இந்தியா பூஜியம் என்ற நாட்களை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது என்பதை பலர் சொல்ல கேட்டிருப்போம். அதன் அர்த்தம் முற்றிலும் தண்ணீரே இல்லாத நாளை சந்திக்கப் போகிறோம் என்பதுதான். ஆனால் அதைப் பற்றி முற்றிலும் கவலையில்லாமல் இருக்கிறோம் எனில் நிச்சயம் அந்த சூழ்நிலையை நாம் சந்திக்க நேரிடும்.
இந்தியாவில் 15 க்கும் மேற்பட்ட நகரங்கள் தண்ணீர் பஞ்சத்தை அடைந்துவிட்டன. தற்போது அந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கப் போகும் நாட்களை நோக்கியே நகர்ந்துகொண்டிருக்கிறோம். இந்த நிலைமையில் ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் எண்ணி எண்ணி பயன்படுத்தும் காலம் வரும். ஒவ்வொரு நபர் பயன்படுத்தும் தண்ணீர் சொட்டுகளும் கணக்கில் கொள்ளும் நாள் வரும்.
நிச்சயம் நாம் தண்ணீர் பயன்படுத்துவதில் மிகுந்த அக்கறை கொள்வது அவசியம். அது நம் தினசரி வாழ்க்கை பயன்பாட்டின் பழக்கமாக மாற வேண்டும். நாம் பயன்படுத்தும் தண்ணீர் செலவு பற்றி கட்டாயம் தெரிந்துவைத்துக்கொள்வது அவசியம். அந்த வகையில் தண்ணீரை எப்படியெல்லாம் சேமிக்கலாம். சிக்கனம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
திட்டமிட்ட பயன்பாடு நீண்ட கால சேமிப்பு : கடந்த சில மாதங்களில் வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவதன் முக்கியத்துவத்தையும் ஆரோக்கியத்தையும் உணர்ந்திருப்போம். உணவு முறைகளில் அதிக கவனம் செலுத்தி வெளிப்புற உணவுகளை தவிர்க்க ஆரம்பித்தோம். எனவே இதை சரியான வாய்ப்பாக பயன்படுத்தி நம் உணவுப் பழக்கத்தை மாற்றி அமைப்பதற்கான நேரம் இது. ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு மாற வேண்டும்.
இந்த மாற்றம் நம் உடல் நலத்திற்கு மட்டுமல்ல தண்ணீர் பற்றாக்குறையையும் தீர்க்க நல்ல மாற்றம். அதாவது சில இறைச்சி மற்றும் உணவு தானியங்களை வளர்க்க அதிக நீர் தேவைப்படுகிறது. இந்த அதீத தேவையை நிறுத்தினால் தண்ணீர் செலவும் குறையும். அதேபோல் சமைக்கும் உணவையும் அளவாக சமைக்க வேண்டும். இதனால் உணவை வீணாகக் கொட்டும் செயல்களையும் தவிர்க்கலாம்.
குறைந்த நுகர்வு அதிக தண்ணீர் சேமிப்புக்கு வழிவகை : நாம் எப்போதும் எது வாங்கினாலும் ஒரு ஜோடி ஜீன்ஸ் பேண்ட், ஷூ என்றுதான் வாங்குவோம். ஆனால் அதிலும் தண்ணீர் உற்பத்தி அதிகம் உறிஞ்சப்படுகிறது. போக்குவரத்து செலவு, உற்பத்தி திறன் அதிகரிக்கிறது. நீங்கள் ஆன்லைனில் இருந்த இடத்திலிருந்து ஆர்டர் செய்யும் ஒரு ஜோடி ஜீன்ஸ் பேண்டிற்கு 10,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. உங்களுக்கு ஜீன்ஸ் பேண்ட் அவசியம்தான் என்றாலும் அதேசமயம் கண்ணுக்குத் தெரியாமல் செலவாகும் தண்ணீரும் வாழ்வாதாரத்திற்கு அவசியம். எனவே தேவைக்கு அதிகமாக ஆடைகளை குறைத்துக்கொள்வதால் பணமும் மிச்சம், தண்ணீரும் மிச்சம்.
வீட்டில் தேவை மாற்றம் : வீட்டில் இருந்தாலே நாம் எப்போதும் ஆற்றலுடன் குஷியாகிவிடுவோம். ஆனால் வீட்டில் இருக்கும் அதேசமயம் சில பொறுப்புகளையும் கடைபிடிப்பது அவசியம். அதாவது தண்ணீர் மின்சார உற்பத்திக்கான முக்கிய தேவையாக இருக்கிறது. எனவே வீட்டில் இருந்தபடியே எளிய முறையில் தண்ணீரை சேமிக்கலாம். உங்கள் ஃபோன் சார்ஜ் போடவில்லையா பிளக்கை பிடுங்கிவிட்டு எடுத்து வையுங்கள். ஹாலில் அமர்ந்திருக்கிறீர்களா..? கிட்சன், பெட்ரூமின் எரியும் லைட் , ஃபேன்களை அணைத்து வையுங்கள். வெளியூர் பயணம் செல்கிறீர்களா..? மெயின் சுச்சை முற்றிலும் ஷட் டவுன் செய்யுங்கள். இந்த சின்ன சின்ன பழக்கங்கள் உங்களுடைய மின்சார செலவையும் குறைக்கும். தண்ணீர் தேவையையும் குறைக்கும்.
துணிகளை துவைப்பதில் கவனம் : நீங்கள் வாஷிங் மினிஷைப் பயன்படுத்துபவரெனில் ஒரு முறை துணி போடுவதால் எவ்வளவு தண்ணீர் செலவாகிறது என்பது தெரியுமா..? கிட்டத்தட்ட 50-70 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் நீங்கள் அதில் போடும் துணிக்கு இவ்வளவு தண்ணீர் என்பது அதிகம். இருப்பினும் இன்றையக் காலகட்டத்தில் கைகளில் துணி துவைப்பது சாத்தியமற்றது. ஆனாலும் ஒரு காரியம் நம்மால் செய்ய முடியும். அதாவது இரண்டு மூன்று துணிகளுக்காக மிஷினை பயன்படுத்தாமல் நிறைந்த லோட் போடுமளவு துணி சேர்ந்தவுடன் மிஷினை பயன்படுத்துங்கள். இந்த ஒரு பழக்கமே பல லிட்டர் தண்ணீரை சேமிக்க வழிவகுக்கும்.
5 நிமிடம் பெரிய சேமிப்பு : நாம் குளிக்கும் பழக்கத்தை மாற்றிக் கொண்டாலே தண்ணீர் சேமிப்பிற்கான சிறந்த தொடக்கம். அதாவது ஒரு முறை நீங்கள் ஷவரில் குளிப்பதால் 60 லிட்டர் தண்ணீர் வீணாகிறது. எனவே ஷவரில் குளிக்கும் நேரத்தை 5 நிமிடமாக மாற்றிக்கொள்வது தண்ணீர் சேமிப்பிற்கான சிறந்த முயற்சி. இதைவிட சிறந்த வழி பக்கெட்டில் பிடித்துக் குளிப்பது. இதனால் குறைந்த அளவில் கவனமுடன் தண்ணீரை செலவழிப்போம். அதேபோல் சோப்பு, ஷாம்பு போடும் சமயத்தின் ஷவரை அணைத்துவிடுவது நல்லது. இந்த பழக்கங்களை பின்பற்றினால் தண்ணீர் சேமிப்பிற்கு உங்களுடைய பங்களிப்பு அதிகமாக இருக்கும்.
மேலே குறிப்பிட்டது போன்ற சில சின்ன சின்ன மாற்றங்கள் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பழக்கமாக மாற வேண்டும் அவ்வாறு மாறினால் இந்த உலகம் முழுவதிற்கும் போதுமான தண்ணீர் வளத்தைப் பெறலாம். எனவேதான் இந்த முயற்சியை நோக்கிய பாதையை நியூஸ்18 மிஷன் பாணி குழுவும் , ஹார்பிக் இந்தியாவும் முன்னெடுத்துள்ளோம். அதோடு புகழ்பெற்ற ஆளுமைகளுடன் 8 மணி நேர ஒளிபரப்பாக இருக்கும் மிஷன் பானி வாட்டர்டானிலும் சேருங்கள். அங்கு அனைவரும் இந்த மாற்றத்திற்கான உறுதிமொழிகளை ஏற்போம். இந்தியா நீர் பாதுகாப்பிற்கான ஆதாரமாக மாற உதவுவோம்!
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mission Paani, Save Water, Water Crisis