Air Cooler: வீட்டில் உள்ள ஏர் கூலரில் வரும் கூலிங் பத்தலையா..? இந்த ட்ரிக்ஸை டிரை பண்ணுங்க..!

ஏர் கூலர்

ஏர் கூலர்ஸ்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகவும் பட்ஜெட் பிரெண்ட்லியாகவும் இருக்கும். அவற்றை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம். மேலும் அனைத்து பருவங்களுக்கு அவற்றைப் பயன்படுத்தலாம்.

  • Share this:
கோடைகாலம் ஆரம்பமாகி சுட்டெரிக்கும் வெயில் தற்போது அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. இந்த சமயங்களில் மக்கள் அனைவரும் வீட்டில் கூலர்ஸ் மற்றும் ஏர் கண்டிஷனர்கள் உதவியுடன் வெயிலை சமாளித்து வருகின்றனர். இதில், ஏர் கண்டிஷனர்கள் உடனடியாக மிகவும் குளிரான சூழ்நிலையை அளிக்கும்போது, கூலர்ஸ்கள் இதுபோன்ற குளிரான சூழ்நிலையை தர நிறைய நேரம் எடுக்கும். ஆனால், ஏர் கண்டிஷனர்கள் சுற்றுச்சூழலுக்கு நட்பு வாய்ந்தவை அல்ல. மேலும் அவை அதிக சக்தியை பயன்படுத்துவதால் மின்கட்டணம் எகிறும். எனவே, இதனை பட்ஜெட் பிரெண்ட்லி என்று சொல்ல முடியாது.

அதுவே கூலர்ஸ்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகவும் பட்ஜெட் பிரெண்ட்லியாகவும் இருக்கும். அவற்றை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம். மேலும் அனைத்து பருவங்களுக்கு அவற்றைப் பயன்படுத்தலாம். எனவே வீட்டில் கூலர்ஸ் பயன்படுத்துவது நிச்சயமாக சிறந்த விருப்பமாக இருக்கும். ஆனால் இவற்றை எப்போதும் பராமரிக்க வேண்டியது அவசியம். இதனாலேயே மக்கள் அனைவரும் கூலர்ஸ்களுக்கு பதிலாக ஏ.சி.க்களைப் பயன்படுத்த விரும்புகின்றனர். ஆனால் உங்கள் கூலர்ஸ்களின் கூலிங் தன்மையை மேம்படுத்துவதற்கும் அவற்றை ஏ.சி.க்களைப் போலவே சிறந்ததாக மாற்ற சில வழிகள் இருக்கின்றன. அவற்றை குறித்து நாம் விரிவாக காண்போம்.



சரியான காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்:

உங்கள் கூலர்ஸை பயன்படுத்த சிறந்த மற்றும் மிகவும் இயற்கையான வழி அதற்கு சரியான காற்றோட்டத்தை வழங்குவதாகும். நல்ல காற்றோட்டம் பயனுள்ள மற்றும் நீண்ட கால குளிரூட்டலுக்கு முக்கியமானதாகும். கூலர்ஸ்கள் வெளியிடும் குளிரான காற்று சுற்றுசூழலிலிருந்து இழுக்கக் கூடிய காற்றின் மூலம் இயக்கப்படுகிறது. அதாவது வெட்-ட்ரை கிராஸ் விண்டோக்களில் இருந்து சூடான காற்று கூலர்ஸ்களுக்குள் நுழைகிறது. இது காற்றை குளிர வைக்கிறது. பின்னர் குளுமையான காற்று உங்களை நோக்கி செலுத்தப்படுகிறது. எனவே உங்கள் கூலர்ஸ்களின் கூலிங் தன்மையை அதிகரிக்க தொடர்ச்சியான காற்றோட்டத்தை உறுதி செய்வது முக்கியம்.

கூலர்ஸ்களில் உள்ள நீர் தொட்டிகளை நிரப்ப வேண்டும்:

உங்கள் கூலர்ஸில் நீர் தொட்டி எப்போதும் நிரம்பியிருப்பதை உறுதிசெய்வது பயனுள்ள கூலிங்கை உறுதி செய்வதற்கான சிறந்த வழியாகும். கூலிங் பேட்கள் ஈரமாக இருக்கும் போது மட்டுமே வேலை செய்யும், இதன் மூலமாகத்தான் நீங்கள் குளிர்ந்த காற்றைப் பெறுவீர்கள். கூலிங் பேட்கள் அல்லது வெட்-ட்ரை கிராஸ் விண்டோக்கள் ஈரமாக இல்லாவிட்டால், அவை உங்கள் அறையை கட்டாயம் குளிர்விக்காது. எனவே, உங்கள் கூலர்ஸில் உள்ள தொட்டியில் நீர் பாதி குறைத்தது போல இருந்தாலே அதனை முழுவதும் நிரப்ப வேண்டியது அவசியம்.



நீர் தொட்டியில் ஐஸ் பைகள் சேர்க்கலாம்:

நீர் தொட்டிகளில் ஐஸ்கட்டிகள் அல்லது ஐஸ்கட்டி பைகளை சேர்ப்பது தொட்டியில் இருக்கும் நீரை குளிர்விக்க உதவும். எனவே குளிர்ந்த நீர் பம்ப் வழியாக சென்று பின்னர் கூலிங் பேட்களிலும் ஓடுகிறது. மேலும் கூலிங் பேட்கள் வழியாக செல்லும் போது காற்று இன்னும் குளிராக மாறுகிறது. இதனால் கூலர்ஸில் இருந்து வெளியாகும் காற்றில் உள்ள கூலிங் ஏ.சியை போலவே இருக்கும். நீங்கள் செலவழிப்பு பிளாஸ்டிக் பைகளில் தண்ணீர் ஊற்றி அதனை உறையவைத்து, பின்னர் அவற்றை கூலரின் நீர் தொட்டியில் உள்ள தண்ணீரில் போட்டுவிடுங்கள். இல்லையென்றால் ஐஸ் க்யூப்ஸ்களை கூட சேர்க்கலாம். இப்போதெல்லாம் தண்ணீரை இன்னும் குளிர்விக்க கூலர்ஸ்களுக்குள் வெவ்வேறு ஐஸ் பெட்டிகளும் இருக்கின்றன.

வெயில் காலத்தில் ஏசியே தேவையில்லை... இந்த பத்து விஷயங்களை டிரை பண்ணுங்க...!

கருத்தில் கொள்ள வேண்டிய பிற விஷயங்கள்

* நீங்கள் உங்கள் கூலரை கவனமாகக் கையாள வேண்டும். கூலர் விண்டோகளில் இணைக்கப்பட்ட ட்ரை க்ராஸை ஒவ்வொரு இரண்டு பருவங்களுக்கும் ஒரு முறையாவது மாற்ற வேண்டும். மேலும் ஒவ்வொரு பருவத்திலும் கூலர்ஸை பயன்படுத்துவதற்கு முன்பு அதனை சுத்தம் செய்து சர்வீஸ் செய்வது அவசியம்.

ஏசி வாங்கப் போறீங்களா? அப்போ இதை படித்துவிட்டுச் செல்லுங்கள்!

* அது மட்டுமல்லாமல், இது உங்கள் அறையில் சரியான இடத்தில் கூலர் நிறுவப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதன்மூலம் உண்மையில் கூலரின் வெப்பநிலையைக் குறைக்க முடியும். அதேபோல அறையில் ஜன்னல் கர்டெய்ன்களை மூடுவது மற்றும் விளக்குகளை அணைப்பது ஆகியவற்றை செய்வதன் மூலம் அறையில் சூடான காற்று நுழைவதைத் தவிர்க்கலாம்.

* கூலர்ஸின் விசிறியை இயக்குவதற்கு முன்பு நீங்கள் அதன் பம்பையும் இயக்கலாம். இது கூலிங் பேட்களை குளிர்ச்சியடைய செய்யும். எனவே கூலர்ஸ் தொடக்கத்திலிருந்தே குளிர்ந்த காற்றை வழங்க அனுமதிக்கும்.

 
Published by:Sivaranjani E
First published: