தும் ஹி ஹோ.. அப் தும் ஹி ஹோ.. என ஹிண்ட் கொடுத்ததும் நம்ம ஊர் இளைஞர்கள் சட்டென கண்டுபிடித்துவிடுவார்கள் அவர்தான் ஷ்ரத்தா கபூர் என்று.. ஆம் பாலிவுட்டின் நம்பிக்கை நாயகி ஷ்ரதா கபூர் தன் ரசிகர்களுக்காக சமூக வலைதளத்தில் அயராது பாடுபடுபவர். எந்த உடை அணிந்தாலும் உடனே போஸ்ட் போடுவார். அறிவுரை, ஆலோசனைகளுக்கும் பஞ்சமிருக்காது.
அந்த வகையில் தற்போது கொரோனோவால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளதால் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல முடியவில்லை. இருந்தாலும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு வீட்டிலிருந்தே எப்படி உடற்பயிற்சி செய்யலாம் என தன் வீட்டு மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.