என்னதான் குளித்து ஃபிரெஷாக இருந்தாலும் வியர்வை நீர் துர்நாற்றத்தை வீசும். இதற்காக ஃபர்பியூம்கள் இருந்தாலும் அவை தற்காலிக தீர்வே அன்றி நிரந்தரத் தீர்வு அல்ல. எனவே துர்நாற்றத்தை கட்டுப்படுத்த வியர்வையைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு கீழே உள்ள வீட்டுக்குறிப்புகளை செய்து வந்தால் பலன் கிடைக்கலாம்.
ஆப்பிள் சிடர் வினிகர் : ஆப்பிள் சிடர் வினிகரை பஞ்சில் நனைத்து அக்குள்களில் காலை மாலை என இரு வேளையும் தடவி வந்தால் துர்நாற்றம் வீசாது.
எலுமிச்சை: எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா இரண்டையும் ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கலக்கி, அக்குள்களில் தடவுங்கள். 2, 3 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், துர்நாற்றத் தொல்லை குறையும்.
உருளைக் கிழங்கு : உருளைக் கிழங்கை ஸ்லைஸாக நறுக்கி அதை அக்குள்களில் நன்றாக தேய்த்தால் துர்நாற்றப் பிரச்னை குறையும்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.