Home /News /lifestyle /

உங்கள் வீட்டை வாடகைக்கு விடப்போறீங்களா? இதையெல்லாம் கண்டிப்பாக செய்ய வேண்டும்..

உங்கள் வீட்டை வாடகைக்கு விடப்போறீங்களா? இதையெல்லாம் கண்டிப்பாக செய்ய வேண்டும்..

காட்சி படம்

காட்சி படம்

, உங்கள் வீட்டை வாடகைக்கு விடும் முன்பு இந்த விஷயங்களை கட்டாயமாக செய்ய வேண்டும்.

அனைத்து வகையிலும் பிடிக்கும் படியான ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பது எவ்வளவு கடினமான விஷயமோ, அதேபோல வீட்டு உரிமையாளர்களுக்கும் சரியான நபர்களுக்கு தங்கள் வீட்டை வாடகைக்கு விடுவதும் கடினம் தான். ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வைத்திருப்பவர்கள் அதை ஒரு முதலீடாக மட்டும் கருதாமல் கூடுதல் வருமானத்துக்காக வாடகைக்கு விடுவது வழக்கம் தான்.

அதே நேரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு விடுவது என்று மிகவும் அத்தனை எளிதானதல்ல. பலரும் தங்கள் சொந்த வீட்டை விட்டு வேறு ஊர்களுக்கு வெளியூர் சென்று வேலை பார்க்கிறார்கள். இந்நிலையில் யாரென்று தெரியாதவர்களுக்கு வீட்டை வாடகைக்கு கொடுப்பது ஆபத்தானது. உங்கள் உரிமை மற்றும் உங்கள் சொத்தை பாதுகாக்க, உங்கள் வீட்டை வாடகைக்கு விடும் முன்பு இந்த விஷயங்களை கட்டாயமாக செய்ய வேண்டும்.

வங்கிகளில் KYCயை கட்டாயமாக்கியது போல, நீங்கள் யாருக்கு உங்கள் வீட்டை வாடகைக்குத் தரப் போகிறீர்களோ, அவரைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். அவர் வேலை செய்யும் இடம், சம்பளம், புரொபைல், உள்ளிட்ட விவரங்களை விசாரிக்க வேண்டும். மாதாமாதம் வாடகை சரியாக கொடுக்க முடியாத டெனன்ட் ஒரு பக்கம் பிரச்சனை என்றால், வீட்டை விட்டு காலி செய்ய முடியாது என்று வம்படியாக நடக்கும் டெனன்ட்டும் தொல்லையாக இருப்பார்கள். இதையெல்லாம் தவிர்க்க, சரியாக விசாரித்து சரியான நபரை வாடகைக்கு தேர்வு செய்ய வேண்டும்.



சிபில் ரிப்போர்ட் போலவே, ஒரு நபருக்கு ஏதேனும் கடன் அல்லது லிடிகேஷன் இருக்கிறதா என்பதை விசாரித்து சொல்லும் நிறுவனங்கள் உள்ளன. உங்கள் வீடு அல்லது அப்பார்ட்மென்ட்டை வாடகைக்கு கொடுக்கும் போது, தேவைப்பட்டால் இது போன்ற நிறுவனங்களின் சேவையைப் பெற்று பயன்பெறலாம்.

also read : பாத்ரூமில் துர்நாற்றம் வீசுகிறதா ? இந்த குளியலறை செடிகளை வளர்க்கலாம்..

வாடகை அல்லது லீஸ் ஒப்பந்தத்தை தயாரித்து, உரிய சாட்சிகளுடன் கையெழுத்திட வேண்டும். அதை சட்டபூர்வமாக்க, பதிவாளர் அலுவலகத்தில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். பதிவு செய்யாத ஒப்பந்தங்கள் இல்லையென்றால், டேஹ்வைப்படும் போது சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்க முடியாது. வாடகை ஒப்பந்தத்தில், ஒப்பந்தத் தேதி, செல்லுபடியாகும் காலம், அட்வான்ஸ் தொகை, மாத வாடகை, வேறு நிபந்தனைகள் உட்பட அனைத்து விவரங்களும் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.

எந்தெந்த சூழலில் வீட்டை காலி செய்ய வேண்டும் என்பதை பற்றியும் அல்லது முன்கூட்டியே எந்த தேதியில் வீட்டை காலி செய்ய வேண்டும் ஆகிய விவரங்கள், ஒப்பந்தத்தில் தெளிவாக இருக்க வேண்டும். அது மட்டுமின்றி வீட்டை காலி செய்து போகும் பொழுது கூடுதலாக கட்டணம், அட்வான்ஸ் தொகை திருப்பி செலுத்துதல், ஆகிய விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.



பொதுவாக வாடகை ஒப்பந்தம் அதிகபட்சமாக 11 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட காலத்துக்கு நீங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டால், தேவையான ஸ்டாம்ப்புகளுடன், சார்பதிவாளர் அலுவலகத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.

also read : சம்மரில் ஜாலியாக ஹனிமூன் செல்ல இந்தியாவின் 6 குளிச்சியான இடங்கள்! 

மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது ஒரு குறிப்பிட்ட கால அளவில் நீங்கள் வீட்டை அவ்வப்போது சென்று பார்வையிட்டு வருவது நல்லது. உங்கள் வீட்டை நல்ல முறையில் பராமரிக்கிறார்களா, முறைகேடான செயல்களில் ஈடுபடாமல் இருக்கிறார்களா என்பதை நேரடியாக தெரிந்து கொள்ள உதவும்.

வீட்டுக்குத் தேவையான தண்ணீர் கட்டணம் மற்றும் மின் கட்டணம், மெயின்டெயினன்ஸ் சார்ஜ் ஆகியவற்றை வீட்டை வாடகைக்கு அல்லது லீஸுக்கு எடுத்தவர் முறையாக செலுத்தி வருகிறாரா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Home, Rent

அடுத்த செய்தி