அறுவைச் சிகிச்சைகாகப் பயன்படுத்தும் கவுன்கள் மூலம் கிருமி பரவும் அபாயம் - ஆய்வில் தகவல்

இந்த கிருமி ஒருவருக்கு தொற்றினால் வயிற்றுப் போக்கு , உடல் சரியின்மை, இதயத் துடிப்பு அதிகரித்தல்,குடல் அழற்சி , சிறுநீரகம் செயலிழத்தல் போன்ற பாதிப்புகள் வரும் என்றுக் கூறப்பட்டுள்ளது.

news18
Updated: July 20, 2019, 6:06 PM IST
அறுவைச் சிகிச்சைகாகப் பயன்படுத்தும் கவுன்கள் மூலம் கிருமி பரவும் அபாயம் - ஆய்வில் தகவல்
அறுவை சிகிச்சைகாக பயன்படுத்தும் கவுன்கள்
news18
Updated: July 20, 2019, 6:06 PM IST
மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை அறையில் பயன்படுத்தும் கவுன்கள் மற்றும் ஸ்டீல் உபகரணங்களை என்னதான் கழுவி சுத்தம் செய்தாலும் கிருமித் தொற்றுகள் வளர்ந்து நோயை உண்டாக்குவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் நடத்திய ஆய்வில் கூறியுள்ளார். இவை கிருமிநாசினி பயன்படுத்தி பாதுகாப்பாக இருந்தாலும் பரவுகின்றன.

”இந்த பாக்டீரியாக்கள் வளரும் தன்மைக் கொண்டது” என டினா ஜோஷி கூறுகிறார். இவர் லண்டனைச் சேர்ந்த ப்ளேமவுத் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு நுண்ணுயிரியல் பேராசிரியராக இருக்கிறார்.

இதை உடனடியாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் இதனால் அமெரிக்காவில் 29,000 பேர் வருடத்திற்கு இறப்பதாகவும் கூறுகிறார் ஜோஷி.
இந்த கிருமி ஒருவருக்கு தொற்றினால் வயிற்றுப் போக்கு , உடல் சரியின்மை, இதயத் துடிப்பு அதிகரித்தல், குடல் அழற்சி, சிறுநீரகம் செயலிழத்தல் போன்ற பாதிப்புகள் வரும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நோய்க் கிருமிகளானது மருத்துவமனையிலேயே நீண்ட நாள் இருக்கும் நோயாளிகள், குறிப்பாக வயதானவர்களை எளிதில் தாக்குவதாகக் ஆய்வில் கூறப்படுகிறது.

Loading...

இந்த கவுன்கள் 1000 ppm அளவிற்குக் குளோரினில் முக்கி 10 நிமிடங்கள் ஊற வைத்தாலும் அந்த நோய்க் கிருமிகள் சாவதில்லை என்பதுதான் ஆச்சரியம். இதிலிருந்து அந்த கவுன்கள் கிருமிகளைத் தக்க வைத்துக்கொள்ளும் தன்மைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.”இத்தனை வீரியம் கொண்ட இந்தக் கிருமிகளை அழிக்க சரியான பராமரிப்பு அவசியம். இந்த ஆய்வு, உலகின் எந்த மூலையில் இருக்கும் மருத்துவமனைக்கும் பொருந்தும். இனி வரும் சந்ததிகளுக்கு கிருமிநாசினியின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை அளித்தல் அவசியம்” என்கிறார் ஜோஷ்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...