முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / 1 ரூபாய் கூட முதலீடு வேண்டாம்.. பெண்கள் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம்..!

1 ரூபாய் கூட முதலீடு வேண்டாம்.. பெண்கள் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம்..!

மாதிரி படம்

மாதிரி படம்

பெண்களே 1 ரூபாய் முதலீடு இல்லாமல் வீட்டில் இருந்தே செய்யக்கூடிய சில வேலைகளை உங்களுக்கு சொல்கிறோம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு மீதம் உள்ள நேரத்தில் என்ன செய்யலாம் என்று யோசிப்பார். சின்ன  வேலை செய்தால் கூட, அதில் ஒரு வருமானம் வரும் அது குடும்ப செலவுக்கு ஒரு கைகொடுக்கும் என்று நினைப்பர். ஆனால் என்ன செய்வது என்று தெரியாது.

ஏதாவது சிறுதொழில் தொடங்கலாம் என்றால் அதற்கு ஒரு முதலீடு தேவைப்படும். அதற்கு எங்கே போவது என்று திணறுவார்கள். பெண்களே  1 ரூபாய் முதலீடு இல்லாமல் வீட்டில் இருந்தே செய்யக்கூடிய சில வேலைகளை உங்களுக்கு சொல்கிறோம்.

பராமரிப்பு பணி

குழந்தைகள் மற்றும் முதியோர்களை பார்த்து கொள்ளும் தொழில் வெளிநாட்டில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. நம் நாட்டில் தற்போது இதன் மவுசு அதிகரித்து வருகிறது. இப்போது இருக்கும் நிலையில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்கின்றனர். அதனால் குழந்தைகளை என்ன செய்வது என்று திணறுகின்றனர்.

குழந்தைகள் மற்றும் முதியவர்களை பார்த்து கொள்ள ஒரு ஆள் இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பார்கள். அதனால் அவர்களின் வீட்டில் சென்று பார்த்து கொள்ளலாம். இல்லையென்றால் குழந்தைகளை உங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றும் பார்த்து கொள்ளலாம். இதற்கு நேரத்தை பொறுத்து ஊதியம் வழங்கப்படும். அபார்ட்மெண்டுகளில் குடியிருக்கும் இல்லத்தரசிகள் அவர்களது அருகில் உள்ள வீடுகளின் குழந்தைகளை பார்த்துக்கொண்டாலே நன்றாக சம்பாதிக்கலாம்.

கணக்கர் வேலை:

நீங்கள் கணக்கு அல்லது அக்கவுன்டிங் படித்துவிட்டு வீட்டில் இருந்தால் அருமையான வாய்ப்பு உங்களுக்கு இருக்கு. நிறைய கம்பெனிகளில் அவர்களது கணக்கு வழக்குகளை கவனிக்க Accountant வைத்திருக்க மாட்டார்கள். அதனால் அந்த கம்பெனிகளில் வீட்டில் இருந்தே கணக்கு பார்ப்பவரை தேர்ந்தெடுப்பார்கள். அதனால் அந்த கம்பெனிகளுக்கு நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஒவ்வொரு நாளும் நடந்த வரவு, செலவை  பார்த்து கொடுக்கலாம்.

ஒரு சில கம்பெனிகள் ஆண்டிற்கு ஒருமுறை அல்லது இரு முறை மட்டும் கணக்கு பார்ப்பார்கள். அதுபோன்ற நிறுவனங்கள் முழு கணக்கை பார்ப்பதற்கே பெரிய அளவிலான தொகையை கொடுப்பார்கள். அதுபோன்ற வேலைகளை தேடி பெறலாம்.

டியூஷன் எடுக்கலாம்:

கல்வி என்பது அழியாத தொழிலாக இருக்கிறது. முன்பெல்லாம் படிக்காத குழந்தைகள் டியூஷன் செல்வார்கள். இப்போது அப்படியில்லை 100 க்கு 100 எடுக்க வேண்டும் என்று எல்லாருமே டியூஷன் செல்கிறார்கள். நீங்கள் எந்த பாடத்தில் தெளிவாக இருக்கிறீர்களோ அதில் டியூஷன் எடுக்கலாம். 8 ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும் உங்களால் எடுக்க முடியும். அதற்கு மேல் உள்ள வகுப்புகளுக்கு மட்டும் உங்கள் திறனை பொறுத்து பார்த்துக்கொள்ளுங்கள்.

இதில் ஹோம் டியூஷன் வாய்ப்பு வேறு இருக்கிறது. ஒரு ஆளுக்காக தான் என்றாலும் உங்கள் வீட்டிற்கு வந்து படிக்கும் மாணவர்கள் தரும் பீஸை விட இரண்டு மடங்கு ஹோம் டியூஷனில்  கிடைக்கும். மணி நேரத்திற்கு ஏற்ப கட்டணத்தை நீங்கள் நிர்ணயிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

ஆரி வேலைப்பாடுகள் (aari work) 

கல்யாண சீசன் தொடங்கிவிட்டது. கல்யாணத்திற்கு மணப்பெண்ணிற்கு மட்டும் சடங்கு செய்யும்போது, நிச்சயதார்த்தம் மற்றும் திருமணத்தின் போது  உடுத்த, அதற்கு பின் ரிசெப்ஷனில் போட என்று குறைந்தது விதவிதமாக 4-5 சேலைகள் எடுப்பார்கள். வாழ்க்கையில் நடக்கும் முக்கிய தருணம் என்பதால் அதற்கான பிளவுசுகளில் ஆரி வேலைப்பாடுகள், டிசைன்கள் போட ஆட்களை தேடுவர். உங்களுக்கு ஆரி வேலைப்பாடு செய்யத் தெரியும் என்றால் கல்யாண சீசன் உங்களுக்கு காசுமழை  தான்.

First published:

Tags: Jobs, Women