சைவம், அசைவம், நார்த் இந்தியன், சவுத் இந்தியன் என்ற எந்தவிதமான வித்தியாசமும் இன்றி இந்திய உணவுகளில் விதவிதமான மசாலா பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய மசாலாப் பொருட்களில் பெரும்பாலானவை காயவைக்கப்படுவதால் நீண்ட காலத்திற்கு சேமித்து வைக்க முடியும். இருப்பினும் வானிலை அல்லது மசாலா பொருட்களை சேமித்து வைக்கும் முறை காரணமாக அவை கெட்டுப்போக அதிக வாய்ப்புள்ளது.
மேலும் இந்திய சமையலைப் பொறுத்தவரை மிளகாய், மஞ்சள், சீரகம், மல்லி, மிளகு, பெருஞ்சீரகம், ஜாதிக்காய், ஏலக்காய் உள்ளிட்ட மசாலா பொருட்கள் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிக்க பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் தவறான முறையில் அவற்றை சேமித்து வைக்கும் போது அதன் நறுமணம் மற்றும் மருத்துவ குணங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே அஞ்சறை பெட்டி முதல் ஸ்டோரேஜ் கன்டெயினர்கள் வரை மசாலா பொருட்களை புத்துணர்ச்சி மாறாமல் நீண்ட நாட்களுக்கு சேமித்து வைப்பது எப்படி என பார்க்கலாம்...
காலாவதி தேதியில் கவனம் தேவை:
மசாலா மற்றும் மூலிகை பொருட்களுக்கு காலாவதி தேதி என்பது கிடையாது என்றாலும், சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கி வரப்படும் பொருட்களில் ‘எக்ஸ்பைரி டேட்’ என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். இதற்கு பொருள் அந்த தேதிக்குள் மேல் நீங்கள் சேமித்து வைக்கு மசாலா பொருட்கள் பயன்படுத்த தகுதியவற்றை என்பது ஆகும். குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு, மசாலா அதன் சுவையை இழக்கத் தொடங்குகிறது மற்றும் காலப்போக்கில் தரமும் குறையக்கூடும் என்பதால், குறிப்பிட்ட தேதிக்குள் அதனை பயன்படுத்திவிடுவது நல்லது.
Also Read : உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சக்தி வாய்ந்த 3 ஆயுர்வேத மூலிகைகள்!
மசாலா பொருட்களை தூக்கியெறிய சரியான காலம்:
பேக்கிங்கில் வாங்கும் மசாலா பொருட்களை அதில் குறிப்பிட்டுள்ள தேதி முடிந்த பிறகும் பயன்படுத்தலாம், ஏனெனில் அதில் தரம் சற்று குறைவாக இருக்குமோ தவிர உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வித தீங்கும் ஏற்படாது.
ஆனால் உங்கள் மசாலாப் பொருட்கள் வித்தியாசமான வாசனையை வீசத் தொடங்கும் போதும், அதனை சேமித்துள்ள டப்பாக்கள் அல்லது கண்ணாடி பாட்டில்களில் பூச்சிகள் இருப்பதை பார்த்தீர்கள் என்றால், அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அதேபோல் மசாலாக்களில் ஈரப்பதம் அல்லது வாசனையில் மாற்றம் ஆகியவற்றை உணர்ந்தாலும் அதனை தொடர்ந்து பயன்படுத்துவதற்கான காலம் முடிந்து விட்டது என்பதைக் குறிக்கிறது.
மசாலா பொருட்களை சேமித்து வைக்க உதவும் டிப்ஸ் :
மசாலா பொருட்களின் அசல் தரம் அப்படியே இருக்க, கடையில் இருந்து வாங்கி வரப்பட்ட பாக்கெட் அல்லது பெட்டியில் மசாலாவை சேமித்து வைக்கலாம்.
மசாலா பொருட்களை மொத்தமாக வாங்கி வைப்பதை தவிர்த்துவிட்டு, மாத தேவையை கணக்கிட்டு, அவ்வப்போது வாங்கிக்கொள்ளலாம். மசாலா பொருட்களை அவ்வப்போது வாங்குவது அதன் தரம், வாசனை போன்றவற்றை தக்க வைக்க உதவும்.
Also Read : தூங்க செல்லும் முன் இரவில் பால் குடிப்பது தவறா..? நிபுணர்களின் பதில்..!
மசாலா பொருட்களை காற்றுபுகாத ஏர் டைட் கன்டெய்னர்கள் அல்லது கண்ணாடி பாட்டில்களில் ஸ்டோர் செய்து வைக்க வேண்டும்.
மசாலா ஜாடிகளை வெளிச்சம் குறைவாகப்படக்கூடிய, உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். இது மசாலாவின் நிறம் மங்குவதைத் தடுக்க உதவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kitchen Hacks, Spices