பொங்கலுக்கு ஏற்ற வகை வகையான பானைக் கோலங்கள்..! இதுதான் லேட்டஸ்ட் டிசைன்ஸ்

பொங்கலுக்கு ஏற்ற வகை வகையான பானைக் கோலங்கள்..! இதுதான் லேட்டஸ்ட் டிசைன்ஸ்

பொங்கல் கோலம்

கண்கவர் வண்ணங்களுடன் வாசலை அலங்கரிக்கும் சில பானைக்கோலங்கள் உங்களுக்காக....

 • Share this:
  பொங்கல் நெருங்கிவிட்டது. வீட்டை அலங்கரிக்கும் பணிகளும் தொடங்கிவிட்டன. புத்தாடைகள் அணிந்து தமிழர் திருநாளை வரவேற்க வீட்டு வாசலில் வண்ணக் கோலங்கள் இட வேண்டாமா..? அதற்கான கண்கவர் வண்ணங்களுடன் வாசலை அலங்கரிக்கும் சில பானைக்கோலங்கள் உங்களுக்காக....

  17-9 வரிசையில் அடங்கிய இந்த பானைக்கோலம் பெரிய வாசலாக இருப்பின் சரியான பொருத்தமாக இருக்கும். பல வண்ணங்களுடன் வாசலை பார்க்கவே கலர்ஃபுல்லாக இருக்கும்.  நேர்வரிசையில் 7 புள்ளி ஒன்றில் முடியும் இந்த கோலம் உங்கள் கைவண்ணத்தைக் காட்ட சிறந்த கோலம். இதை மட்டும் போட்டு பாருங்கள். பாராட்டு குவியும்.  10 புள்ளி 2 இல் முடியும் இந்த கோலம் பக்குவமாக வரைந்து வண்ணமிட்டால் வாசல் கலர்ஃபுல்லாக இருக்கும்.  எளிமையாக இருந்தாலும் அதன் காண்பதற்கு அழகாக இருக்கும். 10 புள்ளி இரண்டில் முடியும் சந்துபுள்ளி கோலம் இது.  கரும்பு , பொங்கல் பானை என இந்த கோலத்தை போடலாம். 15 புள்ளி எட்டில் முடிகிறது.  இந்த கோலம் வாசலில் போட்டு பல வகை வண்ணங்கள் கொடுத்தால் சூப்பராக இருக்கும். தெருவில் உங்கள் வீட்டு கோலம்தான் பிரகாசிக்கும். 14 புள்ளி 2 வரிசை 2 முடியும் சந்துபுள்ளி கோலம்.  இந்த கோலங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து பொங்கலன்று வீட்டு வாசலை வண்ணங்களால் அலங்கரியுங்கள்.
  Published by:Sivaranjani E
  First published: