ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உஷார்: உங்கள் மெத்தையில் இந்த விஷயங்கள் தென்பட்டால் ஆரோக்கியத்திற்கு ஆபத்து! 

உஷார்: உங்கள் மெத்தையில் இந்த விஷயங்கள் தென்பட்டால் ஆரோக்கியத்திற்கு ஆபத்து! 

காட்சி படம்

காட்சி படம்

பொருத்தமில்லாத மெத்தைகள் தூக்கத்தை மட்டுமல்ல உடல் நலனையும் பாதிப்பதை பல்வேறு ஆய்வுகள் மூலம் நிபுணர்களும், மெத்தை தயாரிப்பாளர்களும் நிரூபித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கழனி முதல் கம்யூட்டர் வரை எந்த வேலை செய்பவர்களாக இருந்தாலும் அவர்களது அசதியை போக்கவும், அடுத்த நாளுக்கான சுறுசுறுப்பை மீட்டெடுக்கவும் உதவுவது நிம்மதியான தூக்கமாகும். இரவில் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கத்தை அனுபவிக்க படுக்கை அறை, கற்றோட்டம், தாராளமான கட்டில் என அனைத்துமே இருந்தாலும், மெத்தை சரியாக இல்லை என்றால் நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்க முடியாது.

உடலுக்கு அமைதியும், ஆதரவும் தரக்கூடியதாக உங்கள் மெத்தை இருந்தால் மட்டுமே நல்ல தூக்கத்தை அடைய முடியும். அதுமட்டுமின்றி ஒரு மோசமான மெத்தையை பயன்படுத்துவது உடலில் முதுகு, கழுத்து மற்றும் தலை ஆகிய பகுதிகளில் பாதிப்புகளை உண்டாக்க கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக பல ஆண்டுகளாக ஒரே மெத்தையை பயன்படுத்தி வரும் நபர்களுக்கு அதில் உள்ள அசெளகரியங்கள் காரணமாக உடல் நலக்கோளாறுகள் ஏற்படலாம் என்பதால், உடனடியாக புதிய மெத்தையை வாங்குவது நல்லது என எச்சரிக்கின்றனர். மோசமான மெத்தையை பயன்படுத்துவதால் என்னென்ன மாதிரியான உடல் நலப்பிரச்சனைகள் உருவாகக்கூடும், மெத்தை விஷயத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்...

1. உடல் வலி ஏற்படுவது ஏன்? உடம்பு வலி போன்ற பிரச்சனைகளுக்கும் தாங்கள் உபயோகிக்கும் மெத்தைக்கும் தொடர்பு உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளவே யாரும் தயாராக இல்லை. பொருத்தமில்லாத மெத்தைகள் தூக்கத்தை மட்டுமல்ல உடல் நலனையும் பாதிப்பதை பல்வேறு ஆய்வுகள் மூலம் நிபுணர்களும், மெத்தை தயாரிப்பாளர்களும் நிரூபித்துள்ளனர். எனவே புதிதாக மெத்தை வாங்க திட்டமிடுவோர் முக்கியமான சில காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதில் மெத்தையை பயன்படுத்த உள்ள நபர் அல்லது நபர்களின் உடல் முதலிடம் பிடிக்கிறது. உடல் எடைக்கு ஏற்ற ஃபோமைப் பயன்படுத்தும் மெத்தைகள் உடலுக்கு ஏற்றார் போல் சப்போர்ட் கொடுத்து, நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது.

2. அதிகப்படியான வியர்வை: மெத்தைகளில் பயன்படுத்தப்படும் ஃபோம் தரமற்றதாக இருந்தால் அவை சருமத்தை சுவாசிக்கவிடாமல் செய்து வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும், இதனால் வியர்வை அதிகரிக்கூடும். இரவில்  உறங்கும் போது உடல் முழுவதும் வியர்வை பெருக்கெடுத்தால் எப்படி நிம்மதியான தூக்கம் கிடைக்கும்?. எனவே இயற்கையான பஞ்சால் செய்யப்பட்ட மெத்தைகளை பயன்படுத்துவது வெப்பத்தை குறைத்து, வியர்வை இல்லாத ஆழ்ந்த உறக்கத்தை பெற உதவும்.

also read : வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?

3. பழைய மெத்தை: பணத்தை மிச்சப்படுத்துகிறேன் என்ற பெயரில் பல ஆண்டுகளாக ஒரே மெத்தையை பயன்படுத்துவது மருத்துவமனைக்கு டபுளாக செலவு செய்ய வைக்கும். எனவே மிகவும் தொய்ந்து போய், அழுக்கடைந்து, தட்டையாக மாறிய பழைய மெத்தைகளைப் பயன்படுத்தி வருபவராக இருந்தால், உடனடியாக புதிய மெத்தை வாங்குவதைப் பற்றி சிந்திக்க வேண்டும். தரம் குறைந்த பொருட்களால் செய்யப்பட்ட மெத்தைகள் காலப்போக்கில் சிதைந்து, தொய்வடையும். அதில் தூங்கும் போது, முதுகுத்தண்டு தவறான சீரமைப்புக்கு உண்டாகிறது. இதனால் முதலில் லேசாக ஆரம்பித்து, நாள்கள் செல்ல செல்ல தீவிரமான முதுகுவலி, தசைப்பிடிப்பு, எலும்புகளில் தேய்மானம் போன்ற பிரச்சனைகளை உருவாகக்கூடும்.

4. ஒவ்வாமை: மெத்தைகளால் சரும பிரச்சனை, தும்மல் போன்ற ஒவ்வாமை ஏற்படுவதை பலரும் அறிந்திருப்போம். வெளிப்புறம் பார்க்க சுத்தமானவை போல் காட்சியளித்தாலும், பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் மெத்தைகளுக்குள் நிறைய தூசு மற்றும் அழுக்குகள் சேகரிப்படுகின்றன. உறங்கும் போது மெத்தைகளில் இருந்து வெளியேறும் தூசால் நுரையீரல் மற்றும் தோலில் ஒவ்வாமை ஏற்படுகிறது. இதுபோன்ற ஆரோக்கிய சிக்கலைத் தீர்க்க, சான்றளிக்கப்பட்ட நச்சுத்தன்மையற்ற ஃபோம், உள் பொருட்கள் மற்றும் துணிகளைக் கொண்ட மெத்தைகளையோ அல்லது பட்டு பருத்தியின் கூடுதல் மென்மையுடன் 100% இயற்கையான ஹைபோஅலர்கெனி வசதி கொண்ட மெத்தைகளையோ பயன்படுத்தலாம்.

5. மோசமான துர்நாற்றம்: இந்தியாவில் நிலவும் வெப்பநிலை கணிக்க முடியாத அளவிற்கு அவ்வப்போது மாறி வருகிறது. மழைக்காலம், வெயில் காலம், வசந்த காலம் என எதுவாக இருந்தாலும் வெப்பத்திற்கு மட்டும் எந்தவித குறைவும் கிடையாது. இதனால் இரவு நேரத்தில் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையானது மெத்தைகளில் படிவதால், நாளாடைவில் அவை துர்நாற்றம் வீசத் தொடங்கிறது. இதுபோன்ற சுகாதாரமற்ற நிலையால், தூசிப் பூச்சிகள், படுக்கைப் பூச்சிகள் மற்றும் பிற தேவையற்ற பூச்சிகள் மெத்தைகளில் உற்பத்தியாகின்றன.

also read : மதிய உணவு சாப்பிட்டவுடனே தூக்கம் வருகிறதா? இதைத் தெரிந்து கொள்ளுங்கள்!

எனவே மெத்தைகளில் துர்நாற்றத்தை போக்க நீக்கக்கூடிய மற்றும் துவைத்து உலர்த்தி சுத்தப்படுத்தக்கூடிய மேல் உறையுடன் கூடிய மெத்தைகளை வாங்கலாம். இதன் மூலமாக மெத்தை நீண்ட காலத்திற்கு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும். பணத்தை மிஞ்சப்படுத்துவதற்காக தரமற்ற மெத்தைகளை வாங்குவதற்கு பதிலாக, OEKO-TEX, ACA மற்றும் GOTS போன்ற சர்வதேச சான்றிதழ்களுடன் வரும் தரமான மெத்தைகளை வாங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

ஏனெனில் தூக்கம் தான் மனிதனை அடுத்த நாள் வேலைக்கு தயார்ப்படுத்தக்கூடிய ரீசார்ஜ், அது சரியாக இல்லை என்றால் தூக்க கலக்கம், மன அழுத்தம், கண் குறைபாடுகள், தலை, கழுத்து மற்றும் முதுகு வலி, அமைதியற்ற நிலை, அதிக கோபம் போன்ற உடல் மற்றும் மன நல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரலாம்.எனவே "ஒரு ஆரோக்கியமான மெத்தை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை" என்பதை மறந்துவிடாதீர்கள்.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Health, Sleep