பொதுவாக வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கும்போது அவற்றை ஒரு முறைக்கு பல முறை பார்த்து பார்த்து வாங்குவோம். இவற்றில் சாதாரண பூத்தொட்டி முதல் வாஷிங் மிஷின் வரை அடங்கும். அந்த அளவிற்கு நாம் வீட்டிற்கு வாங்க கூடிய ஒவ்வொரு பொருட்களும் மிக முக்கியமானவையாக பார்ப்போம். குறிப்பாக கிச்சன் சம்பந்தமான பொருட்களை வாங்க வேண்டுமென்றால் அதற்கு கூடுதல் கவனத்தை தருவோம்.
ஒரு சாதாரண ஸ்பூன் வாங்கினாலும் சரி, மிக்சி வாங்கினாலும் சரி.. அவற்றில் உள்ள பல வகையான பிராண்ட்களில் எது சிறந்ததோ அதை தான் நாம் பெரும்பாலும் தேர்வு செய்வோம். அந்த வகையில் ஏர் பிரையர் போன்ற புது வகையான கிச்சன் உபயோக பொருட்களை வாங்கும்போதும் நாம் கவனமாக பார்த்து வாங்க வேண்டும். இதில் அவசியம் பார்க்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
ஏர் பிரையர் :
ஏர் பிரையர் என்கிற சாதனம் ஒரு கன்வெக்ஷன் அவன் போன்று வேலை செய்ய கூடியது. இவற்றில் எண்ணெய் பயன்படுத்தாமலே சமைத்து கொள்ளலாம். ஏர் பிரையர் பயன்படுத்தி சமைக்க கூடிய உணவுகள் மிருதுவாகவும், மொறுமொறுப்பாகவும் மாறி, சாப்பிடுவதற்கு மிக சுவையாக இருக்கும். ஆரோக்கியமான வகையில் எடையை சீராக வைக்க முயற்சிப்பவர்களுக்கு, ஏர் பிரையர் சிறந்த தேர்வாகும். இது மைக்ரோவேவ் அடுப்பை விட சிறந்தது என்று கூறப்படுகிறது. இதனால் தான் தற்போது இந்த வகையான அடுப்பு வகைகளை பலர் விரும்பி வாங்குகிறார்கள்.
பயன்கள் :
நீங்கள் ஏர் பிரையர் வாங்க விரும்புகிறீர்கள் என்றால், அதற்கு முன் சிலவற்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்த சாதனத்தில் நீங்கள் எதை வேண்டுமானாலும் சமைக்கலாம். அதாவது உருளைக்கிழங்கு முதல் சேனை கிழங்கு வரையிலும், வறுக்கப்பட்ட காய்கறிகள், இறைச்சி, மீன், கேக் மற்றும் குக்கீகளையும் சமைத்து அசத்தலாம். மேலும், சரியான செய்முறையைப் பின்பற்றினால், முழு கோழியையும் இதன் மூலம் சிறப்பாக சமைத்து விட முடியும்.
இந்த ஏர் பிரையர் ஒரு சிறிய சாதனம். எனவே சமையலறையில் எங்கு வேண்டுமானாலும் இதை வைத்து கொள்ளலாம். நீங்கள் சமைக்கின்ற உணவு க்ரீஸ் இல்லாததால், இதனை சுத்தம் செய்வதும் எளிது. உடல் எடையை குறைக்க இந்த ஏர் பிரையர்கள் மிகவும் உதவும்.
சவால்கள் :
ஏர் பிரையர்கள் பயனுள்ளவையாக இருந்தாலும் இவை அதிக விலை கொண்டவை. மேலும், ஒரே சமயத்தில் பலருக்கு இதன்மூலம் சமைக்க முடியாது. ஏர் பிரையரில் சமைத்த உணவு குறைந்தபட்ச எண்ணெயில் சமைக்கப்படுகிறது, இதனால் உணவை உலர்வாகவும், ஈரப்பதம் இல்லாததாகவும் மாற்றுகிறது. சில சமயங்களில் உணவு இதன் தட்டில் ஒட்டிக் கொண்டால், அதை சுத்தம் செய்வதும் கஷ்டமாக விடுகிறது.
எனவே, ஏர் பிரையர் வாங்குன்முன் மேற்சொன்னவற்றை கவனித்து வாங்குவது நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.