முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உருளைக்கிழங்கை இப்படியெல்லாம் கூட பயன்படுத்தலாமா..? தெரிந்துகொள்ளுங்கள்..

உருளைக்கிழங்கை இப்படியெல்லாம் கூட பயன்படுத்தலாமா..? தெரிந்துகொள்ளுங்கள்..

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் மிகவும் விரும்பப்படும் காயாக உள்ள உருளைக்கிழங்கு சமையலில் பயன்படுத்தப்படுவதைத் தவிர, நம் அன்றாட வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான விஷயங்களிலும் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா..?

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

காய்கறிகள் என்று வரும் போது பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்த காயாக உருளைக்கிழங்கு இருக்கிறது. உருளைக்கிழழங்கை பல டிஷ்களில் பயன்படுத்தலாம் என்பதால் இது அனைவருடனும் நட்புடன் பழகும் நபர் போன்றதாக குறிப்பிடப்படுகிறது.

அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் மிகவும் விரும்பப்படும் காயாக உள்ள உருளைக்கிழங்கு சமையலில் பயன்படுத்தப்படுவதைத் தவிர, நம் அன்றாட வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான விஷயங்களிலும் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா.? சமைத்து சாப்பிடுவதற்கு தவிர உருளைக்கிழங்கின் சில அசாதாரண பயன்பாடுகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

சூப்பில் உப்பு அதிகம் சேர்த்து விட்டீர்களா.?

நீங்கள் கஷ்டப்பட்டு தயாரித்த சூப்பில் உப்பை அதிகம் சேர்த்து விடீர்களா, கவலை வேண்டாம். உருளைக்கிழங்கு உங்களை காப்பாற்றும். சூப்பில் இருந்து அதிகப்படியான உப்பை பிரித்தெடுக்க உங்கள் சூப்பில் சில துண்டு உருளைகிழங்குகளைச் சேர்க்கவும். 10 நிமிடங்களில் உங்கள் சூப்பில் இருக்கும் அதிகப்படியான உப்பை ஈர்த்து விடும்.

தீக்காயங்களை குணப்படுத்த..

உருளைக்கிழங்கின் சாறு தீக்காயங்களை குணப்படுத்த உதவுகிறது. தீக்காயங்கள் கடுமையாக இருந்தால், நீங்கள் சிறிது வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து, அதன் சாறுடன் கலந்து, தீக்காயங்கள் முழுவதும் தடவலாம். இதனால் வலி மற்றும் எரிச்சல் குறையும். அவ்வப்போது இந்த கலவையை தீக்காயங்கள் மீது போடுவதால் வலி குறையும்.

கிரேவியை கெட்டியாக்க..

நீங்கள் வைத்துள்ள குழம்பு அலல்து கிரேவி தண்ணியாக இருக்கிறதா..? கவலை வேண்டாம், வேகவைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து உங்கள் கிரேவியில் சேர்க்கவும். இப்போது மசித்த உருளைக்கிழங்கை நனறாக கலப்பது போதுமான அளவு உங்கள் கிரேவியை கெட்டியாக்குகிறது.

கறைகளை நீக்க..

உருளைக்கிழங்கு ஒரு நல்ல ஸ்டெயின் ரீமூவிங் ஏஜெண்டாக செயல்படும். திரவம் அல்லது குழம்பு போன்ற கெட்டியான ஒன்றால் ஏற்படும் கறைகளை போக்க, நீங்கள் சிறிது நறுக்கி தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் சிறிது நேரம் போட்டு கொள்ளுங்கள். பின் தண்ணீரில் இருக்கும் உருளைக்கிழங்குகளை வெளியே எடுத்து விடுங்கள். இப்போது உருளைக்கிழங்கு ஊறவைத்த தண்ணீரை நீங்கள் நீக்க நிற்க்கும் கறையின் மேல் தடவவும். கறை மறைய தொடங்கும் வரை தண்ணீரைப் பயன்படுத்தி நன்றாக துடைத்தாள் சிறிது நேரத்தில் கறை மறையும்.

மாசு, மருவில்லா பளிச்சென்ற சருமம் வேண்டுமா..? இந்த ஒரு பொருள் மட்டும் போதும்! 

துரு நீக்க..

கறைகளை மட்டுமல்ல துருக்களையும் நீக்க கூடியவை உருளைக்கிழங்குகள். உலோக துருவை ஒ முழுவதுமாக அகற்ற நீங்கள் சிறிது உப்பு, சோப்பு மற்றும் பேக்கிங் சோடாவை கலக்கவும். உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கி, இந்த கலவையில் தேய்க்கவும். பின் உருளைக்கிழங்கை துருப்பிடித்த பகுதிகளில் சில நிமிடங்கள் மெதுவாக தேய்க்கவும். இதே போல சிறிது நேரம் மீண்டும் செய்து பின் துரு இருக்கும் பகுதியை தண்ணீரில் கழுவவும். உருளைக்கிழங்கில் உள்ள ஆசிட் துருவை மறைய செய்து விடுகிறது.

பைண்டிங் ஏஜெண்ட்:

டெசர்ட்ஸ்களில் உருளைக்கிழங்கு முட்டைகள், க்ரீம் அல்லது கோதுமை லோர் ஆகியவற்றிற்கு ஒரு சிறந்த மாற்றாக இருக்கும். பொருட்களின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, கிரீமி மற்றும் சாஃப்ட் உணர்வையும் உருவாக்குகின்றன. பால் சார்ந்த டெசர்ட்ஸ்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சரும பராமரிப்பு..

உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் உருளைக்கிழங்கைச் சேர்ப்பது நல்ல முடிவுகளைத் தரும். உருளைக்கிழங்கு துண்டுகளை டார்க் ஸ்பாட்களில் தேய்க்க நல்ல பலன் கிடைக்கும், உருளைக்கிழங்கு சாற்றை ஸ்பாட்ஸ் மற்றும் டேன்ட் பகுதிகளில் தடவினால் அவை மறைந்துவிடும். உருளைக்கிழங்கு முகத்திற்கு பொலிவைத் தருவதோடு வயதாகும் அறிகுறிகளைக் குறைக்கும்.

வெள்ளி பொருட்களை பிரகாசிக்க வைக்க..

வெள்ளிப் பொருட்களைக் கழுவி, அவற்றைப் பிரகாசிக்க வைக்க உருளைக்கிழங்கு வேகவைத்த தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெள்ளிப் பொருட்களில் இருந்து கறை அல்லது எந்த வகையான புள்ளிகளையும் அகற்ற உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரை பயன்படுத்துங்கள்.

First published:

Tags: Cooking tips, Potato