குழந்தைகளுக்கு பயன்படுத்த பாதுகாப்பான டயப்பர்களை தேர்வு செய்வது எப்படி?

news18
Updated: June 7, 2019, 2:42 PM IST
குழந்தைகளுக்கு பயன்படுத்த பாதுகாப்பான டயப்பர்களை தேர்வு செய்வது எப்படி?
news18
Updated: June 7, 2019, 2:42 PM IST
குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களுக்கு ஒவ்வொரு மாதமும் டயப்பர் வாங்கவும் கட்டாயம் ஒரு தொகையை ஒதுக்க வேண்டும். குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது என்பதால் குழந்தை எப்போதும் அணிந்திருக்கும் டயப்பரை கவனத்துடனே தேர்வு செய்ய வேண்டும். இல்லையெனில் அரிப்பு, தோல் அலர்ஜி என சரும பாதிப்புகள் வரும். அதை உங்கள் பாசத்திற்குரிய குழந்தையால் தாங்கிக்கொள்ளவும் முடியாது. இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க சரியான டயப்பரைத் தேர்வு செய்வது அவசியம்.






பிராண்ட் தேர்வு : டயப்பரைத் தேர்வு செய்யும்முன் நீங்கள் துணியால் செய்யப்பட்ட டயப்பர் வாங்கப்போகிறீர்களா அல்லது தூக்கிவீசக் கூடிய டயப்பர் வாங்கப்போகிறீர்களா என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள். இரண்டிலும் இருக்கும் நிறை குறைகளைத் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ப தேர்வு செய்யுங்கள். பின் அதன் விலையையும் தெரிந்துகொண்டு அது உங்கள் சேமிப்பிற்கு ஏற்றதா என்பதையும் கவனியுங்கள். முடிந்தால் உங்கள் மருத்துவரிடமும் ஆலோசனை பெறுங்கள்.



Loading...



உறியும் தன்மை : உங்கள் குழந்தையின் சருமத்தை பாதிக்காத வகையில் அந்த டயப்பரின் தயாரிப்பு மற்றும் துணி, பஞ்சு இருக்க வேண்டும். காற்று உள்ளே செல்லும் வகையில் இருந்தால் சருமம் பாதிக்காது. காற்றை உள்ளே அனுமதிக்காத டயப்பரைத் தவிர்ப்பது நல்லது. சருமத்தில் புண், அரிப்பு, தழும்புகள், அடையாளங்கள் ஏற்படுகிறதா என்பதை கவனிக்கவும். அவ்வாறு தென்பட்டால் உடனே அந்த பிராண்டைத் தவிர்ப்பது நல்லது.




எடைக்கு ஏற்ற அளவு : டயப்பர் வாங்கும்போது குழந்தையின் எடை மற்றும் வளர்ச்சியையும் கவனத்தில்கொள்ள வேண்டும். எடைக்கு ஏற்ப டயப்பரின் அளவு மாறுபடும். இல்லையெனில் அது குழந்தைக்கு அசௌகரியமாக இருக்கும். கழிக்கும் சிறுநீரும் வெளியேறும். ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை குழந்தையின் எடையைக் கவனித்து அதற்கு ஏற்ப டயப்பர் அளவை வாங்கவும். எனவே பணம் இருக்கிறதென்று மொத்தமாக ஸ்டாக்கில் சேமித்து வைக்காதீர்கள். அது வீண் செலவுதான்.

 



கழிவு நீக்கம்: குழந்தை ஒரு நாளைக்கு, ஒரு மணி நேரத்திற்கு எத்தனை முறை கழிவை நீக்குகிறது என்பதை கவனித்து அதற்கு ஏற்ப டயப்பரை தேர்வு செய்யுங்கள். அதன் தயாரிப்பு மற்றும் உறிஞ்சும் தன்மை அதிகமாக இருக்க வேண்டும்.


தினமும் துணி துவைக்கும் வசதி, பழக்கம் இருந்தால் துணியால் தயாரிக்கப்பட்ட டயப்பர் சிறந்தது. இல்லையெனில் ஒருமுறை பயன்படுத்தும் டயப்பர் வாங்கலாம்.








சருமத்தின் மென்மை : உங்கள் குழந்தைக்கு ஏதேனும் தோல் வியாதி, அலர்ஜி இருந்தால் மருத்துவரின் பரிந்துரைப்படி டயப்பர் வாங்குங்கள் அல்லது எந்த பிராண்ட், எந்த வகை டயப்பர் பயன்படுத்தினாலும் குழந்தைக்கு அலர்ஜி வருகிறதெனில் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம் அல்லது மருத்துவரின் ஆலோசனை பெறலாம்.

 

இதையும் படிக்க :

குழந்தைக்கு டயப்பர் அணிவதால் சரும அலர்ஜி ஏற்படுகிறதா... தீர்வு இதோ..!



பெற்றோர்களே, குழந்தையின் ஆரோக்கியத்தில் உஷார்!




லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: June 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...