வீட்டு உபயோகப்பொருட்களில் பிளாஸ்டிக்கை தவிருங்கள்..ஸ்டீல் பாத்திரங்களே சிறந்தது..! ஏன் தெரியுமா..? பிக் பேங்க் தியரி நடிகை பதிவு..!

மயீம் பியாலிக்

ஸ்டீல் பாத்திரங்கள் பார்ப்பதற்கு ஸ்டைலிஷாகவும் , அழகியலாகவும் தெரியவில்லை என்றாலும், அவற்றில் இருக்கும் நன்மைகள் ஏராளம். பிளாஸ்டிக் போலல்லாமல், அவற்றில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லை என்பதே நன்மை தரும் விஷயம்தான்.

 • Share this:
  லாக்டவுன் சமயத்தில் பலரும் தேடித் தேடி பார்த்த படங்களில் பிக் பேங்க் தியரி சீரிஸும் ஒன்று. அதில் நடித்த 45 வயதான மயீம் பியாலிக் நடிப்பும் பலரது கவனத்தை ஈர்த்தது. சமூகவலைதளங்களிலும் நெட்டிசன்கள் இவரை விட்டு வைக்கவில்லை. எங்கும் இவர் குறித்த போஸ்டுகள்தான்.

  இப்படி உலகம் முழுவதும் தன் புகழை சம்பாதித்து வைத்துள்ள மயீம் பியாலிக் ஃபேஸ்புக்கில் போட்ட ஒரு பதிவு பலரது கவனத்தை ஈர்த்தது. அதாவது தான் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்தி ஸ்டீல் பாத்திரங்களையே அதிகம் உபயோகிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளார். இதனால் மக்களிடம் பாராட்டு மழையைப் பெற்றுள்ளார். ஏனெனில் ஸ்டீல் பாத்திரங்களின் பயன்பாடு இந்தியா போன்ற வெகுசில நாடுகளில் மட்டும்தான் பயன்படுத்தப்படுகிறது. அப்படியிருக்க ஸ்டீல் பாத்திரங்களின் நன்மை அறிந்து அதை பயன்படுத்த முன் வந்திருப்பது பாராட்டிற்குறிய விஷயம் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  அவர் பகிர்ந்து கொண்ட அந்த போஸ்டில் “ எனக்கு 12 மற்றும் 15 வயதில் பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால் இன்னும் நான் பிளாஸ்டிக்கை உபயோகிப்பது இல்லை. பல வருடங்களுக்கு முன்பிலிருந்து பிளாஸ்டிக்கை தவிர்த்துவிட்டேன். அதில் நிறைய கெமிக்கல்கள் கலந்திருக்கின்றன. நான் என் பிள்ளைகளுக்கு உணவை சூடான பதத்தில்தான் தருவேன்.

  அப்படியிருக்க கெமிக்கல் பயன்பாடு நிறைந்த பிளாஸ்டிக் அவர்களுக்கு உடல் நல பாதிப்புகளை உண்டாக்கும். எனவே ஸ்டீல் பாத்திரங்கள்தான் அதற்கு சிறந்தவை. ஸ்டீல் பாத்திரங்களை பராமரிப்பதும், பாதுகாப்பதும் எளிதான செயல். இங்கு இந்தியானா என்னும் சிறு கம்பெனிதான் இதை விற்பனை செய்கிறது. அவர்களுக்கு நன்றி. ஸ்டீல் பயன்பாட்டால் என் குடும்பத்தினர் ஆரோக்கியமாக இருக்கின்றனர்.” என்று கூறியுள்ளார்.  ஸ்டீல் பயன்பாட்டின் நன்மைகள் :

  ஸ்டீல் பாத்திரங்கள் பொதுவாக பல இந்திய வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. அவை பார்ப்பதற்கு ஸ்டைலிஷாகவும் , அழகியலாகவும் தெரியவில்லை என்றாலும், அவற்றில் இருக்கும் நன்மைகள் ஏராளம். பிளாஸ்டிக் போலல்லாமல், அவற்றில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லை என்பதே நன்மை தரும் விஷயம்தான். உணவுகளை சமைப்பதற்கும், சேமித்து வைப்பதற்கும் ஸ்டீல் பாத்திரங்கள் பாதுகாப்பானவை.

  நீங்கள் சமையலறையை வாஸ்து படி வடிவமைத்திருக்கிறீர்களா ?

  மற்ற உலோகங்களைப் போலவே ரசாயனங்கள் அல்லது கம்பி சுவை வெளியேறும் அபாயம் இல்லை. தவிர, அவை நீடித்தவை, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படலாம், மேலும் அவற்றை எளிதாக சுத்தம் செய்யலாம், அவை பட்ஜெட்டுக்கு ஏற்றவை.

   

   
  Published by:Sivaranjani E
  First published: