சமந்தாவின் லாக்டவுன் ஹாபி இதுதான் : அவரே பகிர்ந்து கொண்ட டிப்ஸ்

சமந்தாவின் லாக்டவுன் ஹாபி இதுதான் : அவரே பகிர்ந்து கொண்ட டிப்ஸ்
சமந்தா
  • Share this:
இளமை மாறாத தோற்றத்துடன், பளபளக்கும் மேனி அழகுடன் இருக்கும் சமந்தா உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கக் கூடியவர். இந்த உணவு பழக்கமும் அவரின் அழகுக்கு ஒருவகைக் காரணம்.

அந்த வகையில் சமீபத்தில் சமந்தா இஸ்டாகிராமில் அவரே அமைத்த வீட்டுத் தோட்டம் குறித்த பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் தற்போது டையட் , ஃபிட்னஸ் டிரெண்டாக உலா வந்துக்கொண்டிருக்கும் மைக்ரோகிரீன்ஸ் வளர்ப்பும் (cabbage microgreens), அதனால் கிடைக்கும் நன்மைகளையும் ஷேர் செய்துள்ளார்.






அதோடு மட்டுமன்றி அந்த மைக்ரோ கிரீன்ஸ் செடியை எப்படி வீட்டிலேயே வளர்ப்பது, அதற்கு தேவையான் பொருட்கள் என்ன என்பதையும் அவரே பகிர்ந்துள்ளார். இதற்கு புகைப்படமாக அந்த செடிகளை களை எடுத்து பறித்துக் கொண்டிருப்பதைப் போல் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

மேலும் இதுதான் அவர் உருவாக்கிய முதல் செடி வளர்ப்பு திட்டம் இதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



 




View this post on Instagram




 

My first harvest of cabbage microgreens 💚.. For those of you interested in growing your own ... all you need is a tray , cocopeat , seeds and a cool room (I used my bedroom ) that has a window that lets sunlight partially in .. if the tray isn’t getting much sunlight , a bed side lamp can be placed near it .. 😊😊 Step 1: fill the tray with cocopeat ... leave room at the top Step 2: sprinkle the seeds Step 3: spray water generously till the cocopeat is completely moist and cover the tray. Place the tray in the coolest area of your house next to a window .. if there is less sunlight you can use a bedside lamp (I did that ) . Leave it for 4 days .. (you can check on it everyday you ll see it sprout ) . On the 5th day remove the cover of the tray and spray water generously once everyday .. By day 8 your microgreens are ready to harvest upto day 14 💚... I got my seeds from @zeptogreens .. happy gardening 💚


A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on






சமந்தா சொல்லும் செடி வளர்ப்பு முறை :

ஒரு அகலமான டிரே எடுத்துக்கொள்ளுங்கள். அதில் களிமண் நிரப்பிக்கொள்ளுங்கள். பின் அதில் விதைகளை தூவுங்கள்.

பின் மண் ஈரமாகும் வரை தண்ணீர் தெளியுங்கள். அடுத்ததாக ஷீட் கொண்டு மூடிவிடுங்கள். அதை அப்படியே வீட்டின் குளுமையான அறையில் ஜன்னல் ஓரத்தில் வையுங்கள்.

நான்கு நாட்கள் அப்படியே விட்டுவிடுங்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் திறந்து பாருங்கள். அதிலிருந்து செடிகள் முளைத்துக்கொண்டு எட்டிப்பார்க்கும்.

ஐந்தாவது நாள் டிரேவை திறந்து தண்ணீர் தெளித்துவிடுங்கள். இப்படி தினமும் செய்து வர 14 வது நாள் நல்ல வளர்ச்சியை எட்டியிருக்கும்.

இதை ஜுஸ் போட்டு பருகுவதால் வளர்ச்சிதை மாற்றத்தில் முன்னேற்றம் கிடைக்கும். நார்ச்சத்து நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.
















லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: June 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading