• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • அழகான குட்டி ரிசார்ட்டைப்போல் காட்சியளிக்கும் சமந்தாவின் வீடு..

அழகான குட்டி ரிசார்ட்டைப்போல் காட்சியளிக்கும் சமந்தாவின் வீடு..

சமந்தா

சமந்தா

நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா தற்போது ஹைதராபாத்தில் புதிதாக வாங்கிய வீட்டில் வசித்துவருகின்றனர்.

  • Share this:
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் தற்போது ஹைதராபாத்தில் புதிதாக வாங்கிய வீட்டில் வசித்துவருகின்றனர். பிற பிரபலங்களை போலவே சமந்தாவும் ஊரடங்கில் தான் செய்யும் நடவடிக்கைகள் குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சமந்தாவை போலவே அவர் வசித்து வரும் வீடும் இன்ஸடாகிராமில் அதிக கவனம் ஈர்த்து ஹிட் அடித்திருக்கிறது. யோகா செய்ய பிரமாண்ட அறை, செல்ல நாய்களுடன் மாலை பொழுதைக் கழிக்க நீச்சல் குளம், தியானம் செய்யும் அறை, மினி தியேட்டர் என குட்டி ரெசாட்டைப் போல சமந்தாவின் வீடு அட்டகாசமாக காட்சியளிக்கிறது. சமந்தாவின் வீட்டை பார்த்த பலரும் உச்சிக்கொட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார். வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை அவர் வளர்த்துள்ளார். அதன் புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், எப்படி இதை சுலபமாக செய்வது என்ற டிப்ஸையும் கொடுத்துள்ளார். ஒரு ட்ரே, தேவையான விதைகள், ஒரு ரூம் இருந்தால் போதுமாம், சமந்தாவை போல வீட்டில் இருந்தபடி விவசாயம் செய்யலாம். மேலும் தனது வீட்டின் அழகான காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் ஷேர் செய்துள்ளார்,
மனதை மயக்கும் ரம்மியமான இடம். அறை முழுவதும் வெள்ளைநிறப் பொருட்களால் சூழப்பட்டுள்ளது. இந்த ஒரு சூழ்நிலையில் அமைதியான தியானம் மன நிம்மதியை தரும்.
இரவு நேரத்தில் செயற்கை விளக்குகளால் ஒளிரும் கார்டன் ஏரியா பார்க்கவே பரவசமூட்டுகிறது
பின்புறம் இருக்கும் இடம் காண்போரை வாவ் என்று சொல்ல வைக்கும் அளவிற்கு கட்டுமானம் வேற லெவலில் உள்ளது. எந்த பக்கம் திரும்பினாலும் செடிகொடிகள், பறவைகள், நீர் என எந்த பக்கம் திரும்பினாலும் இயற்கை ரம்யமான சூழல் அசத்துகிறது.அமைதியின் சொரூபமான புத்தர் அவருக்கு கீழ் செடிகள் புல்தரையில் அமர்ந்து நேரத்தை கழிப்பது உண்மையில் நல்ல சுகத்தை அளிக்கும்.
செல்லப்பிராணியுடன் ஒரு குட்டித்தூக்கத்தை போட மினி தியேட்டர் நல்ல வாய்ப்பை அளித்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு கனம் இந்த ஓட்டம் எதற்காக என்று பார்த்தால் அது பணத்திற்காகத்தான் என்று தெரிகிறது. அதை நாம் தவறு என்று சொல்லிவிட முடியாது. பணத்திற்காக ஓடுகிற ஓட்டத்தில் சிறிது நேரம் இளைப்பாற வீடு ஒன்று தான் சரியான இடம். அந்த வீட்டை அழகு பொருட்களாலும், அமைதி பூங்காவாக மாற்றினால் நிச்சயம் நமக்கு நிம்மதி கிடைக்கும். அந்த வகையில் நடிகை சமந்தாவின் வீட்டைப் போல் ஒரு வீடு நமக்கும் கிடைத்தால் நிச்சயம் அது நமக்கு சொர்க்கம் தான்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: