பாத்ரூம், தரைகளில் உள்ள கிருமிகளை அகற்ற சமந்தா தயாரித்த ஹோம் கிளீனர் - நீங்களும் செய்யலாம்

எப்படி தயாரிக்க வேண்டும் என்றும் டிப்ஸ் அளித்துள்ளார்.

பாத்ரூம், தரைகளில் உள்ள கிருமிகளை அகற்ற சமந்தா தயாரித்த ஹோம் கிளீனர் - நீங்களும் செய்யலாம்
சமந்தா
  • Share this:
சமந்தா இயற்கை மற்றும் இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையைதான் அதிகம் நாடிச்செல்கிறார். அது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும். இதற்கு முன் வீட்டில் மாடித்தோட்டம் அமைப்பதும், செடி வளர்ப்பு முறை குறித்தும் பதிவிட்ட சமந்தா தற்போது கிருமிகளை ஒழிக்க வீடு , பாத்ரூமை சுத்தம் செய்ய பயன்படுத்தக்கூடிய ஹோம் கிளீனரை வீட்டிலேயே எப்படி தயாரித்துப் பயன்படுத்துவது என பதிவிட்டுள்ளார்.

அதாவது எலுமிச்சையை 3 மாதங்கள் தண்ணீரில் ஊற வைத்தால் நொதியமாக உருவாகும். அதில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகும். அதை வீட்டை துடைக்க, பாத்திரம் தேய்க்க, பாத்ரூம் கழுவ என பயன்படுத்தினால் நல்ல பாக்டீரியாக்கள் கிருமிகளை அழித்துவிடும். இதை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.






இதை எப்படி தயாரிக்க வேண்டும் என்றும் டிப்ஸ் அளித்துள்ளார். அவை பின்வருமாறு...

முதலில் 300 கிராம் அளவில் எலுமிச்சை தோல் எடுத்துக்கொள்ள வேண்டும். பின் 100 கிராம் வெல்லம், 1 லிட்டர் தண்ணீர், 1 ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவை அனைத்தையும் ஒன்றாகக் கலக்க வேண்டும். பின் பிளாஸ்டிக் டப்பாவில் ஊற்றி அடைத்து வைக்க வேண்டும். அதை வெயில் படாத இடத்தில் வைக்க வேண்டும்.



 




View this post on Instagram




 

Today was fun learning about bio enzymes from my friend @greenfeetcleanfeet 💚 What is a Bioenzyme ? Bioenzymes are natural organic cleaners made from fermenting citrus peels . They can be used as floor cleaners, bathroom cleaners, glass cleaners, for dishwashing, laundry etc .. Bioenzymes contain good bacteria which breakdown stains and grime from a multitude of household surfaces. Why Bioenzymes ? Bioenzymes are natural cleaners and can keep your house free from the nasty and toxic chemical cleaners. Also they are great going down your drain.. Apparently 1 litre of bioenzyme can decontaminate 1000 litres of water.. so you help your environment too. How to make your own Bioenzyme ? ▶️3 parts fruits peels or 300 grams ▶️1 part jaggery or 100grams ▶️10 parts water or 1litre ▶️1 part yeast (yeast here refers to a previous batch of bioenzyme which helps speed up the fermentation process from 3 months to 1 month). Mix everything in an airtight screw-on lid plastic container and store in a dark corner in your kitchen The first 10 days, the container needs to be opened every day for a few seconds Post that every alternate day should suffice At the end of 3 months/1 month, strain the contents and squeeze out all the extra goodness. The pulp that is left after straining can be blended and used as a concentrated cleaner for tough stains.. It can also be used as a starter for a new batch of bioenzyme. The liquid we have post straining is ready to be used.. Voila 💚 #bioenzyme #naturalcleaner #ecofriendly #sustainable #toxinfreeliving #cleanwaterways


A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on






முதல் 10 நாட்களுக்கு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்து மூடிவிட வேண்டும். பின் அடுத்த 10 நாட்களுக்கு ஒருநாள் விட்டு ஒரு நாள் திறக்க வேண்டும். பின் வாரம் ஒரு முறை என திறக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நொதிகளால் உருவாகும் வாயு வெளியேறும்.

இறுதியாக 3 மாதங்கள் அல்லது 4 மாதம் கழித்து நன்றாகக் கலந்துவிட்டால் எலுமிச்சை தோல் தண்ணீரில் கலந்துவிடும். பின் அதை வடிகட்டிய கூழை பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். அதை ஒரு மூடி வீதம் தண்ணீரில் கலந்து கறை உள்ள இடங்களில் தேய்த்தால் சுத்தமாகும்.



சிறிது நொதியை எடுத்து வைத்து மறு உருவாக்கத்திற்காக சிறிது பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.

இந்த எலுமிச்சை நொதியத்தை பாத்ரூம் கழுவ, வீட்டைத் துடைக்க, கிட்சன் மேசை, பாத்திரங்கள் தேய்க்க, ஸ்டவ் கழுவ இப்படி எதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading