Home /News /lifestyle /

உங்கள் வீட்டை மிக சிறப்பாக வைத்துக்கொள்ள இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்..

உங்கள் வீட்டை மிக சிறப்பாக வைத்துக்கொள்ள இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்..

காட்சி படம்

காட்சி படம்

Home Interior Tips : வீட்டை அழகாக வைத்துக்கொள்ள இதை பின்பற்றுங்கள்..

நமது வாழ்வில் அதிக நேரத்தை வீடுகளில் செலவழிப்பதால், அந்த இடத்தை நமது விருப்பத்திற்கேற்ப மாற்ற ஆசைப்படுவோம். கணவன் மனைவி மட்டுமே ஒரு வீட்டில் இருந்தாலும் சரி; கணவன், மனைவி, குழந்தைகள், தாத்தா பாட்டி என பெரிய குடும்பமாக இருந்தாலும் சரி; எப்போதும் வீட்டில் இடப்பற்றாக்குறை ஏற்பட தான் செய்கிறது. வீட்டை சிறந்த முறையில் வைத்துக்கொள்ள ஐக்கியா (IKEA) நிறுவனத்தின் மேனேஜரான எரிக் ஜான் மிடில்ஹோவன் வழங்கும் சில முக்கிய வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

முதலில் செய்ய வேண்டியவை : வீடுகளில் உள்ள பொருட்களின் அளவைக் கொண்டு, அதை எவ்வாறு அடுக்கி வைக்க வேண்டும் என்பது நிர்ணயிக்கப்படும். அதிக தூசி உள்ளே வராதபடியும், ஈரப்பதத்தில் இருந்து பொருட்களை பாதுகாக்கவும் பலர் மூடிய நிலையில் உள்ள அறைகளை தேர்ந்தெடுப்பார்கள். உங்களின் பழைய பொருட்கள், கலை படைப்புகள் போன்றவற்றை காட்சிப்படுத்த வேண்டுமென்றால் அதற்கு கண்ணாடி கதவுகள் தான் சிறந்தவை.

வெவ்வேறு வழிகளில் அடுக்கலாம் : உள்ளே வைக்கின்ற பொருட்கள் வெளிய தெரியும்படி இருக்க வேண்டுமென்றால் திறக்க கூடிய முறையில் உள்ள அறைகள் தான் இதற்கு ஏற்றவை. மேலும் இவற்றுடன் அட்ஜஸ்டபிள் ஷெல்புகளை இணைக்கலாம். அதிக பொருட்களை வைக்க பெரிய ஷெல்ஃபுகளையும், அளவான பொருட்களை வைக்க சிறிய அளவிலான ஷெல்ஃபுகளையும் பொருத்தலாம். மேலும் அந்தந்த பொருட்களுக்கு ஏற்றவாறு ஷெல்ஃபுகளை பிரித்து கொள்ளலாம்.

தினசரி பொருட்கள் : அன்றாடம் பயன்படுத்த கூடிய துணிகள், வீட்டு சாதனங்கள், வீட்டு பொருட்கள் போன்றவற்றின் தேவை அதிகம் இருப்பதால் அவற்றை எளிதாக பயன்படுத்தும் இடத்தில் வைப்பது நல்லது. குறிப்பாக வீட்டின் உள்ளே நுழையும்போது காலணிகள், துணிகள், விளையாட்டு பொருட்கள் போன்றவற்றை வைத்து கொள்ளலாம். இவ்வாறு வைப்பதால் இவற்றை பயன்படுத்துவது மிக எளிது. உங்கள் வீட்டில் மரச்சாமான்களை வைக்க இடமில்லை என்றால், காலியான சுவர்களின் அவற்றை பொருத்திக்கொண்டு பயன்படுத்தலாம்.

காலத்துக்கேற்ற அமைப்பு : புது வித யோசனைகளை பெற வேண்டுமென்றால் உங்கள் வீட்டின் எல்லா இடங்களையும் ஒரு முறை சுற்றி பாருங்கள். அதிலிருந்தே உங்களுக்கு சிறப்பான ஐடியா கிடைக்கும். மேலும் ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்றவாறு வீட்டிலுள்ள பொருட்களை நாம் அடுக்கி வைக்கலாம். உதாரணத்திற்கு குளிர் காலங்களில் பயன்படுத்த கூடிய பெட்ஷீட், போர்வை, கம்பளி போன்றவற்றை பெட்டிற்கு அடியில் ஒரு ஷெல்ஃப் போன்று பொருத்தி அங்கு வைத்து கொள்ளலாம். இப்படி காற்று புகாத இடத்தில் வைப்பதால் பொருட்களுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்கும்.

also read : தொற்று அச்சத்தில் அடிக்கடி கைகளை கழுவுதால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள்..

புதுமையான முறை : நாம் வாழும் வீட்டை புதுவிதமாக அலங்கரிக்க நாம் பயன்படுத்தும் பொருட்களின் நிறம், மெட்டீரியல் ஆகியவை மிக முக்கியமானது. பல வீடுகளில் சோஃபாவிற்கு பின் பகுதியில் காலியாகவே இருக்கும். அந்த இடங்களில் ஒரு சிறிய புக் ஷெல்ஃப்பை உருவாக்கலாம். மேலும் அதை அலங்கரிக்க ஸ்பாட்லைட் பயன்படுத்தலாம். இது உங்களின் வீட்டை மிக புதுமையானதாக காட்டும்.

வீடு மாற்றம் : தற்போதுள்ள நிலையில் பலர் பிளாட்டுகள், வாடகை ரூம்கள் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இது போன்ற சிறிய இடத்தில் தனது எல்லா பொருட்களையும் கொண்டு வந்து வைப்பது சவாலான விஷயம் தான். நீங்கள் மாறுகின்ற வீட்டை பொறுத்து உங்களின் இடத்தை சௌகரியமான முறையில் பார்த்துக்கொள்வது நல்லது.மேற்சொன்ன வழிகளை பின்பற்றி உங்கள் வீட்டை சிறப்பாக்கிடுங்கள்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Home, Home and Interior

அடுத்த செய்தி