Home /News /lifestyle /

தைத்திருநாளில் உங்கள் வாசலை அலங்கரிக்கும் பொங்கல் பானைக் கோலங்கள் : போட்டு பார்த்துவிட்டீர்களா..?

தைத்திருநாளில் உங்கள் வாசலை அலங்கரிக்கும் பொங்கல் பானைக் கோலங்கள் : போட்டு பார்த்துவிட்டீர்களா..?

பொங்கல் பானைக் கோலங்கள்

பொங்கல் பானைக் கோலங்கள்

பொங்கல் என்றாலே வீட்டை சுத்தம் செய்வதில் தொடங்கி அன்றைக்கு என்ன கோலம் போட வேண்டும் என்பது வரை ஒரு வாரத்திற்கு முன்னரே தயாராகி விடுவார்கள்.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் மக்கள் அனைவரும் அதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அதாவது வீட்டை சுத்தம் செய்வதில் தொடங்கி அன்றைக்கு என்ன கோலம் போட வேண்டும் என்பது வரை ஒரு வாரத்திற்கு முன்னரே தயாராகி விடுவார்கள்.

அந்த வகையில் நீங்கள் பொங்கலன்று பானைக் கோலம் போட வகை வகையான டிசைன்களுடன் வீடியோ தொகுப்பை பகிர்ந்துள்ளோம். அவற்றில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்து உங்கள் வாசலை வண்ணங்களால் அலங்கரியுங்கள்.

பெருநாள் அதாவது தை பொங்கல் முதல் நாள் அனைவரும் பானையில் பொங்கல் பொங்கி வர... கரும்பு, வாழை இலை என கோலத்திலேயே பொங்கலின் சிறப்பை விளக்குவார்கள். அப்படி இந்த கோலமும் பொங்கலுக்கான அத்தனை சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது. நேர்புள்ளி ஏழில் தொடங்கி ஒன்றில் முடிகிறது.



ஆறு பொங்கல் பானைகளும் பொங்கி வழிய இந்த கோலம் கண்களுக்கு விருந்தளிக்கிறது. 11 புள்ளி ஆறில் முடியும் சந்துப்புள்ளியான இந்த கோலம் உங்கள் வாசலை பொங்கலை வரவேற்க பொருத்தமாக இருக்கும்.



நேர்புள்ளியாக 11 புள்ளி 6- ல் முடியும் இந்த கோலம் ஆறு பொங்கல் பானைகளும் பொங்கி வழியுமாறு வரையப்பட்டுள்ளது. கூடவே கரும்பும் வரையப்பட்டுள்ளது. இதுவும் பொங்கல் அன்று போட்டால் அழகாக இருக்கும்.



பொங்கல் பானை, கரும்பு மட்டுமன்றி தாமரைப் பூ மலர்ந்த வண்ணம் இந்த கோலம் வரையப்பட்டுள்ளது. 15 புள்ளி ஒன்றில் முடியும் இந்த கோலத்தை உங்கள் வாசலில் போட்டால் தெருவில் உங்கள் கோலம்தான் முதலிடம்.



13 புள்ளி ஒன்றில் முடியும் இந்த கோலம் சிம்பிலாக இருந்தாலும் வாசலில் போட்டால் களை கட்டும். அதற்கு ஏற்ற வண்ணங்களிட்டு வரைந்தால் அட்டகாசமாக இருக்கும். சிறிய வாசலில் இந்த கோலம் பிரமாண்டமாகத் தெரியும். முயற்சி செய்து பாருங்கள்..!



இந்த வண்ணக்க் கோலங்களால் உங்கள் வாசல் மட்டுமன்றி உங்கள் மனமும் மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகள்...

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Pongal, Pongal festival

அடுத்த செய்தி