இந்த லாக்டவுன் சமயத்தில் ரம்ஜானை இப்படி கொண்டாடலாமே..!
புத்தாடை உடுத்துவதும் பாசிடிவ் எண்ணங்களுக்கு வழிவகுக்கும். இத்தனை நாள் வீட்டில் இருந்ததால் சாதாரண உடைகளை அணிந்திருப்பீர்கள்.

ரம்ஜான்
- News18 Tamil
- Last Updated: May 24, 2020, 4:17 PM IST
ரம்ஜான் என்பது முஸ்லீம்களின் மிக முக்கிய பண்டிகை. ஆனால் இந்த கொரோனா தொற்று, ஊரடங்கு போன்ற விஷயங்கள் ரம்ஜான் பண்டிகையை கொஞ்சம் குறைத்துக்கொண்டுள்ளது எனலாம். ஊரெங்கும் களைகட்டும் விஷயங்கள் சற்று அடங்கியே உள்ளன.
இருப்பினும் இப்படி உள்ளதே என நினைக்காமல் இந்த சூழலில் உங்களின் மன மகிழ்ச்சிக்கு இதுபோன்ற பண்டிகைகள் அவசியம் என நினைத்துக்கொள்ளுங்கள். இது உங்களை சற்று ஆறுதல் படுத்தலாம். இளைப்பாற வைக்கலாம். எனவே இந்த லாக்டவுனிலும் ரம்ஜானை எப்படி கொண்டாடலாம் என்று பார்க்கலாம்.
வீட்டில் தொழுகை : பெருங்கூட்டம் கூட்டி நடக்கும் தொழுகைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால் அதை நினைத்து வருந்த வேண்டாம். இது மக்களின் நலனுக்காக என நினைத்து வீட்டிலேயே சிறப்பான தொழுகைக்கு திட்டமிடுங்கள். சிறப்பான உணவு : உணவு சமைப்பதில் கட்டுப்பாடுகள் வேண்டாம். எப்படி சமைப்பீர்களோ அப்படியே இந்த வருடமும் மதிய உணவை சிறப்பாக ஜமாய்த்துவிடுங்கள்.
அதேபோல் ரம்ஜானின் முக்கிய சிறப்பு உறவினர்கள் ஒன்று கூடி சமைத்து சாப்பிடுவதுதான். அதோடு வாழ்த்து தெரிவிக்க பிரியாணி கொடுத்து இஃப்தார் விருந்து வைப்பார்கள். அது தற்போது முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். அதற்கும் வழி உண்டு. பல ரெஸ்டாரண்டுகள் இஃப்தார் உணவுகளை அளிக்கின்றன. எனவே ஆன்லைனில் ஆர்டர் செய்து உறவிர்கள் வீட்டிற்கு அனுப்பி வையுங்கள்.
வீட்டை அலங்கரியுங்கள் : வீடு களையிழக்காமல் பாசிடிவ் எண்ணங்களை வளர்க்க வீட்டை பண்டிகை மனநிலைக்கு ஏற்ப அலங்கரியுங்கள்.
உதவலாம் : மன நிறைவான விஷயங்கள் செய்ய நினைத்தால் கொரோனா உதவிக்கு பண உதவி செய்யலாம். ஆன்லைனிலேயே அனுப்பி வைக்கலாம் அல்லது உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு அளிக்கலாம். இந்த விஷயம் உங்களை மகிழ்ச்சியாக்கலாம்.
புத்தாடை : புத்தாடை உடுத்துவதும் பாசிடிவ் எண்ணங்களுக்கு வழிவகுக்கும். இத்தனை நாள் வீட்டில் இருந்ததால் சாதாரண உடைகளை அணிந்திருப்பீர்கள். எனவே புது உடைகளை அணிவதில் கட்டுப்பாடு இல்லாமல் நல்ல உடை அணிந்து உங்களை அலங்காரம் செய்துகொள்ளுங்கள்.
சமூக இடைவெளி என்பது பிரச்னையில்லை : உறவினர்களை வாழ்த்த கைகுளுக்கி , கட்டியணைத்து சொல்லமுடியவில்லை என்றாலும் முகச்சிரிப்புடன் வாழ்த்து தெரிவிக்கலாம். அதோடு வாட்ஸ் அப், ஃபேஸ்புக், வீடியோ கால் மூலமாகவும் உறவினர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
பார்க்க :
இருப்பினும் இப்படி உள்ளதே என நினைக்காமல் இந்த சூழலில் உங்களின் மன மகிழ்ச்சிக்கு இதுபோன்ற பண்டிகைகள் அவசியம் என நினைத்துக்கொள்ளுங்கள். இது உங்களை சற்று ஆறுதல் படுத்தலாம். இளைப்பாற வைக்கலாம். எனவே இந்த லாக்டவுனிலும் ரம்ஜானை எப்படி கொண்டாடலாம் என்று பார்க்கலாம்.
வீட்டில் தொழுகை : பெருங்கூட்டம் கூட்டி நடக்கும் தொழுகைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால் அதை நினைத்து வருந்த வேண்டாம். இது மக்களின் நலனுக்காக என நினைத்து வீட்டிலேயே சிறப்பான தொழுகைக்கு திட்டமிடுங்கள்.
அதேபோல் ரம்ஜானின் முக்கிய சிறப்பு உறவினர்கள் ஒன்று கூடி சமைத்து சாப்பிடுவதுதான். அதோடு வாழ்த்து தெரிவிக்க பிரியாணி கொடுத்து இஃப்தார் விருந்து வைப்பார்கள். அது தற்போது முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். அதற்கும் வழி உண்டு. பல ரெஸ்டாரண்டுகள் இஃப்தார் உணவுகளை அளிக்கின்றன. எனவே ஆன்லைனில் ஆர்டர் செய்து உறவிர்கள் வீட்டிற்கு அனுப்பி வையுங்கள்.
வீட்டை அலங்கரியுங்கள் : வீடு களையிழக்காமல் பாசிடிவ் எண்ணங்களை வளர்க்க வீட்டை பண்டிகை மனநிலைக்கு ஏற்ப அலங்கரியுங்கள்.

உதவலாம் : மன நிறைவான விஷயங்கள் செய்ய நினைத்தால் கொரோனா உதவிக்கு பண உதவி செய்யலாம். ஆன்லைனிலேயே அனுப்பி வைக்கலாம் அல்லது உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு அளிக்கலாம். இந்த விஷயம் உங்களை மகிழ்ச்சியாக்கலாம்.
புத்தாடை : புத்தாடை உடுத்துவதும் பாசிடிவ் எண்ணங்களுக்கு வழிவகுக்கும். இத்தனை நாள் வீட்டில் இருந்ததால் சாதாரண உடைகளை அணிந்திருப்பீர்கள். எனவே புது உடைகளை அணிவதில் கட்டுப்பாடு இல்லாமல் நல்ல உடை அணிந்து உங்களை அலங்காரம் செய்துகொள்ளுங்கள்.
சமூக இடைவெளி என்பது பிரச்னையில்லை : உறவினர்களை வாழ்த்த கைகுளுக்கி , கட்டியணைத்து சொல்லமுடியவில்லை என்றாலும் முகச்சிரிப்புடன் வாழ்த்து தெரிவிக்கலாம். அதோடு வாட்ஸ் அப், ஃபேஸ்புக், வீடியோ கால் மூலமாகவும் உறவினர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
பார்க்க :