தைரியத்தை இழக்கும்போது இந்த விஷயங்களை செய்யலாம்: பிக்பாஸ் சாக்‌ஷியின் லாக்டவுன் அட்வைஸ்..!

கொரோனா ஊரடங்கை இப்படித்தான் சமாளிப்பதாகவும் அதன் மூலம் உணர்த்தியுள்ளார்.

தைரியத்தை இழக்கும்போது இந்த விஷயங்களை செய்யலாம்: பிக்பாஸ் சாக்‌ஷியின் லாக்டவுன் அட்வைஸ்..!
சாக்‌ஷி அகர்வால்
  • Share this:
தான் ஒரு பிரபல மாடலாக இருந்தாலும் பிக் பாஸிற்குப்
பிறகு புகழ் வெளிச்சத்தை பெற்ற சாக்‌ஷி தற்போது
சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். தினம் ஏதாவதொரு ஹெல்த் டிப்ஸ், ஒர்க் அவுட் என ரசிகர்களுக்கு அறிவுரை வழங்குவார்.


அந்த வகையில் தற்போது கொரோனா தொற்றை தடுக்க 144
போடப்பட்டுள்ளதால் அனைவரும் வீட்டில் இருக்கும் இந்த
நேரத்தில் தங்களை தைரியமாக வைத்துக்கொள்ள என்னசெய்யலாம் என டிப்ஸ் அளித்துள்ளார்.

தாமும் வீட்டில் முடங்கியிருக்கும் இந்த சமயத்தில்
கொரோனா ஊரடங்கை இப்படித்தான் சமாளிப்பதாகவும் அதன் மூலம் உணர்த்தியுள்ளார்.

அதாவது பிரபல டச்சு ஓவியர் வின்செண்ட் வான் கோவின்
பொன்மொழியான ”புதிதாக எதையாவது முயற்சிக்கும்
தைரியம் உங்களுக்கு இல்லையெனில் உங்கள் வாழ்க்கை
என்னவாக இருக்கும் ? என்னும் வாக்கியத்தை கேப்ஷனாக
எழுதி அதற்கு கையில் பெயிண்ட் பிரெஷ்
பிடித்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
மேலும் நோக்கினால் வீட்டிற்கு அலங்காரப் பொருட்களை
செய்து வீட்டை அலங்கரித்துக்கொண்டிருக்கிறார். இதன்
மூலமாக அவர் வீட்டிலேயே இருந்தாலும் தைரியத்தை
இழக்காமல் இருக்க இப்படி ஏதாவது செய்யுங்கள் எனக்
கூறியுள்ளார்.

சாக்‌ஷி கூறுவதைப் போல் என்ன ஆகுமோ என்ற பதட்டத்தை
விட்டுவிட்டு இந்நேரத்தை புதிதாக எதையாவது
கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாகப்
பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இந்த நேரத்தில் சமையல் பிடிக்கும் என்றால் சமைக்க
கற்றுக்கொள்ளலாம், வீட்டை அலங்கரிக்கலாம், தற்போது
ஆன்லைனிலேயே வகுப்புகள் எடுப்பதால் ஏதேனும் புதிதாகப்
படிக்கலாம் . ஃபோட்டோகிராஃபி, பெயிண்டிங், தையற்கலை
இப்படி ஆன்லைனிலேயே பல விஷயங்களைக்
கற்றுக்கொள்ளலாம். உலகம் அமர்ந்த இடத்திலேயே விரிந்து
கிடக்கிறது என்பதை மறவாதீர்கள்.

பார்க்க :
First published: April 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading