ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஃபிரிட்ஜ் ஃபிரீஸரில் அடிக்கடி ஐஸ் கட்டிக்கொள்ள என்ன காரணம்..? தவிர்க்கும் வழிகள்..!

ஃபிரிட்ஜ் ஃபிரீஸரில் அடிக்கடி ஐஸ் கட்டிக்கொள்ள என்ன காரணம்..? தவிர்க்கும் வழிகள்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தண்ணீரை சுத்திகரிக்கும் வாட்டர் ஃபில்டர் பழுதடைந்தால் ஐஸ் கட்டி உருவாகும். ஃபிரிட்ஜில் நீங்கள் வைக்கும் பொருட்கள் மீதெல்லாம் ஐஸ் கட்டி படர்ந்திருக்கும். இதற்கு வாட்டர் ஃபில்டரை மாற்றுவதே வழி.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வீட்டில் சிங்கிள் டோர் கொண்டவர்கள் பெரும்பாலும் இந்த பிரச்னையை சந்திப்பார்கள். அதாவது எத்தனை முறை சுத்தம் செய்து வைத்தாலும் ஃபிரீஸர் பனி மலைப்போல் ஐஸ் கட்டிகளால் நிரம்பிவிடும். இதற்கு என்ன காரணம்..?

  ஃபிரிட்ஜின் கதவு அல்லது லிட் கேஸ்கெட் பழுதடைந்திருந்தால் இந்த பிரச்னை உருவாகும். அதாவது இவை பாதிக்கப்பட்டால் காற்று உள்ளே சென்று சுற்றிக்கொண்டிருக்க இவ்வாறு ஆகும். எனவே கதவு அல்லது கேஸ்கெட்டில் நீர் சொட்டுதல், உடைந்திருத்தல் போன்று சேதமடைந்திருந்தால் முற்றிலும் மாற்றுவதே வழி.

  நீரை ஆவியாக்கும் காயில் சேதமடைந்திருந்தால் இந்தப் பிரச்னை வரும். ஃபிரிட்ஜில் நீர் தேக்கம் அதிகம் இருந்தால் அதை வெளியேற்றும் பொறுப்பு இந்த காயிலுக்குத்தான் உள்ளது. அது காயிலை அடிக்கடி சுத்தம் செய்து பராமரித்து வந்தாலே இந்த பிரச்னை வராது.

  Read More : ஒரு நாளைக்கு இத்தனை முட்டை தான் சாப்பிட வேண்டுமாம்..!

   தண்ணீரை சுத்திகரிக்கும் வாட்டர் ஃபில்டர் பழுதடைந்தால் ஐஸ் கட்டி உருவாகும். ஃபிரிட்ஜில் நீங்கள் வைக்கும் பொருட்கள் மீதெல்லாம் ஐஸ் கட்டி படர்ந்திருக்கும். இதற்கு வாட்டர் ஃபில்டரை மாற்றுவதே வழி.

  எனவே ஃபிரிட்ஜ் நீண்ட நாள் உழைக்க வேண்டுமெனில் வருடத்திற்கு ஒருமுறையாவது பழுது பார்ப்பது அவசியம். அப்போதுதான் இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வீட்டிலும் வாரம் அல்லது மாதம் இரு முறை ஃபிரிட்ஜை சுத்தம் செய்யும் பழக்கத்தைக் கடைபிடிப்பது நல்லது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Fridge, Home Cleaning Tips