குழந்தைகள் எல்லோருமே சிறப்பானவர்கள்தான். அதே நேரம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகள் அவர்களது தேவை காரணமாக கூடுதல் கவனம் பெறுகிறார்கள். நரம்பு குறைபாடு மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தையின் தாய் என்கிற முறையில், கடந்த 2 ஆண்டுகள் எனக்கு மிகவும் சிரமத்தை கொடுத்தன. மிகச்சிறிய மொபைல் திரை அவர்களுக்கு பள்ளியாக மாறிவிட்டதால் அவர்களுக்கும் அசவுகரியங்கள் ஏற்பட்டன.
நீண்ட நாட்களாக குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இது மன ரீதியிலும், உடல் ரீதியிலும் இயற்கைக்கு முரணானது. இது சிறப்பு குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. இது தொடர்பாக பின்வரும் பிரச்னைகளையும், தீர்வுகளையும் பார்க்கலாம்.
இதையும் படிங்க -
இதய நோயை உண்டாக்கும் ஆபத்து காரணிகளை குறைக்க உதவும் அற்புத மூலிகை மரப்பட்டை : தெரிந்துகொள்ளுங்கள்
மனித தொடர்பு : சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு மனித தொடர்புகள் மிக அவசியம். அவர்கள் ஆசிரியர்கள் உடல் அசைவு மூலமாக அதிகம் கற்றுக் கொள்வார்கள். அதற்கான வாய்ப்பு ஆன்லைன் வகுப்புகளில் இல்லாமல் போய் விட்டது.
சமூக தொடர்புகள் : ஆன்லைன் வகுப்பு வந்ததில் இருந்து சமூக தொடர்புகள் இல்லாதவர்களாக சிறப்பு குழந்தைகள் மாறியுள்ளனர். நண்பர்களைப் பார்த்து அவர்களுடன் விளையாட முடியாமல் எனது பிள்ளை தவிப்பதை பார்க்க முடிகிறது.
நட்பு வட்டாரம் : குழந்தைகள் அவர்களது நண்பர்கள் மூலம் ஏராளமானவற்றை கற்றுக் கொள்வார்கள். இதை வெறுமனே ஆன்லைன் வகுப்புகளல் பெற முடியாது. அதிலும் குறிப்பாக சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு நட்பு வட்டாரம் இன்றியமையாதது. இதை எந்த ஆன்லைன் வகுப்பாலும் வழங்கி விட முடியாது.
இதையும் படிங்க -
வைட்டமின் டி குறைபாடு புற்றுநோயை உண்டாக்குமா.? ஆய்வுகள் என்ன சொல்கின்றன..
தொடர்ச்சியான செயல்பாடு : சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு கல்வி, உடல்நலம், மன நலம் உள்ளிட்டவை தொடர்ச்சியாக கிடைத்தால் மட்டுமே அவர்களுக்கு பலன் உண்டாகும். இது ஆன்லைன் வகுப்புகளில் சாத்தியம் இல்லை. சில நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும்போது, பிள்ளைகள் குழப்ப நிலைக்கு ஆளாவார்கள். திரும்பி மின்சாரம் அல்லது இணைய இணைப்பு வரும்போது பாடங்கள் மாறியிருக்கும் என்பதால் குழப்பமே ஏற்படும்.
கவனச் சிதறல்கள் : ஆன்லைன் வகுப்புகளில் கவன சிதறல்கள் ஏராளம். எனது மகன் தொடர்ந்து பிரவுசரில் புதிய டேப்களை ஓபன் செய்து, யூடியூப் வீடியோக்களை பார்க்கிறார். அவர் புத்திசாலிதான் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. அதேநேரம் அவர் தொடர்ந்து பாடங்களைத்தான் கவனிக்கிறாரா என்பதை அவருடைய லேப்டாப்பை கண்காணித்து என்னால் தெரிந்து கொள்ள முடியாது.
எனக்கு தெரிந்த சில பிரச்னைகளை பட்டியலிட்டுள்ளேன். இதற்கான தீர்வுகளை உருவாக்கும்படி நிர்வாகத்தினரை கேட்டுக்கொள்கிறேன். இந்த தகவல்களை யாரேனும் சிலராவது கேட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
கட்டுரையாளர் : உபசனா மஹ்தானி லுத்ரா, இயக்குனர், குர்கான் மோம்ஸ்.
இது கட்டுரையாளரின் தனிப்பட்ட பார்வையே அன்றி, நியூஸ் 18 கருத்து அல்ல.இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.