்படுத்தினால் கட்டாயம் இயர்ஃபோன்களையும் பயன்படுத்துவோம். இன்று பலரும் இசையின் தரத்தை உணர அதிக விலை கொடுத்தே இயர்ஃபோன், ஏர் பாட்ஸ் வாங்குகின்றனர். ஆனால் அதை சுத்தம் செய்ய ஏனோ கவனம் செலுத்தத் தவறுகிறோம்.

    எதுவுமே யோசிக்காமல் சட்டென காதுகளுக்குள் மாட்டுகிறோம். காதுக்குள் நேரடியாக மாட்டிக்கொள்ளும் இவற்றால் காதுகளில் தொற்று ஏற்படலாம். அதில் படிந்திருக்கும் அழுக்கு, தூசிகளை கவனிக்காமல் காதுகளில் மாட்டினால் அவை நேரடியாக காதுகளுக்குள் சென்று அடைப்பை ஏற்படுத்தலாம். காதுகளுக்குள் தொற்றுகளை உருவாக்கலாம்.

    ஏற்கனவே இயர்ஃபோன் அதிகப்படியான ஒலி காதுகளை பாதிக்கும் என்று மருத்துவர்கள் , ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதில் இந்தப் பிரச்சனையையும் விலை கொடுத்து வாங்குவது அவசியம்தானா..? இயர்ஃபோன், ஹெட்செட் பயன்பாட்டைத் தவிர்க்க முடியவில்லை என்றாலும் அதை சுத்தம் செய்து தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

    சுத்தம் செய்வது எப்படி..?

    மைக்ரோஃபைபர் துணி ( microfiber cloth) பயன்படுத்தி ஏர் பாட்ஸை துடைக்கலாம். துணியை லேசாக தண்ணீரில் நனைத்து அதை மெதுவாக சுற்றிலும் துடைத்து ஒரங்களில் ஒடியிருக்கும் அழுகுக்களை எடுங்கள். இந்த துணி அமேசானில் கிடைக்கிறது. துடைத்தபிறகு அவற்றை நன்குக் காய வையுங்கள்.

    அதேபோல் காதுகளில் உள்ள அழுக்குகளை எடுக்கப் பயன்படும் பட்ஸுகளைப் பயன்படுத்தியும் சுற்றிலும் உள்ள அழுக்குகளை துடைத்து எடுக்கலாம். வராமல் ஒட்டியிருக்கும் அழுக்குகளை பல் குத்தும் குச்சிகளைப் பயன்படுத்தி எடுக்கலாம். குச்சி பயன்படுத்தும்போது கவனம் மிக மிக அவசியம். லாவகமாக குச்சியை பயன்படுத்தி எடுக்க வேண்டும். இல்லையெனில் ஸ்பீக்கரில் சேதாரத்தை ஏற்படுத்தும் அல்லது ஸ்பீக்கரை மூடியுள்ள ஃபில்டரில் ஓட்டை போட்டுவிடும். பின் ஸ்பீக்கரில் தூசிகள் படிந்து சத்தம் வராது.



    பல் துளக்கும் பிரஷ் பயன்படுத்தியும் ஏர் பாட்ஸுகளை சுத்தம் செய்யலாம். பிரஸ் கொண்டு தேய்க்கும்போதும் கவனமாக செயல்படுவது அவசியம்.

    இணையத்திலேயே ஏர் பாட்ஸ் க்ளீனிங் கிட் விற்பனை செய்யப்படுகிறது. அதில் க்ளீனிங் பிரெஷ், வாட்டர் ஸ்பிரே போன்றவை கொடுக்கப்படுகின்றன. அவற்றை வாங்கியும் உங்கள் விலை மதிப்பற்ற காதுகளை துளைக்கும் ஏர் பாட்ஸ், ஹெட் செட்டுகளை சுத்தம் செய்யுங்கள்.

    தண்ணீர், டீ கப்பில் ஹெட் செட், ஏர் பாட்ஸ் விழுந்துவிட்டால் உடனே பட்ஸ் பயப்படுத்தி நன்கு துடைத்துவிடுங்கள். பின் நன்கு வெயில் படும்படி சிறிது நேரம் காய வைத்தால் பிரச்சனை இல்லை.

     

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி