• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மாடியில் செடி வளர்க்கிறீங்களா? நடிகர் மனோபாலா சொல்லும் இந்த டிப்ஸ் கண்டிப்பா உதவும்!

மாடியில் செடி வளர்க்கிறீங்களா? நடிகர் மனோபாலா சொல்லும் இந்த டிப்ஸ் கண்டிப்பா உதவும்!

மாடித்தோட்டம் டிப்ஸ்

மாடித்தோட்டம் டிப்ஸ்

40க்கும் மேற்பட்ட செடிகளை வளர்த்து இயற்கை முறையில் மினி விவசாயமே செய்து வருகிறார்.

  • Share this:
    விளை நிலம் மற்றும் போதிய இட வசதி இல்லை என்பவர்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காவே கண்டுப்பிடிக்கப்பட்டது தான் மாடித்தோட்டம்.

    பிரபலங்கள் பலரும் கொரோனா காலத்தில் இதை ஒரு பொழுதுபோக்காக தொடங்கி அதையே இப்ப முழு நேரமும் கவனம் எடுத்து பராமரித்து வருகின்றனர். குறிப்பாக மாடித்தோட்டத்தை ஊக்கப்படுத்த வேளாண் துறை அதிகாரிகளும் கைக்கொடுக்கின்றனர். சொல்லப்போனால் மாடித்தோட்டத்தில் ஏகப்பட்ட லாபங்களும் உண்டு. எந்த மருந்தும் சேர்க்காமல் இயற்கையாக விளைவித்த காய்கறிகளை உண்பது உடலுக்கும் ஆரோக்கியம் சேர்க்கும்.

    சமந்தா, சீதா, சிவகார்த்திகேயன், காயத்ரி ஜெயராமன், சுஹாசினி என பல பிரபலங்கள் அண்மை காலமாக தங்களது மாடித்தோட்டங்களை பற்றி பேசி வருகின்றனர். அதே போல் மாடித்தோட்டம் கொரோனா காலத்தில் மிகச் சிறந்த பொழுபோக்காகவும் உள்ளது. காய்கறிகளை பயிரிடுவது, செடிகளை வளர்ப்பது அதற்கு சரியான உரத்தை சேர்த்து பராமரிப்பது என மாடித்தோட்டம் உங்களுடைய பொறுமையை அதிகரிக்கவும் உதவும் என்கின்றனர் வேளாண் துறையினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மாடித்தோட்டத்தில் வெண்டை, கத்தரி, முருங்கை, கீரை வகைகள், பூக்கள், மூலிகை செடிகள் வளர்ப்பது வீட்டிற்கு குளர்ச்சியும் தரும். நடிகர் மனோ பாலா தன்னுடைய வீட்டுய் மாடியில் 40க்கும் மேற்பட்ட செடிகளை வைத்து பராமரிக்கிறார். வெறும் 4 செடிகளை வைத்து கொரோனா காலத்தில் மாடித்தோட்டம் தொடங்கியவர் இன்று 40க்கும் மேற்பட்ட செடிகளை வளர்த்து இயற்கை முறையில் மினி விவசாயமே செய்து வருகிறார். அவருடைய மாடித்தோட்டத்தில் அவர் பின்பற்றும் டிபஸ்களை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

    முதலில் மாடித்தோட்டத்தில் குளிர்ச்சி தேவைப்படும் செடிகளைச் சுவர் ஓரமாக நிழல் படும் இடங்களில் தான் வைக்க வேண்டுமாம். ஒவ்வொரு செடிக்கும் இடையில் இடைவெளி என்பது கட்டாயமாம், அதுமட்டுமில்லை முடிந்தவரை ஒரு பையில் ஒரு செடியை மட்டுமே வளர்பது நல்லது என்கிறார். செடி வளர்க்கும் பையில் மண் மற்றும் , தேங்காய் நார்க் கழிவுகளை சேர்த்து வைத்து அதில் தான் செடிகளை வளர்க்கிறாராம். அப்படி வளர்த்தால் தான் காய், கனிகளை தாங்கும் சத்தான செடி வளருமாம். 15 நாள்களுக்கு ஒருமுறை பூச்சிகள் தாக்குதலில் இருந்து தப்பிக்க வேப்ப எண்ணெய் பயன்படுத்துகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: