Home /News /lifestyle /

Pongal 2022 : நாடு முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் பொங்கல் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

Pongal 2022 : நாடு முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் பொங்கல் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

பொங்கல்

பொங்கல்

Pongal Celebration In Other States : மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மகர சாந்தி கொண்டாடப்படுகிறது.

பொங்கல் கொண்டாட்டம் தமிழர்களின் பாரம்பரியமான கொண்டாட்டங்களில் மிகவும் முக்கியமானதாகும். இது உழவுத் தொழில், கால்நடை மற்றும் இயற்கைக்கு நன்றியும் மரியாதையும் செலுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. போகி முதல் காணும் பொங்கல் வரை நான்கு நாட்களுக்கு கொண்டாப்படும் பொங்கல் பண்டிகை, இந்தியா முழுவதுமே வெவ்வேறு மாநிலத்திலும் அந்தந்த பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டு வருகிறது.

தென்னிந்தியாவில் பொங்கல் - தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா :

தென்னிந்தியாவில் தைப்பொங்கல் கொண்டாட்டம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் நாட்டில் நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல், மற்ற மாநிலங்களில் மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் முதல் பண்டிகையான போகிப் பண்டிகை அன்று, வீட்டை சுத்தம் செய்து பழைய பொருட்களை எல்லாம் அப்புறப்படுத்துவது வழக்கம். பழையன கழிதல் புதியன புகுதல் என்று புதிய வாழ்க்கையை, மாற்றங்களை வரவேற்கும் விதமாக பழைய பொருட்களை எல்லாம் அப்புறப்படுத்துவோம்.

இரண்டாவது நாள் பொங்கல் அன்று வீடு முழுவதும் அலங்கரித்து, வண்ண வண்ண கோலங்கள் போட்டு புதிதாக அறுவடை செய்த அரிசி, புதிய பானை, வெல்லம் ஆகியவற்றை வைத்து பொங்கல் பொங்கி இயற்கையை இறைவனாக வழிபாடு செய்வது வழக்கம்.



ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன மாட்டுப்பொங்கல் அன்று, உழவுத்தொழிலுக்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாடுகளை, கால்நடைகளை குளிப்பாட்டி, அலங்கரித்துக் கொண்டாடுவது வழக்கம்.

நான்காவது நாள் காணும் பொங்கல். தமிழ்நாட்டில் இது மிகவும் பிரசித்தி பெற்றது. காணும் பொங்கல் என்பது ஊர்சுற்றி பார்ப்பதைக் குறிக்கிறது. குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவதை குறிக்கிறது.

ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும், பொங்கல் இதே முறையில் கொண்டாடப்படுகின்றது.



மகர சங்கராந்தி - மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் :

தென்னிந்தியாவில் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுவது போல வட இந்தியாவில் இரண்டு நாட்கள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மகர சங்கராந்தி என்று இந்த பொங்கல் கொண்டாட்டம் வட இந்தியா மற்றும் இந்தியாவின் வேறு மாநிலங்களில் அழைக்கப்படுகிறது.

also read : பொங்கலுக்கு இந்த ட்ரேஸ் போடலாமே.. வித்தியாசமாக ட்ரை பண்ணுங்க..

மகர சங்கராந்தி என்றால் என்ன?

மகரம் என்பது தமிழ் மாதங்களின் தை மாதத்தை குறிக்கும். தை மாதத்தில் மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும். தை மாதத்தில் முதல் நாள் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போது, தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதையே மகர சங்கராந்தி என்ற பெயரில் வேறு மாநிலங்களிலும் கொண்டாடுகிறார்கள்.



மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மகர சாந்தி கொண்டாடப்படுகிறது. மகர சங்கராந்தி மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்படுகிறது. குளிர்காலத்தில் அறுவடை செய்யப்படும் கரும்பிலிருந்து எடுக்கப்படும் புதிய வெல்லத்தைப் பயன்படுத்தி பல்வேறு இனிப்புகளை செய்து கொண்டாடுவார்கள்.

குஜராத்தில் பட்டம் விடும் திருவிழா மகர சங்கராந்தியின் ஒரு அங்கமாக இருக்கிறது. குழந்தைகள் முதல், பட்டம் விடுவதில் தேர்ச்சி பெற்ற வல்லுனர்கள் வரை பலரும் இந்த திருவிழாவில் கலந்து கொள்வார்கள். பல அமைப்புகள் பட்டம் விடும் போட்டியயை நடத்தும்.

பஞ்சாப் மாநிலத்தில் பொங்கல் :

கோதுமை அதிகம் விளையும் மாநிலமான பஞ்சாபிலும் பொங்கல் பண்டிகை ‘லோஹ்ரி’ என்ற பெயரில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. லோஹ்ரி என்பது அறுவடைத் திருவிழாவாகக் காணப்படுகிறது. பஞ்சாப் மக்கள் நெருப்பை தெய்வமாக வணங்கும் பண்டிகை இது. பொங்கல் முந்தைய நாள் இரவன்று, நெருப்பு மூட்டி, குடும்பமும் நண்பர்களும் ஒன்றிணைந்து கொண்டாடுவார்கள்.

உத்தர பிரதேச மாநிலத்தில் பொங்கல் :

இந்த மாநிலத்தில் பொங்கல் ‘கிச்சேரி’ என்று அழைக்கப்படுகிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆறுகள் சங்கமம் ஆகும் இடத்திற்குச் சென்று நீராடி வருவது வழக்கம்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Pongal

அடுத்த செய்தி