முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பிளாஸ்டிக் தடை... இதனால் சமையலறையில் நாம் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்னென்ன..?

பிளாஸ்டிக் தடை... இதனால் சமையலறையில் நாம் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்னென்ன..?

பிளாஸ்டிக் தடை

பிளாஸ்டிக் தடை

உலகளவில் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் மூன்றில் ஒரு பங்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை தூக்கி எறியும் பிளாஸ்டிக்குகள் பெட்ரோலியம் சார்ந்தவை என்பதால், அவற்றை மறுசுழற்சி செய்வது கடினம்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

ஜூலை 1 முதல் நாடு முழுவதும் பாலிஸ்டிரீன் மற்றும் எக்ஸ்பேன்டட் பாலிஸ்டிரீன் உள்ளிட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விநியோகம், இறக்குமதி, விற்பனை, இருப்பு மற்றும் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், சுற்றுசூழலுக்கு ஏற்படும் பாதிப்பு கணிசமாக குறையும் என்றாலும், நாம் அன்றாடம் வீட்டில், சமையலில் மற்றும் விருந்துகளில் பயன்படுத்தும் பல பொருட்களும் ஒன் டைம் பிளாஸ்டிக் தான். எனவே, இந்த தடை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதை பார்க்கலாம்.

அதிகரிக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்..

1907 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் மிகவும் மலிவு விலை மெட்டீரியலாகப் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தின. 1950ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை மட்டுமே, கிட்டத்தட்ட 8.3 பில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின என்று ஆய்வுகள் கூறுகின்றன. உலக அளவில் ஒரு நபர் 28 கிலோ பிளாஸ்டிக் பயன்படுத்துகிறார்கள் என்றும், இந்தியாவில் ஒரு நபர் 11 கிலோ பிளாஸ்டிக் பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. 2019-2020 ஆம் ஆண்டில் 3.4 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவு இந்தியாவில் உருவானது என்று CPCB அறிக்கை கூறுகிறது.

ஒன் டைம் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை

உலகளவில் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் மூன்றில் ஒரு பங்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை தூக்கி எறியும் பிளாஸ்டிக்குகள் பெட்ரோலியம் சார்ந்தவை என்பதால், அவற்றை மறுசுழற்சி செய்வது கடினம். மேலும் இவ்வகை பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் முதல் 100 நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்று உள்ளது.

களிமண் கப்புகளில் டீ குடித்தால் இத்தனை நன்மைளா..? இன்னைக்கே டிரை பண்ணி பாத்துருங்க...

மிக நீண்ட ஆண்டுகளுக்கு நமது சுற்றுபுறத்தில் அழியாமல் தங்கி இறுதியில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸாக மாறி, முதலில் நமது உணவு ஆதாரங்களிலும் பின் நம் உடலிலும் நுழைகின்றன. இந்நிலையில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் விரிவான செயல் திட்டத்தை அறிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட பொருட்கள்

ஜூலை 1, 2022 முதல், சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக் பொருட்களான பலூன் ஸ்டிக்ஸ், பிளேட்கள், கப்கள், கிளாஸ்கள், ஃபோர்க்ஸ் , ஸ்பூன்கள், கத்திகள், ட்ரேக்கள் உள்ளிட்ட கட்லரி பொருட்கள், ஸ்வீட் பாக்ஸ்களில் சுற்றப்படும் பிளாஸ்டிக் ரேப்பர், மிட்டாய் மற்றும் ஐஸ்கிரீம் ஸ்டிக்ஸ், அலங்காரத்திற்கான பாலிஸ்டிரீன், ஸ்ட்ராக்கள், ஸ்டிர்ரர் என பிளாஸ்டிக் கலந்தது எதுவும் இருக்காது. மேலும், 120 மைக்ரானுக்கு கீழான கவர்கள்/பைகள் ஆகியவையும் இந்த ஆண்டின் இறுதியில் தடை செய்யப்படும்.

Coronavirus : நோய் எதிர்ப்பு சக்தியை பெற உங்கள் லஞ்ச் பாக்ஸில் இருக்க வேண்டிய 5 உணவுகள்

மேலும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016 இன் படி, குட்கா, புகையிலை மற்றும் பான் மசாலா ஆகியவற்றை சேமிக்க, பேக்கிங் அல்லது விற்பனை செய்ய பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை உள்ளது.

தடையை மீறுபவர்களுக்கான தண்டனை

அரசு வெளியிட்டுள்ள இந்த விதிகளை மீறுபவர்களுக்கு, சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டம் 1986 இன் படி, 1 லட்ச ரூபாய் அபராதம் அல்லது 5 வருட சிறை தண்டனை அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

top videos

    தினமும் சமையலறையில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகளுக்கு மாற்றாக காகிதம், மூங்கில் மற்றும் பாக்கு மட்டை ஆகியவற்றால் இதே பொருட்களை செய்து பயன்படுத்தலாம்.

    First published:

    Tags: Kitchen Hacks, Plastic Ban