முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உணவு முறையை மாற்றி வரும் இந்தியர்கள் : அதிகமாக வாங்கும் உணவுப் பொருட்கள் இவைதான்..!

உணவு முறையை மாற்றி வரும் இந்தியர்கள் : அதிகமாக வாங்கும் உணவுப் பொருட்கள் இவைதான்..!

விடுமுறை காலம் வந்துவிட்டாலே போதும் குடும்ப உறவுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து விருந்து சாப்பிட்டு மகிழ்வது, உணவகங்களுக்கு சென்று சாப்பிட்டு வருவது மற்றும் விதவிதமான உணவுகளை ஆன்லைன் ஆர்டர் செய்து சாப்பிடுவது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உடல் எடையை பராமரிக்க விரும்புகிறவர்கள், விடுமுறை உற்சாகத்தில் மிக அதிகமாக சாப்பிடுவார்கள்.

விடுமுறை காலம் வந்துவிட்டாலே போதும் குடும்ப உறவுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து விருந்து சாப்பிட்டு மகிழ்வது, உணவகங்களுக்கு சென்று சாப்பிட்டு வருவது மற்றும் விதவிதமான உணவுகளை ஆன்லைன் ஆர்டர் செய்து சாப்பிடுவது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உடல் எடையை பராமரிக்க விரும்புகிறவர்கள், விடுமுறை உற்சாகத்தில் மிக அதிகமாக சாப்பிடுவார்கள்.

இந்த அறிக்கையின்படி பருவநிலை மாற்றத்தால் மட்டுமல்ல, அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் அவர்களின் மாறிவரும் விருப்பங்கள் காரணமாகவும் மிக விரைவில் நமது உணவு முறை பெரும் மாற்றத்தை எதிர்கொள்ளும்.

  • Last Updated :

இந்த தொற்று காலத்தில் தங்களது உணவை உண்ணும் முறை மற்றும் பொதுவான உணவு நுகர்வு முறைகள் உட்பட பல விஷயங்களை மக்கள் மாற்றி கொண்டுள்ளனர். பல காரணங்களால் உலக நாடுகளில் உணவு பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதால், தங்கள் உணவை இந்தியர்கள் தற்போது எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் மற்றும் எதிர்காலத்தில் இந்தியர்களின் உணவு நுகர்வு போக்குகள் (food consumption trends) எப்படி இருக்கும் என்பதை ஒரு அறிக்கை காட்டி இருக்கிறது.

இந்த அறிக்கையின்படி பருவநிலை மாற்றத்தால் மட்டுமல்ல, அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் அவர்களின் மாறிவரும் விருப்பங்கள் காரணமாகவும் மிக விரைவில் நமது உணவு முறை பெரும் மாற்றத்தை எதிர்கொள்ளும். இது பற்றி Deloitte India-வை சேர்ந்த ஆனந்த் ராமநாதன் கூறுகையில், "ஒரு புதிய உணவுப் புரட்சியின் உச்சத்தில் இந்தியா உள்ளது. சுகாதார உணர்வுள்ள இந்தியர்கள் தங்கள் உணவுகளில் குறைந்த சுற்றுச்சூழலின் தடயத்தை (lower environmental footprint) கொண்டிருக்கும் பொருட்களை சேர்த்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

சொந்த ஆரோக்கியத்துடன் சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாக்க அதிக விழிப்புணர்வுடன் உள்ளனர். நிலையான மாற்று வழிகளில் கவனம் செலுத்தி வரும் இந்தியர்களின் உணவு பாரம்பரியம் நாட்டில் உணவின் எதிர்காலத்திற்கான பாதையை அமைக்கிறது" என்றார். இதனிடையே Deloitte-ன் 'Future of food' in India தொடரான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய உணவு போக்குகள் இங்கே..

உணவுமுறையில் கவனம்:

1961-ல் தினசரி கலோரி நுகர்வில் 63% இருந்த தானியங்கள், 2017-ல் 55%-ஆக குறைந்துள்ளன. இந்திய நுகர்வோர் புரதங்கள் சாப்பிடுவதை 55.3 கிராம் முதல் 63 கிராம் வரை அதிகரித்துள்ளனர். தவிர பழங்கள்,காய்கறிகள்,கிரீன் டீ, ஆலிவ் ஆயில் போன்ற சூப்பர்ஃபுட்களின் நுகர்வையும் அதிகரித்து வருகின்றனர்.

ஆரோக்கியத்தில் கவனம்:

சமீப ஆண்டுகளாக ஆரோக்கியமான உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் போன்ற ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ்களை இந்தியர்கள் அதிகம் ஏற்று கொண்டுள்ளனர். அரிசி, கோதுமை போன்றவற்றுக்கு பதில் தினை போன்ற ஊட்டச்சத்து தானியங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க உணவு வலுவூட்டலில் (food fortification) அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

ஆரோக்கியமாக இருக்க அசைவ உணவு அல்லது சைவ உணவு இரண்டில் எது பெஸ்ட்..?

சோர்ஸில் கவனம்..

விவரமறிந்த நுகர்வோர் தாங்கள் உட்கொள்ளும் உணவு பொருட்களின் பாதுகாப்பு, எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது, எப்படி பேக்கிங் செய்யப்படுகிறது, எவ்வாறு பதப்படுத்தப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படுகிறது என்பது குறித்து அக்கறை கொண்டுள்ளனர். இது ஆர்கானிக் உணவுகளை நோக்கி மக்கள் செல்ல வழிவகுத்துள்ளது.

முன்னுரிமையில் கவனம்:

வலுவான பிராந்திய பிராண்டுகள் உருவாக வாடிக்கையாளர்களின் உள்ளூர் ரசனைக்கு ஏற்ற உணவு பொருட்கள் காரணமாக இருந்தன. ஒரே மாநிலத்திற்குள்ளும் கூட, வாடிக்கையாளர்களின் விருப்ப தேர்வுகள் பிராந்தியங்களுக்கு ஏற்ப மாறுபடும். எனவே தேசிய பிராண்டுகளும் பிராந்திய உணவு விருப்பங்களுக்கு ஏற்ற தயாரிப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்த துவங்கியுள்ளன.

வாங்குவதில் கவனம்..

பேக் செய்யப்படாத பொருட்களை லூஸில் வாங்குவதை காட்டிலும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவிட்டுக்கு பிறகு இந்த போக்கு இன்னும் அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் உணவு பாதுகாப்பில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில், மலிவு விலையில் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவை வாங்க விரும்புகிறார்கள்.

அதே போல ரெடி-டூ-ஈட் மற்றும் உறைந்த உணவு (frozen food) கேட்டகிரிகளில் நிலையான வளர்ச்சி உள்ளது. உணவு விநியோகம் அது ஆன்லைன் மளிகை அல்லது ப்ரிப்பேர்டு ஃபுட் என எதுவாக இருந்தாலும், பல எஸ்டாப்ளிஷ்ட் நிறுவனங்கள் மற்றும் இந்தத் துறையில் செயல்படும் ஸ்டார்ட்-அப்ஸ்களுடன் கணிசமாக வளர்ந்து வருகின்றன.

First published:

Tags: Food, Healthy Food