இனி சிரமம் வேண்டாம்... ஈஸியா மிக்ஸி ஜாரை சுத்தம் செய்ய டிப்ஸ்..!
அம்மியிலும், உரலிலும் சட்னி மற்றும் சமையலுக்குத் தேவையான மசாலா பொருள்களை அரைத்த காலங்கள் எல்லாம் மலையேறிப்போச்சு. அதற்கு மாற்றாக தற்போது ஒவ்வொரு வீட்டிலும் இல்லத்தரசிகள் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய பொருள்களில் ஒன்றாகி விட்டது மிக்ஸி. இதன் மூலம் உடல் உழைப்பின்றி சமையலுக்கு உபயோகிக்கும் பொருள்களை அரைக்கும் நாம், அதன் பின்னர் மிக்ஸி ஜாரைக் கழுவுவதற்கு மிகவும் சிரமப்படுவோம்.
மிக்ஸி ஜாரை அவசர வேலையில் சரியாக சுத்தம் செய்யாததால் தான், சில நாட்களிலியே துர்நாற்றம் வீசக்கூடும். இதுபோன்ற நிலைமையை அனைத்து இல்லத்தரசிகளும் சந்தித்திருப்பார்கள். எனவே இந்நேரத்தில் எவ்வித சிரமம் இல்லாமல் எப்படி மிக்ஸி ஜாரை சுத்தம் செய்வது? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

வெள்ளை வினிகரைப் பயன்படுத்துங்கள்: மிக்ஸியில் உள்ள ஜாரை சுத்தம் செய்வதற்கு நீங்கள் வெள்ளை வினிகரைப் பயன்படுத்தலாம். மிக்ஸியில் மிகவும் கரையாக உள்ள இடத்தில் வினிகர் மற்றும் தண்ணீர் சேர்ந்த கலவையைத் தேய்க்கவும். பின்னர் வழக்கம் போல மிக்ஸியை சுத்தம் சுத்தம் செய்தால் எவ்வித துர்நாற்றமும் இன்றி மிக்ஸி ஜாரைத் தூய்மையாக வைத்துக் கொள்ளலாம்.
பேக்கிங் சோடா உபயோகித்தல்: சட்னி முதல் சமையலுக்குத் தேவையான மசாலாப் பொருள்கள்களை எளிதில் அரைத்து விட வேண்டும் என்பதற்காக மிக்ஸி ஜாரை நாம் பயன்படுத்தினாலும் சுத்தம் செய்யும் போது மிகுந்த சிரமத்தை சந்திக்கிறோம். இனி அந்தக் கவலை வேண்டாம். மிக்ஸி ஜாருக்குள் மற்றும் அடியில் உள்ள அழுக்கை சுத்தம் செய்வது பேக்கிங் பவுடரை நாம் பயன்படுத்தலாம். பேக்கிங் பவுடர் மற்றும் தண்ணீர் சேர்த்த கலவையை மிக்ஸி கிரைண்டரில் தடவ வேண்டும். பின்னர் 15 நிமிடங்களுக்குப் பிறகு, வழக்கம் போல ஜாரில் தண்ணீர் ஊற்றி கழுவிக் கொள்ளலாம்.
சோப்பு திரவம் பயன்படுத்துதல்: மிக்ஸி மற்றும் கிரைண்டரில் 2 சொட்டு திரவ சோப்பு ஊற்றியும் சுத்தம் செய்யலாம். இவ்வாறு நீங்கள் செய்வதன் மூலம் மிக்ஸி ஜாரில் எந்தவித வாசனையும் இன்றி பளபளப்பாக இருக்க உதவும்.
எலுமிச்சைப் பயன்படுத்துதல்: மிக்ஸி கிரைண்டரில் உள்ள துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை தோலை பயன்படுத்துங்கள். இது மிக்ஸியில் உள்ள கறையை நீக்கி பளபளப்பாக இருக்க உதவுகிறது.
top videos
இதேப் போன்று மிக்ஸி ஜாரை ஆல்கஹால் பயன்படுத்தியும் நாம் சுத்தம் செய்யலாம். மிக்ஸிக்கு உள்ளே மட்டும் இல்லை மிக்ஸி ஜாருக்கு அடி பக்கமும் நாம் அடிக்கடி சுத்தம் செய்ய வேணடும். மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது 3 மாதத்துக்கு ஒரு முறையாவது எலுமிச்சை பழச்சாறுடன், பேக்கிங் சோடாவைச் சேர்த்து மிக்ஸியின் அடிப்பாகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.