துளசி வளர்ப்பது ஆயுர்வேதம் மட்டுமல்ல; காற்று மாசுபாட்டையும் குறைக்கும்..!

டெல்லி மட்டுமல்ல இந்தியாவின் முக்கிய நகரங்களும் காற்று மாசுபாட்டால் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் மக்கள் அதற்கான சரியான வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.

துளசி வளர்ப்பது ஆயுர்வேதம் மட்டுமல்ல; காற்று மாசுபாட்டையும் குறைக்கும்..!
துளசி
  • News18
  • Last Updated: November 6, 2019, 4:43 PM IST
  • Share this:
துளசி பல வகையான மருத்துவக் குறிப்புகளை உள்ளடக்கியது. உதாரணமாக சளி, இருமல், மன அழுத்தம், பதட்டம் , தலைவலி இப்படி ஏராளமான பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கிறது.

சமீப காலமாக மக்கள் துளசி டீ க்கு மாறியிருப்பதும் அதன் ஆரோக்கியத்தின் குறியீடே. இப்படி அது நோய்களை தீர்க்கும் தீர்வாக இருப்பதோடு காற்று மாசுபாட்டையும் குறைக்கும் ஆற்றல் துளசிக்கு உண்டு.

டெல்லி மட்டுமல்ல இந்தியாவின் முக்கிய நகரங்களும் காற்று மாசுபாட்டால் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில் மக்கள் அதற்கான சரியான வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம். அலட்சியமாக விடுவது ஆஸ்துமா, இதய நோய், புற்றுநோய் என பலவகையான நோய் தொற்றுகளை உண்டாக்கலாம்.
எனவே துளசியில் உள்ள நோய் எதிர்ப்பு அழற்சி , பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி, ஆண்டி ஆஸ்துமாடிக் (anti-asthmatic), ஆண்டி டியூபர்குலர் (anti-tubercular) என பல வகையான ஆற்றலை உள்ளடக்கியுள்ளது.

வீட்டில் சுத்தமான காற்றை சுவாசிக்க இந்தச் செடிகளை வளர்க்கலாம்!இதற்கு எண்ணற்ற சாட்சிகளும் உள்ளன. வீட்டில் துளசி வளர்ப்பது மட்டுமன்றி அதை தினமும் சாப்பிட்டு வருவதும் காற்று மாசுபாட்டை எதிர்க்க உதவும். அதோடு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தலைவலி, கண் பிரச்னை, காயங்கள், சிறுநீரகத்தில் கல், புற்றுநோய், மலேரியா, மூட்டு வலிகள். அல்சர், அஜீரணக் கோளாறு இப்படி ஒரு துளிசி செடி வளர்ப்பதால் எண்ணற்ற நன்மைகளை பெறலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: November 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்