• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பழைய துணிகளை பயன்படுத்தி எப்படி மாஸ்க் செய்யலாம்..? கற்றுத்தருகிறார் அமைச்சர் ஸ்மிருதி இராணி..!

பழைய துணிகளை பயன்படுத்தி எப்படி மாஸ்க் செய்யலாம்..? கற்றுத்தருகிறார் அமைச்சர் ஸ்மிருதி இராணி..!

மாஸ்க்

மாஸ்க்

பழைய துணி இருந்தால் அதை பயன்படுத்தி மாஸ்க் எப்படி தயாரிக்கலாம் என ஸ்மிருதி இரானி பகிர்ந்திருப்பது பலருக்கும் உதவிகரமானதாக உள்ளது

  • Share this:
    கொரோனா பரவலைத் தடுக்க மாஸ்க் அணிவது கட்டாயம் என அரசு சார்பிலும், மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர். கொரோனா தடுப்புப் பணிகளுக்காக உழைக்கும் அமைச்சர்களும் மாஸ்க் அணிந்து பணியாற்றுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

    இந்நிலையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீட்டிலேயே எப்படி மாஸ்க் செய்வது என்ற விளக்கப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    கொரோனா பரவலைத் தடுக்க பலரும் மாஸ்க் அணிவதால் நாடு முழுவதும் மாஸ்க் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், காவல் துறையினர் என மாஸ்க் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தட்டுப்பாடு குறைந்தபாடில்லை.



    இத்தகைய நெருக்கடியை சமாளிக்க எளிய முறையில் வீட்டிலேயே பழைய துணி இருந்தால் அதை பயன்படுத்தி மாஸ்க் எப்படி தயாரிக்கலாம் என ஸ்மிருதி இரானி பகிர்ந்திருப்பது பலருக்கும் உதவிகரமானதாக உள்ளது. அந்த படங்களில் அவர் தாமாகவே வீட்டில் தனக்கான மாஸ்கை தயாரித்துக்கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த படத்தொகுப்புகள் ட்விட்டரில் பலரால் பகிரப்படுவதோடு இது மக்களுக்கு பயனுள்ள தகவல் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    பார்க்க :

     

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: