Home /News /lifestyle /

வாஷ் பேசின் மஞ்சள் கறைகளை நீக்க ரொம்ப சிரமப்படுறீங்களா..? ஒரே நிமிடத்தில் பளிச்சென மாற்றும் ரகசியம்...

வாஷ் பேசின் மஞ்சள் கறைகளை நீக்க ரொம்ப சிரமப்படுறீங்களா..? ஒரே நிமிடத்தில் பளிச்சென மாற்றும் ரகசியம்...

வாஷ் பேசின்

வாஷ் பேசின்

வாஷ் பேசின் விரைவில் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்குகிறது. வாஷ் பேசினில் உள்ள பற்பசை மற்றும் தண்ணீர் கறைகளை தினமும் தேய்த்தாலும் சுத்தம் செய்வது கடினம். அப்படி நீங்களும் உங்கள் வீட்டின் வாஷ் பேசினில் உள்ள கறைகளை நீக்க சிரமப்படுகிறீர்கள் எனில், இந்த சூப்பரான தந்திரத்தை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பெரும்பாலான குடும்பப் பெண்களுக்கு வீட்டைச் சுத்தம் செய்வதிலேயே அன்றைய நாள் கடந்துவிடும். வீட்டை சுத்தம் செய்வது எளிதான காரியம் அல்ல. வீட்டை சுத்தம் செய்யவும், வீட்டை அலங்கரிக்கவும் நிறைய நேரமும் முயற்சியும் தேவை. அந்த வகையில் வீட்டில் உள்ள வாஷ் பேசனை சுத்தம் செய்து பளிச்சென்று மாற்றுவது சவாலான விஷயம்தான்.

    காரணம் அடிக்கடி வீட்டில் கை கழுவவும், வாய் கொப்பளிக்கவும் பயன்படுத்தப்படுவதால் விரைவில் கறை படிந்து வெள்ளை நிற வாஷ் பேசின் விரைவில் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்குகிறது. வாஷ் பேசினில் உள்ள பற்பசை மற்றும் தண்ணீர் கறைகளை தினமும் தேய்த்தாலும் சுத்தம் செய்வது கடினம். அப்படி நீங்களும் உங்கள் வீட்டின் வாஷ் பேசினில் உள்ள கறைகளை நீக்க சிரமப்படுகிறீர்கள் எனில், இந்த சூப்பரான தந்திரத்தை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு அதிக மெனக்கெடலோ , செலவோ தேவையில்லை. வீட்டில் உள்ள வெள்ளை வினிகர் போதும். இதுவே வீட்டின் வாஷ் பேசினை பிரகாசமாக்க சிறந்த வழி.

    தயிரை விட மோர் சாப்பிடுவதுதான் சிறந்ததா..? ஏன் என விளக்கும் ஆயுர்வேத நிபுணர்

    வாஷ் பேசினை சுத்தம் செய்ய வெள்ளை வினிகரை எப்படி பயன்படுத்த வேண்டும்..?

    நூடுல்ஸ் மற்றும் அனைத்து துரித உணவு பொருட்களிலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் வெள்ளை வினிகரே இதற்கு போதுமானது. வெள்ளை வினிகர் உணவுப் பொருட்களின் சுவையை அதிகரிக்கவும், சுத்தம் செய்யவும் பயன்படுகிறது. அதே வெள்ளை வினிகரில் பேக்கிங் சோடாவை கலந்து பயன்படுத்துவதன் மூலம், வாஷ் பேசின் பளபளப்பது மட்டுமின்றி, வாஷ் பேசினில் இருந்து வரும் பாசி மற்றும் துர்நாற்றத்தையும் போக்கலாம்.



    வாஷ் பேசினை சுத்தம் செய்ய இந்த குறிப்புகளை பின்பற்றவும் :
    முதலில் வாஷ் பேசினில் வெந்நீரை சுற்றிலும் ஊற்றுங்கள். இதனால் கடினமான கறைகளை சுத்தம் செய்ய எளிதாகும்.
    சூடான நீரை சேர்த்த பிறகு, 2-3 ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்துக் கொள்ளுங்கள்.
    இப்போது ஒரு கிளாஸ் வெள்ளை வினிகரை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். குறைந்தது ஒரு மணி நேரம் விடவும்.
    பின் பிரெஷ் இருந்தால் அதில் தொட்டு தொட்டு வாஷ் பேசின் வாட்டர் டேங்க் மற்றும் பைப் மீது தடவுங்கள். பின் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
    ஒரு மணி நேரம் கழித்து, சிறிது வெதுவெதுப்பான நீரைச் சேர்த்து, வாஷ் பேசினை பிரஷ் மூலம் தேய்க்கவும்.
    இவ்வாறு செய்வதன் மூலம் வாஷ் பேசினை ஒரு நிமிடத்தில் சுத்தம் செய்துவிடலாம்.
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Home Cleaning Tips, Kitchen Hacks, Vinegar

    அடுத்த செய்தி