முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சமைக்கும்போது பொங்கி வரும் நீரை தடுக்க கரண்டியை இப்படி வைங்க... வேலை சுலபமாகிடும்...

சமைக்கும்போது பொங்கி வரும் நீரை தடுக்க கரண்டியை இப்படி வைங்க... வேலை சுலபமாகிடும்...

சமையல் டிப்ஸ்

சமையல் டிப்ஸ்

நவீன காலத்தில் கூட சமயலறையில் இருப்பவர்களுக்கு மிகவும் சிரமம் தரும் விஷயங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் கிச்சனில் சமைக்கும் வேலையில் ஈடுபடுவோர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்யும் நிலையே உள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நவீனமயமாக்கல் என்பது பல்லாண்டுகளாக மக்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகளை அளித்து வருகிறது. 15 வருடங்களுக்கு முன்னர் கடிதங்கள் எழுதி கொண்டிருந்த நிலையில், இன்று கையடக்க மொபைல் அல்லது சோஷியல் மீடியாக்கள் மூலம் உலகில் எங்கிருக்கும் ஒருவரை மிக எளிதாக தொடர்பு கொள்வது வரை, நவீனமயமாக்கல் மூலம் உலகம் நீண்ட தூரம் வந்து விட்டது அதே சமயம் உலகம் சுருங்கிவிட்டது என்றே கூறலாம்.

மக்கள் மண் பாத்திரங்களில் சமைத்து வந்த காலம் போய் நவீனமயமாக்கப்பட்ட அடுப்பு மற்றும் பிற சமையல் உபகரணங்களுடன் சில நிமிடங்களில் உணவுகளை தயாரிக்கும் நவீன சமையல் நுட்பங்களும் உணவுகளும் உருவாகியுள்ளன.

இதனால் முன்பை விட சமையல் மிகவும் எளிதான ஒன்றாக மாறியுள்ளது. இருப்பினும் இந்த நவீன காலத்தில் கூட சமயலறையில் இருப்பவர்களுக்கு மிகவும் சிரமம் தரும் விஷயங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் கிச்சனில் சமைக்கும் வேலையில் ஈடுபடுவோர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்யும் நிலையே உள்ளது. எடுத்துக்காட்டாக ஒருவர் பாஸ்தா செய்ய முடிவெடுக்கிறார் என்றால், அதற்குண்டான தயாரிப்பின் போது முதலில் அவர் ஒரு பானை அல்லது பாத்திரத்தை எடுத்து கொண்டு அதில் தண்ணீர் ஊற்றி பாஸ்தாவை கொதிக்க வைத்து விட்டு, அடுத்து அதற்கு தேவையான காய்கறிகளை வெட்டுவதில் மும்முரமாக இருப்பார்.

அந்த நேரத்தில் அடுப்பில் பாஸ்தா வைத்திருக்கும் பாத்திரதில் வைத்த தண்ணீர் கொதித்து பாஸ்தாவுடன் பொங்கி வழியவோ அல்லது எந்நேரம் பொங்கி வழியுமோ என்ற பதற்றத்திலேயே காய்கறி வெட்டும் வேலை அல்லது வேறு சிறிய கிச்சன் வேலையில் முழுகவனத்துடன் வேலை செய்ய முடியாமல் போகும் அல்லது தவறு நிகழும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக பாஸ்தாவை சமைக்கும் போது பாத்திரம் அல்லது பானையிலிருந்து சாத்தியம் எப்போதும் அதிகமாக இருக்கிறது. ஏனெனில் பாஸ்தாவில் இருக்கும் ஸ்டார்ச் மூலக்கூறுகள் தண்ணீருக்குள் புகுந்து, அதிகளவில் குமிழ்களை ஏற்படுத்துகின்றன.

இந்த குமிழ்கள் பாத்திரத்தின் மேற்பரப்பு முழுவதும் அடர்த்தியான நுரை அடுக்கை உருவாக்குகின்றன. எனவே நீராவி வெளியேறுவது தடுக்கப்பட்டு, அது ஒரு சிறிய நீர் வெடிப்புக்கு வழிவகுக்கிறது. இதனால் எதிர்பாராத நேரத்தில் டக்கென்று பாத்திரத்தில் இருந்து தண்ணீர் பொங்கி வழிந்து கூடுதல் வேலை சுமையை சமைப்பவர்களுக்கு ஏற்படுத்துகிறது. கிச்சனில் பலவித பதார்த்தங்களை சமைக்கும் போது ஏற்படும் இதுபோன்ற சூழலை தவிர்க்க ஒரு சிறந்த வழி பானை அல்லது பாத்திரத்தின் மேல் ஒரு மர கரண்டியை சமநிலையாக இருக்கும்படி வைப்பது.

இந்த 6 பிரச்சனை இருப்பவர்கள் நெய்யை தவறி கூட சாப்பிடாதீங்க... மீறினால் என்ன ஆகும் தெரியுமா..?

ஆம் ஒரு மர ஸ்பூனை கொண்டு அடுப்பில் வைக்கப்படும் பாத்திரத்தில் இருந்து தண்ணீர் கொதித்து வெளியேறுவதை தவிர்க்க முடியும். எஃகு அல்லது அலுமினியத்துடன் ஒப்பிடுகையில் மரத்தை அடிப்படையாகக் கொண்ட பாத்திரங்கள் கொதிக்கும் நீரைத் தடுக்கும் அதிக திறன் கொண்டது. மர கரண்டியின் மெல்லிய கைப்பிடி பானையில் இருக்கும் நுரை மேலே எழும்பி பொங்குவதை தடுப்பதாக கூறப்படுகிறது. உண்மையில் இந்நிகழ்வுக்கு பின் ஒரு சிறிய அறிவியல் காரணம் இருக்கிறது.

சிம்பிள்மோஸ்ட்டின் (Simplemost) வெளியிட்டுள்ள அறிக்கை படி, இந்த நிகழ்வு முக்கியமாக மரத்தின் இரண்டு குறிப்பிடத்தக்க குணங்களால் சாத்தியமாவதாக கூறப்பட்டுள்ளது. தண்ணீரை உறிஞ்சுவதில் மரம் மிகவும் சிறந்தது. மரம் ஒரு இன்சுலேட்டர், மோசமான வெப்ப கடத்தியாகும்.நீர் வெளியேறாமல் தடுக்க பானையின் மேல் ஒரு மர கரண்டியை வைக்கும் போது, அந்த மர கரண்டியின் கரடுமுரடான மேற்பரப்பு மற்றும் மரத்தின் ஹைட்ரோஃபிலிக் தன்மை கொதிக்கும் நீரில் சிறிய குமிழ்கள் உருவாக சிறந்த சூழலை ஏற்படுத்தி தருகிறது.

உங்களுக்கு நார் தேய்த்து குளிக்கும் பழக்கம் இருக்கா..? இந்த விஷயங்களை தெரிஞ்சுக்காம யூஸ் பண்ணாதீங்க...

top videos

    அதே சமயம் அதன் மர கரண்டியின் சற்றே கரடுமுரடான அமைப்பு இந்த குமிழ்களை உறிஞ்சி, உங்கள் அடுப்பில் அவை பொங்கி வழிவதை தடுக்கிறது. மரக் கரண்டியால் இந்த குமிழ்கள் உறிஞ்சப்படுவதால், அது நீண்டு குமிழ்கள் உடையும் நிலை ஏற்படுகிறது. எனினும் இந்த சூழ்நிலையில், ஸ்ட்ரெச்சிங்க் சக்தி (stretching force) சர்ஃபேஸ் டென்ஷன் சக்தியை விட அதிகமாகிறது. இந்த நிகழ்வு குமிழ்களை ஒன்றாகவே வைத்திருக்கிறது. எனவே ஒருகட்டத்தில் குமிழ்கள் சரிந்து நுரை வெளியேற வழியில்லாமல் பாத்திரத்திற்குள்ளயே அடைந்து விடுகிறது.

    First published:

    Tags: Cooking tips, Kitchen Hacks