Home /News /lifestyle /

எவர்சில்வர், செராமிக் மற்றும் டெஃப்ளான்... மூன்றில் சமையலுக்கு சிறந்த பாத்திரம் எது..?

எவர்சில்வர், செராமிக் மற்றும் டெஃப்ளான்... மூன்றில் சமையலுக்கு சிறந்த பாத்திரம் எது..?

சமையல் குறிப்பு

சமையல் குறிப்பு

டெஃப்ளான் என்பது ஒரு செயற்கை ரசாயனமாகும், இது சமையல் பாத்திரத்தின் மேற்பரப்பை பூசுவதற்கு

ஆதி மனிதன் முதல் தற்போது ஆன்லைன் வாழும் மனிதர்கள் வரை நடை, உடை, வாகனம், வளர்ப்பு பிராணி என பல விஷயங்களில் பரிமாற்றம் அடைந்ததைப் போலவே, சமையல் பாத்திரங்களிலும் வேற லெவலுக்கு அப்டேட் ஆகியுள்ளார். மண்பாண்டத்தில் ஆரம்பித்து தற்போது செராமிக் பாத்திரங்கள் வரை பல வகைகள் வந்துவிட்டன.

நமது முன்னோர்கள் மண் (பானைகள்), பித்தளை, தாமிரம் மற்றும் வார்ப்பிரும்பு போன்ற உள்ளூரில் கிடைக்கக்கூடிய மலிவு மற்றும் எளிதில் அணுகக்கூடிய பொருட்களால் செய்யப்பட்ட பாத்திரங்களில் சமைத்தனர். ஆனால் இப்போது என்னென்ன பொருட்களை எல்லாம் வைத்து எதை சமைக்கப்போகிறேன் என்பதில் காட்டும் கவனத்தை எந்த பாத்திரத்தில் சமைக்கப்போகிறோம், அது ஆரோக்கியமானதா? என்பதைப் பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை. நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்களில் எது சிறந்தது, அதில் உள்ள நன்மைகள் என்ன என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

பாட் அண்ட் ஃபேன்ஸ்:

நீங்கள் ஒரு புதிய கிச்சனை வடிவமைக்க போகிறீர்கள் அல்லது புதிய சமையலறைக்கு கூடுதல் உபகரணங்களை வாங்க விரும்புகிறீர்கள் என்றால், சரியான சமையல் பாத்திரங்களை வாங்குவது என்பது ஆரோக்கியமான பாத்திரங்களை தேர்வு செய்வதில் இருந்து தொடங்குகிறது. சரியான சமையல் பாத்திரங்கள் உங்கள் சமையல் செயல்பாட்டில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன.



ஒவ்வொரு வகை சமையல் பாத்திரங்களுக்கும் நன்மை தீமைகள் உள்ளன, மேலும் சில சமையல் பாத்திரங்கள் சில சமையல் முறைகளுக்கு சிறப்பானதாக இருக்கும். நீங்கள் சமைக்கும் உணவுக்கு மிகவும் பொருத்தமான பாத்திரங்களை தேர்வு செய்வது கட்டாயமாகும். டெல்ஃபான், துருப்பிடிக்காத எஃகு மற்றும் பீங்கான் ஆகிய மூன்றில் சரியான மற்றும் ஆரோக்கியமான சமையல் பாத்திரங்கள் எவை என்பது பற்றி விரிவாக விளக்கியுள்ளோம்.

1. டெஃப்ளான் பாத்திரங்கள்:

நன்மை:

டெஃப்ளான் என்பது ஒரு செயற்கை ரசாயனமாகும், இது சமையல் பாத்திரத்தின் மேற்பரப்பை பூசுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் குறைவான எண்ணெய்யை பயன்படுத்தினாலும் பாத்திரங்களில் உணவு ஒட்டிக்கொள்ளாது. டெஃப்ளான் சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம், உணவில் எண்ணெய் உபயோகத்தின் அளவைக் குறைக்கவும், அத்தகைய சமையல் பாத்திரங்களை கழுவும் நேரத்தை குறைக்கவும் உதவுகிறது. சந்தையில் கிடைக்கும் மற்ற சமையல் பாத்திரங்களுடன் ஒப்பிடுகையில் டெஃப்ளான் மலிவானது

தீமைகள்:

டெஃப்ளான் ஒரு செயற்கைப் பொருள் மற்றும் மிகவும் பயனுள்ள பிளாஸ்டிக் வகையைச் சேர்ந்தது மற்றும் நச்சுகளை வெளியிடுவதாக அறியப்படுகிறது. அதிக வெப்பத்தில், சமையல் பாத்திரங்களின் பூச்சு உடைந்து நச்சு இரசாயனங்களை காற்றில் வெளியிடத் தொடங்குகிறது. இந்த புகைகளை உள்ளிழுப்பது அல்லது உங்கள் உணவில் இந்த இரசாயனங்கள் கலந்திருப்பது கூட ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். டெல்ஃபான் சமையல் பாத்திரங்களின் ஆயுட்காலம் குறைவாக உள்ளது, ஏனெனில் பூச்சு காலப்போக்கில் தேய்ந்துவிடும், மேலும் உணவுகள் கடாயில் ஒட்டிக்கொள்ளத் தொடங்குகின்றன.



எவர்சில்வர் பாத்திரங்கள் :

நன்மை:

எவர் சில்வர் பாத்திரங்கள் துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் பிரதானமானவை. அவர்கள் ஒவ்வொரு சமையலறையிலும் கண்ணைக் கவரும் வகையில் இடம் பிடித்திருப்பதை நாம் பார்த்திருப்போம். துருப்பிடிக்காத எஃகு சமையல் பாத்திரங்கள் பன்முகத்தன்மை வாய்ந்தவை, அவை சமையலறையின் முக்கிய பங்காற்றுகிறது. கறி முதல் பாஸ்தா சாஸ் வரை எந்த வகையான உணவு வகைகளையும் சமைப்பதற்கு ஏற்றதாக உள்ளது.

மிகவும் நீடித்து உழைக்க கூடியது மற்றும் சுத்தம் செய்ய எளிதானது. எளிதில் ஸ்கிராச் விழாது. பாத்திரத்தில் எந்த பூச்சும் இல்லாததால் நச்சுத்தன்மையற்றது மற்றும் அதிக வெப்பத்தில் எளிதாக சமைக்க முடியும்.

அன்றாட உணவில் இந்த 6 சிறு தானியங்களை சேர்த்துப்பாருங்கள் : உடல் நலப் பிரச்சனைகளே வராது..!

தீமைகள்:

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், துருப்பிடிக்காத எஃகு சமையல் பாத்திரங்கள் அதிக வெப்பத்தில் சமைக்க பாதுகாப்பானவை அல்ல.

துருப்பிடிக்காத எஃகு உணவு ஒட்டாமல் இருக்க எண்ணெய்கள் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றின் அதிகப்படியான பயன்பாடு தேவைப்படுகிறது. மீதமான தீயில் சமைக்க கூடிய உணவு வகைகளை எவர்சில்வர் பாத்திரங்களில் சமைக்க முடியாது. சந்தையில் கிடைக்கும் மற்ற சமையல் பாத்திரங்களுடன் ஒப்பிடுகையில் விலை அதிகம்



செராமிக் பாத்திரங்கள்:

நன்மை: பீங்கான் பாத்திரங்கள் PTFE மற்றும் PFOA போன்ற ரசாயனங்கள் இல்லாதது. மேலும் கீறல் ஏற்படாது என்பதால் இது பயன்படுத்த எளிதானது. பீங்கான் பாத்திரங்கள் உலோகங்கள் அல்லது நச்சு இரசாயனங்கள் ஆகியவை இன்றி, பாதுகாப்பான சுகாதாரமான கனிம பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.பீங்காசமையல் பாத்திரங்கள் மெதுவாக வெப்பமடைகின்றன, ஆனால் வெப்பத்தை நன்கு தக்கவைத்து, உங்கள் பாத்திரத்தின் ஆயுளை நீட்டிக்க உதவுகின்றன.

தீமைகள்:

பீங்கான் பூச்சு நீடித்தது அல்ல, ஏனெனில் அது காலப்போக்கில் விரிசல், மற்றும் தேய்ந்துவிடும். மற்ற நான்-ஸ்டிக் பாத்திரங்களுடன் ஒப்பிடுகையில் இதன் விலை அதிகம். பீங்கான் சமையல் பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் துகள்கள் சிறிய கனிமத் துகள்களால் ஆனவை, இதனால் உணவு சமைக்கும் மேற்பரப்புடன் முழுமையாக தொடர்பு கொள்வதைத் தடுக்கிறது. பீங்கான் சமையல் பாத்திரங்கள் மிகவும் மென்மையானவை மற்றும் கவனமாக கையாளப்பட வேண்டும், எனவே பாத்திரங்களை கழுவி வைப்பது மிகவும் நுட்பமான வேலையாக உள்ளது.

ஒவ்வொரு வீட்டிலும் பல்வேறு பொருட்களால் செய்யப்பட்ட சமையல் பாத்திரங்களின் கலவை உள்ளது என்று நாம் கூறலாம். முடிவில், தனிப்பட்ட விருப்பம், சமையல் பாணி மற்றும் உணவு வகைகள் ஆகியவை உங்கள் முடிவை பாதிக்கும் சில காரணிகளாக இருக்கும். எந்த சமையல் பாத்திர வகையை ஒருவர் முடிவு செய்தாலும், ஆரோக்கியமாக சமைக்கவும், அந்த பாத்திரங்களை கவனித்து கொள்ளவதும் அவசியமானது ஆகும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Cooking tips

அடுத்த செய்தி