நியூயார்கில் சொந்தமாக ரெஸ்டாரண்ட் திறந்த பிரியங்கா சோப்ரா..! பிரமாண்ட இன்டீரியர் வேளைபாடுகள் இதோ...

Priyanka chopra | பிரியங்கா சோப்ரா

நியூயார்க் சோனா உணவகத்தில் எட்டு முதல் 30 விருந்தினர்கள் அமரும் வகையில் பிரைவேட் டைன்னிங் வசதியும் உள்ளது.

  • Share this:
நடிகை, தயாரிப்பாளர்,தொழில்முனைவோர், எழுத்தாளர் என பல பரிமாணங்களில் தனது திறமையை வளர்த்து வரும் பிரியங்கா சோப்ரா இப்போது சமயல்துறையிலும் தனது கால்தடத்தை பதித்துள்ளார். மேலும் அவரது ஒவ்வொரு முயற்சியும் மற்ற பெண்களுக்கு ஒரு உத்வேகமாக இருந்து வருகிறது.

முதலில் பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கிய பிரியங்கா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். பின்னர், ஹாலிவுட் படங்களில் நடித்து உலகளாவிய ஐம்பவானாக திகழும் அவர், இப்போது உணவு மற்றும் விருந்தோம்பல் துறையில் தனது சிறகுகளை விரிவுபடுத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார்.

இவர் உணவு பிரியர்களுக்கு இந்திய உணவு வகைகளை வழங்கும் நோக்கத்தில் "சோனா" ( Sona ) என்ற ஒரு சிறந்த உணவகத்தை நியூயார்க் நகரில் திறந்துள்ளார். தனது புதிய உணவகத்தின் படங்களை பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, " சிறந்த இந்திய உணவுக்காக எளிமையாக தொடங்கப்பட்டது, இப்பொது அன்பின் உழைப்பாக மாறிவிட்டது." என்று பதிவிட்டுள்ளார். உணவு பிரியர்களை எங்கள் இந்திய உணவகம் அன்போடு வரவேற்கிறது என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிரியங்கா சோப்ரா தனது உணவகத்தை மற்றொரு உணவக உரிமையாளர் மனீஷ் கோயலுடன் இணைந்து திறந்துள்ளார். தங்களது புதிய உணவகத்தை இந்திய பரம்பரியத்தின்படி சிறப்பு பூஜை நடத்தி திறந்து வைத்துள்ளார்.

சிறப்பு பூஜையின் போது எடுக்கப்பட்ட ஏராளமான படங்களை மனீஷ் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார். மேலும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, உணவகத்தைத் திறக்கும் திட்டம் 2020 ஆம் ஆண்டிலேயே இருந்ததாகவும் வெளிப்படுத்தினார். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அது தாமதமானது. இருப்பினும், இந்த ஆண்டு தொடங்கியதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்துள்ளார். 
View this post on Instagram

 

A post shared by Maneesh K. Goyal (@maneeshkgoyal)


சோனா உணவகத்திற்காக உருவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உணவகத்தின் சுற்று சூழல் பற்றிய ஒரு பார்வை உங்களுக்குக் கிடைக்கும் என்றும் மணீஷ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த உணவகம் நவீனம் கலந்த ஒரு பாரம்பரிய கலை படைப்புடன் தோற்றமளிக்கிறது. மேலும் மக்கள் நகர்ந்து செல்வதற்கு வசதியான இடத்தையும் கொண்டுள்ளது. பிரியங்கா, சோனா உணவகத்திற்காக பழுப்பு மற்றும் தங்க வண்ணத் பூச்சுகளை தேர்ந்தெடுத்துள்ளார். உணவகத்தில் எட்டு முதல் 30 விருந்தினர்கள் அமரும் வகையில் பிரைவேட் டைன்னிங் வசதியும் உள்ளது. 
View this post on Instagram

 

A post shared by Maneesh K. Goyal (@maneeshkgoyal)


மேலும், உணவக உரிமையாளர் மனீஷ் தனது பதிவில் சோனா உணவகத்தை பற்றி ஒரு உணர்ச்சிபூர்வமான குறிப்பை எழுதியுள்ளார். அதில், “இன்று காலை சோனாவில், நாங்கள் ஒரு சிறிய பூஜை நடத்தினோம். நாங்கள் எங்கள் முதல் விருந்தினர்களை மிக விரைவில் பார்ப்போம், எங்கள் உணவகத்தின் கதவுகள் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படுவதற்கு முன்பு ஒரு பூஜையை நடத்துவது என்பது பிரியாங்கவிற்கும் எனக்கும் மிக அவசியமானது. எங்களுடன் இந்தியாவிலிருந்து லண்டன் முதல் கலிபோர்னியா வரையிலான உணவக நண்பர்களும் ஆதரவாளர்களும் இணைந்தனர். இந்த காலை விழா குறிப்பாக விறுவிறுப்பானது.

ஏனெனில் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டுமானத்தையும் தொடங்குவதற்கு முன்பு பூமி பூஜை செய்தோம். அந்த நேரத்தில், 2020ம் ஆண்டு கோடைகாலத்திற்குள் இந்த உணவகத்தை திறப்போம் என்று நாங்கள் நினைத்தோம். நிச்சயமாக, 2020ம் ஆண்டு ஒரு பெரிய இக்கட்டான ஆண்டாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியாது. இப்போது, அந்த முதல் பூஜைக்கு ஒன்றரை வருடம் கழித்து, சோனா தயாராக உள்ளது. எங்களுக்கு கிடைத்த அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.#sonanewyork. " என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். இதேபோல பிரியங்கா சோப்ராவும் தனது உணவகத்தின் பூஜையின்போது எடுத்த சில புகைப்படங்கள் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரியங்கா தனது உணவகத்தின் பிரைவேட் டைனிங் இடத்திற்கு தனது புனைபெயரான ‘மிமி’ என்ற பெயரை சூட்டியுள்ளார். இந்தியாவிலிருந்து பிரத்தியேகமாக கலையை வெளிப்படுத்த விரும்பும் ஒரு திட்டத்தை உருவாக்க இந்த உணவகம் கலை ஆலோசகர் சுந்தர்லேண்டுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இது நவீன மற்றும் சமகால கலைகளை கொண்டுள்ளது.

 
Published by:Sivaranjani E
First published: