Home /News /lifestyle /

Pongal 2022: பொங்கல் பானையை அலங்கரிக்க சில ஐடியாஸ் உங்களுக்காக...

Pongal 2022: பொங்கல் பானையை அலங்கரிக்க சில ஐடியாஸ் உங்களுக்காக...

பொங்கல் பானை அலங்காரம்

பொங்கல் பானை அலங்காரம்

பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கல் பானை தான் மிக முக்கியம் என்பதால்பானையை உங்களுக்கு பிடித்த மாதிரி அதை அலங்கரிக்கலாம். இதற்கு மலர்கள், மஞ்சள் கொத்து, வர்ணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் உதவுகின்றன.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
தென்னிந்தியாவில் குறிப்பாக நம் தமிழ்நாட்டில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவாக இருக்கிறது பொங்கல் பண்டிகை. விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் இயற்கை மற்றும் சூரியனை கடவுளாக வழிபடும் திருநாள் தான் தை பொங்கல் அல்லது சூரிய பொங்கல் என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை வழக்கமாக 4 நாட்கள் அடங்கிய திருவிழாவாக போகிப் பொங்கல், சூரியப் பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் மற்றும் நான்காம் நாளை காணும் பொங்கலாக கொண்டாடி வருகிறோம்.

பொங்கலை மிகவும் உற்சாகமாக கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த பண்டிகையின் போது மக்கள் தங்கள் வீட்டை அலங்கரிப்பதோடு மட்டுமல்லாமல் மண் பானைகள், கரும்புகள், இலைகள், அரிசி மாவில் செய்யப்பட்ட ரங்கோலி உள்ளிட்டவற்றோடு சிறப்பாக கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இந்தியாவில் பல சடங்குகளில் மண் பானைக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு.

உள்ளே தண்ணீர், மாம்பழம் அல்லது வெற்றிலை கொண்ட பானை செழிப்பின் அடையாளமாக பல மாநில சடங்குகளில் கருதப்படுகிறது. அவ்வழியே தமிழகத்தில் பாரம்பரிய பொங்கல் பண்டிகையை கொண்டாட மற்றும் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட பொங்கல் பண்டிகை ஸ்பெஷல் உணவுகளை சுவையுடன் தயாரிக்க மண் பானைகள் பயன்படுத்தப்படுகின்றன.

பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கல் பானை தான் மிக முக்கியம் என்பதால்பானையை உங்களுக்கு பிடித்த மாதிரி அதை அலங்கரிக்கலாம். இதற்கு மலர்கள், மஞ்சள் கொத்து, வர்ணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் உதவுகின்றன. பானையில் பெயிண்ட் பயன்படுத்தி டிசைன் வரைய விரும்பினால் மஞ்சள் மற்றும் வெள்ளை கலரை பயன்படுத்துவது காண்போரை மிகவும் கவரும்.

பொங்கல் வைக்க மண் பானைகள் பயன்படுத்தப்பட்டாலும் அவற்றை சிறப்பாக அலங்கரிக்க பல்வேறு வழிகள் உள்ளன.இந்த பொங்கல் 2022-ல் உங்கள் வீட்டு பொங்கல் பானையை வடிவமைக்க மற்றும் அலங்கரிக்கவும் உதவும் பல ஐடியாக்கள் மற்றும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்...

டிசைன் 1:



 




View this post on Instagram





 

A post shared by Suganth (@suganthm)






இன்ஸ்டாவில் சென்னையை சேர்ந்த suganthm என்ற யூஸர் ஷேர் செய்திருக்கும் இந்த டிசைனை பாருங்கள். பொங்கல் பானைக்கு கோல்டன் கலரில் பெயிண்ட் அடித்து லேஸ் வொர்க், மிரர் வொர்க் மற்றும் செயின் பால்ஸ் வொர்க் செய்யப்பட்டு மிகவும் கவர்ந்திழுக்கும் வகையிலான டிசைனாக இருக்கிறது. இதற்கு சற்று வேலையும் நேரமும் அதிகம் எடுக்கும் என்றாலும் பொங்கல் பண்டிகை அன்று வீட்டை டெக்கரேட் செய்யும் போது இது போன்று பானையை டிசைன் செய்து அலங்காரத்திற்காக வைக்கலாம்..

டிசைன் 2:



 




View this post on Instagram





 

A post shared by Santhi Panda (@santhis_creations)






இந்த டிசைன் வட இந்திய டிசைன் போல் இருக்கிறது. ஆனால் அலங்காரத்திற்காக பொங்கல் பானையை தயார் செய்ய விரும்புவோருக்கு சிம்பிள் மற்றும் பெஸ்ட் டிசைனாக இது இருக்கும். வெள்ளை கலர் பெயிண்ட்டிங், பல வடிவிலான மிரர் மற்றும் தெர்மாகோலை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சிறுசிறு பால்ஸ்கள் இந்த டிசைனை மெருகூட்டுகின்றன.

டிசைன் 3:



 




View this post on Instagram





 

A post shared by Madhu (@luk_madhu)






இந்த டிசைனை பொங்கல் தினத்தன்று பொங்கல் சமைக்கும் பானைகளிலும் செய்யலாம். மிகவும் எளிமையாக இருப்பதை பார்க்க முடிகிறது. நமது பாரம்பரிய கோலம் பெயிண்ட்டால் பானையை சுற்றிலும் வரையப்பட்டு உள்ளது. கோலங்களுக்கு மேல் வீட்டில் நாம் காட்டும் மாவிலை தோரணம் போன்ற இலை டிசைன் பச்சை நிறத்தில் வரையப்பட்டு பானையை மிகவும் அழகான தோற்றத்தில் காட்டுகிறது.

பானையின் வாய்ப்புறத்தை ஒட்டி மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டு அதில் ஆங்காங்கே இடைவெளி விட்டு வட்ட வடிவில் சிவப்பு நிறம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதனுள் மிரர் வொர்க் செய்யப்பட்டு இருந்தாலும், நீங்கள் இந்த டிசைன் செய்யப்பட்ட பானையில் பொங்கல் வைக்க விரும்புகிறீர்கள் என்றால் மிரர் வொர்க்கை மட்டும் தவிர்த்து கொள்ளுங்கள்.

டிசைன் 4:



 




View this post on Instagram





 

A post shared by Vedh👉*A*👈rts (@vedh_a_rts)






இந்த டிசைன் vedh_a_rts என்ற இன்ஸ்டா யூஸரால் ஷேர் செய்யப்பட்டு உள்ளது. முழுக்க முழுக்க பெயிண்டிங்கால் செய்யபட்டுள்ள இந்த டிசைன், பெயிண்டிங் பிரியர்களுக்கு மிகவும் எளிதான ஒரு டிசைனாக இருக்கிறது. பச்சை, மஞ்சள், சிவப்பு, வெள்ளை, நீளம் உள்ளிட்ட பல் நிற வர்ணங்கள் இந்த பொங்கல் பானை டிசைனில் பயன்படுத்தப்பட்டு அழகாக காட்சி அளிக்கிறது. அடுப்பில் வைக்க போகும் பொங்கல் பானையை அலங்கரிக்க மிகவும் ஈஸியான டிஸைனாகவும் இது இருக்கிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Home Decoration, Pongal, Pongal festival

அடுத்த செய்தி