• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • வாஷிங் மிஷின் பாக்டீரியாக்களின் இருப்பிடம்.. பராமரிக்க என்ன வழி..?

வாஷிங் மிஷின் பாக்டீரியாக்களின் இருப்பிடம்.. பராமரிக்க என்ன வழி..?

வாஷிங் மிஷின்

வாஷிங் மிஷின்

வீட்டில் நோயால் பாதிக்கப்பட்டிருப்போரின் ஆடைகளை துவைத்தாலும் தனியாக துவைக்க வேண்டும் கட்டாயம் ஹீட் வாட்டர் ஆப்ஷனில்தான் துவைக்க வேண்டும்

  • News18
  • Last Updated :
  • Share this:
பேச்சுலர்கள், வேலைக்குச் செல்லும் தம்பதிகள், உடல் நலம் சரியில்லாத அம்மா என இப்படி பலருடைய வீடுகளில் பளபளக்கும் துணிகள் உளர்த்தப்படுகிறதெனில் அது வாஷிங் மிஷினின் மகத்துவம்தான். இப்படி உதவிக்குக் கை கொடுக்கிறதே என நினைத்து பயன்படுத்தும் வாஷிங் மிஷினும் சத்தமில்லாமல் நோயைப் பரப்புகிறதெனில் நம்ப முடிகிறதா..?

கசப்பான செய்தியாக இருந்தாலும் அதுதான் உண்மை என்கிறது ஆராய்ச்சிகள்.

Applied and Environmental Microbiology என்னும் இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் வாஷிங் மிஷின் பாக்டீரியாக்களின் இருப்பிடம் என்று கூறுகிறது. இது வீடுகளில் பயன்படுத்தும் வாஷிங் மிஷின்களைக் காட்டிலும் மருத்துவமனை, லாண்டரிகளில் பயன்படுத்தும் வாஷிங் மிஷின்களில் பாக்டீரியாக்கள் இன்னும் அதிகம் என்கிறது.

அவை பரப்பும் பாக்டீரியாக்கள் இ.கோலி (E. coli), சால்மொனெல்லா (salmonella) மற்றும் க்லெப்செய்ல்லா ஆக்ஸிடோகா (Klebsiella oxytoca) ஆகியவை உடலுக்கு பல உபாதைகளை உண்டாக்கலாம்.

உதாரணமாக வாந்தி, வயிற்றுக் கோளாறு, அடி வயிறு இறுக்கிப் பிடித்தல், சருமத் தொற்று, வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும். அதோடு நோய் எதிர்ப்புச் சக்தியையும் குறைக்கும் வாய்ப்பு அதிகம் என்கிறார் கலிஃபோர்னியாவின் தொற்று நீக்கி நிபுணர் ஹிலாரி. இவர் ஹெல்த் லைன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.இவை எவ்வாறு உருவாகின்றன..?

அழுக்கு படிந்த எல்லா வகையான துணிகளையும் ஒன்றாகப் போடும்போது, அதுவும் குறைந்த அளவிலான வெப்பநிலையில் போடும்போது பாக்டீரியாக்கள் இரண்டு நான்காக உற்பத்தியாகின்றன. அவை அப்படியே வாஷிங் மிஷினின் ரப்பர், வாஷர், டிட்டர்ஜெண்ட் கொட்டும் பாக்ஸ், வாஷிங் டிரம் ஆகியவற்றில் தேங்கி உற்பத்தியாகி தங்கிவிடுகின்றன. மறுமுறை நீங்கள் ஆடைகளை போடும்போது அவை அந்த துணிகளோடு ஒட்டிக்கொள்கின்றன. எனவே வெதுவெதுப்பான அல்லது சூடான தண்ணீரில் ஆடைகளை துவையுங்கள் என்று பரிந்துரைக்கிறது ஆய்வு.

குறிப்பாக வீட்டில் நோயால் பாதிக்கப்பட்டிருப்போரின் ஆடைகளை துவைத்தாலும் தனியாக துவைக்க வேண்டும் கட்டாயம் ஹீட் வாட்டர் ஆப்ஷனில்தான் துவைக்க வேண்டும் என்று கூறுகிறார் ஹெல்த்லைனிற்கு பேட்டியளித்த மருத்துவர் ப்ரூஸ் ஹிர்ச்.

நியூயார்க்கின் நோய் தொற்று தடுத்தல் நிபுணராக இருக்கிறார். அதேபோல் குழந்தை பிறந்த வீடுகளிலும், குழந்தைகள் வளரும் வீடுகளிலும் வாஷிங் மிஷினில் துணி போடும் போது ஹீட் ஆப்ஷனில்தான் வைக்க வேண்டும் என்கிறார்.இவற்றைத் தடுக்க மற்றொரு சிறந்த யோசனை மாதம் ஒரு முறை கட்டாயம் வாஷிங் மிஷினை முற்றிலும் சுத்தம் செய்வது அவசியம் என்கிறார். பின் ஒவ்வொரு வாஷிற்குப் பின்னும் மிஷின் ரப்பர் மற்றும் டிரம்மை துடைப்பது நல்லது என்கிறார். இதனால் ஆபத்திலிருந்து கொஞ்சம் பாதுகாப்பு கிடைக்கும்.

அடுத்ததாக கிருமிகளை அழிக்கும் சக்தி சூரியக் கதிர்களுக்கு உண்டு. எனவே துணியை வீட்டிற்குள், பால்கனி என வெயில் படாத இடத்தில் காய வைப்பதை விட ஆடையின் மீது நன்கு வெயில் படும்படி காய வைத்து எடுப்பதாலும் தொற்றியிருக்கும் நோய்கள் நீங்கும். டிரையர் ஆப்ஷனை கட்டாயம் தவிருங்கள் என்கிறார் ஹிர்ச்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: