ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வீட்டுக்கு தேவையான சில டிப்ஸ்...

வீட்டுக்கு தேவையான சில டிப்ஸ்...

சுவரில் எங்காவது விரிசல், ஓட்டை ஆகியவை காணப்பட்டால், அந்த இடங்களில் அழகிய சுவர் ஓவியங்களை மாட்டி வைக்கலாம்.

சுவரில் எங்காவது விரிசல், ஓட்டை ஆகியவை காணப்பட்டால், அந்த இடங்களில் அழகிய சுவர் ஓவியங்களை மாட்டி வைக்கலாம்.

சுவரில் எங்காவது விரிசல், ஓட்டை ஆகியவை காணப்பட்டால், அந்த இடங்களில் அழகிய சுவர் ஓவியங்களை மாட்டி வைக்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

1. நகைகளில் உள்ள அழுக்கை எடுக்க ஒரு தேக்கரண்டி உப்பை நீரில் கலந்து அதில் நகைகளை போட்டு சிறிது நேரம் ஊற விடவும். பின் மென்மையான பிரஷ் கொண்டு தேய்த்தால் நகைகளில் உள்ள அழுக்குகள் போய் விடும்.

2.எவர்சில்வர் பாத்திரத்தில் இருக்கும் கரையை போக்க கரை இருக்கும் இடத்தில் சிறிது புளி வைத்து தேய்த்து கழுவினால் கறை போய் விடும்.

3.முகம் பார்க்கும் கண்ணாடியை பழைய நியூஸ் பேப்பர் கொண்டு துடைத்தால் கண்ணாடி பளிச்சென்று ஆகிவிடும்.

4.டைல்ஸ்க்கு இடையில் இருக்கும் அழுக்கை போக்க பிளீச்சிங் பவுடர் சிறிது எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் ஆக்கி பட்ஸ் கொண்டு அழுக்கு இருக்கும் இடங்களில் தேய்த்து 1/2 மணி நேரம் ஊற வைத்து பிறகு துடைத்தால் பளிச்சென்று ஆகி விடும். டைல்ஸ்சையும் இதே முறையில் சுத்தப்படுத்தலாம்.

5.நாம் தினமும் உபயோகிக்கும் பாத்திரங்களை சோப்புத் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் தேய்த்து கழுவினால் பாத்திரங்கள் பளிசசென்று ஆகி விடும்.

6.பிரிஜ்ஜை சுத்தப்படுத்த 1/2 தேக்கரண்டி பற்பசையை எடுத்து தண்ணீரில் கலக்கி மெல்லிய காட்டன் துணியால் துடைத்து பின்னர் வெறும் தண்ணீரில் துடைத்தால் பிரிஜ் பளிச்சென்று ஆகி விடும்.

7. வீட்டில் ஒரு பத்தி ஸ்டாண்ட் அதிகமாக இருந்தால் அதன் துவாரங்களில் சிறிய கலர் பூக்களை வைத்து சாமி படம் முன் வைக்கலாம்.

8. காய்கறி வெட்டும் பலகையிலுள்ள கறையை போக்க ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து கறை உள்ள இடங்களில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு கழுவினால் பலகை பளிச்சென்று ஆகிவிடும்.

9. வெங்காய வடகத்தை வெறும் கடாயில் போட்டு லேசாக சூடாக்கி விட்டு பிறகு எண்ணெயில் பொரித்தால் நன்றாக பொரிந்து மொறு மொறுப்பாக இருக்கும்.

10. அடிக்கடி தூசி பிடிப்பதாக நீங்கள் கருதும் பொருட்கள் மீது விரிப்புகளை விரித்து வையுங்கள். இது உங்கள் வேலையை சுலபமாக்கும்.

11. சுவரில் எங்காவது விரிசல், ஓட்டை ஆகியவை காணப்பட்டால், அந்த இடங்களில் அழகிய சுவர் ஓவியங்களை மாட்டி வைக்கலாம்.

12. வீட்டில் போதுமான சூரிய வெளிச்சம் வந்தால், பார்க்க பெரிய வீடு போல தோற்றமளிக்கும்.

13.வீட்டிற்கு எந்த ஒரு பொருளை வாங்கும் போதும், அந்த பொருள் வீட்டிற்கு தேவைதானா? வீட்டின் இட அளவிற்கு போதுமானதா? என்பதை யோசித்து வாங்க வேண்டும்.

14. கண்ணை பறிக்காத, பார்ப்பதற்கு மென்மையாக இருக்கும் வண்ணப் பூச்சுகளையே வீட்டின் சுவர்களுக்கு பயன்படுத்த வேண்டும். இது சிறிய வீடாக இருந்தாலும், அழகாக தெரிய வைக்கும்.

15. கட்டிலின் அடிப்பகுதி,பீரோக்களின் கீழ்ப்பகுதி போன்றவற்றை நான் அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களை வைக்க பயன்படுத்திக் கொண்டால், இட வசதி அதிகமாக இருக்கும்

மேலும் படிக்க... சமையலுக்கு தேவையான சில முக்கியமான குறிப்புகள்...

First published:

Tags: Health tips