மும்பையில் ஐரோப்பிய மாடல் டெக்கரேஷனில் கட்டப்பட்டுள்ள நடிகை டாப்ஸியின் புதிய வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
தமிழ் திரைப்பட உலகில் தனுஷூக்கு ஜோடியாக ஆடுகளம் திரைப்படத்தில் அறிமுகமான டாப்ஸி காஞ்சனா 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். பின்னர், தெலுங்கு, கன்னடம் மொழிப் படங்களில் நடித்த டாப்ஸி பாலிவுட்டிலும் கால்பதித்தார். மும்பையில் தனி வீடு ஒன்று வாங்கி அங்கேயே செட்டிலாகிவிட்டார். தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்களுக்கு நீண்ட இடைவெளிவிட்ட அவர் தொடர்ந்து பாலிவுட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
மேலும், சமூக பிரச்சனைகளுக்கும் தொடர்ந்து டிவிட்டரில் குரல் கொடுத்து வருகிறார். ஏற்கனவே மும்பையில் ஒரு வீட்டில் குடியிருந்து வரும் டாப்ஸி தற்போது புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். தனது தங்கை சாங்கூன் ரசனைக்கு ஏற்ப ஐரோப்பிய மாடலில் வீடு முழுமைக்கும் டெக்கரேஷன் செய்துள்ளார். மும்பையின் பரபரப்பான மற்றும் நெரிசல் மிகுந்த நகரங்களில் ஒன்றான அந்தேரியில் டாப்ஸியின் புதுவீடு அமைந்துள்ளது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீட்டின் அழகு புகைப்படங்களை டாப்ஸி அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.
லிவ்விங் ரூம், பெட்ரூம் மற்றும் உடற்பயிற்சி செய்வதற்காக பிரத்யேக ஜிம் என சகல வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாப்ஸி பகிரும் ஒவ்வொரு புகைபடத்தையும் பார்த்து வியக்கும் நெட்டிசன்கள், வீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள நேர்த்தியான வடிவமைப்புகள் ஈர்க்கும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். சேலையில் இருக்கும் புகைப்படம், வொர்க் அவுட் செய்யும் புகைப்படம் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் என இன்ஸ்டா பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்துக்கு ரசிகர்கள் லட்சகணக்கில் லைக்ஸ்களை வாரி வழங்கி வருகின்றனர்.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவர் இந்த ரூமில் இருக்கிறாரோ? அதற்கேற்ற எக்ஸ்பிரஷூடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். பால்கனியில் அமர்ந்திருக்கும் போது கிளாமராக அடல்ட் போஸூம், வொர்க்அவுட் ரூமில் இருக்கும்போது ஆழ்ந்த தியானத்திலும் இருக்கிறார்.
விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட சமூக பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அனுராக் காஷ்யப் மற்றும் டாப்ஸியின் மும்பை வீட்டில் அண்மையில் வருமானவரித்துறை சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், வருமானவரிச் சோதனை முடிந்தபிறகு டாப்ஸி மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் கூலாக புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். வருமானவரிச் சோதனைக்கு பிறகு டாப்ஸியின் வீடும் கவனம் பெற்ற நிலையில், அவரது வீட்டின் அழகிய புகைப்படங்கள் நெட்டிசன்களின் கண்களை பறித்துள்ளது.
பாலிவுட், கோலிவுட் என எந்த திரைத்துறையில் இருக்கும் நடிகர்களாக இருந்தாலும் மும்பையில் ஒரு வீடு வாங்குவது என்பது கனவாக வைத்திருக்கின்றனர். அந்தளவுக்கு மும்பை நகரமானது வர்த்தக மையமாக மட்டுமல்லாது திரைத்துறையினர் மற்றும் கோடீஸ்வரர்கள் வசிக்கும் பகுதியாக உள்ளது. நாட்டின் முக்கிய தொழிலதிபரான அம்பானி முதல் இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் வரை ஏராளமான பிரபலங்கள் மும்பையில் வசித்து வருகின்றனர். விராட்கோலி, யுவராஜ் சிங் உள்ளிட்டோரும் ஒரே அப்பார்மென்டில் வசித்து வருகின்றனர்.