ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தீபாவளி 2022 : பட்டாசு வெடிகளுக்கு நடுவே செல்லப்பிராணிகளை எப்படி பாதுகாப்பது..?

தீபாவளி 2022 : பட்டாசு வெடிகளுக்கு நடுவே செல்லப்பிராணிகளை எப்படி பாதுகாப்பது..?

தீபாவளி 2022

தீபாவளி 2022

சத்தமாக வெடிக்கும் பட்டாசுகள் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு, பதற்றம், பயம், நடுக்கம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்துமோ அதே அளவுக்கு நம் வீடு, காலனி மற்றும் தெருவில் உள்ள நாய் மற்றும் பூனைகளுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கலர்ஃபுல் பண்டிகையான தீபாவளியை நாம் கொண்டாடி மகிழ இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் புத்தாடைகள், பலகாரங்கள் மற்றும் பட்டாசுகள் வாங்கும் வேலையில் நாம் மிகவும் பிசியாக இருப்போம்.

இந்த பண்டிகையின் ஹைலைட்டான பாட்டாசுகளை பலரும் இந்நேரம் வெடிக்க துவங்கி இருப்போம். பட்டாசுகளின் சத்தம் நமக்கே பலநேரங்களில் அச்சமூட்டும் வகையில் இருக்கும் நிலையில், இந்த தருணத்தில் நாம் நிச்சயம் வாயில்லா செல்லப்பிராணிகளான நாய், பூனைகளை பற்றி யோசித்தாக வேண்டும் இல்லையா.!

சத்தமாக வெடிக்கும் பட்டாசுகள் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு, பதற்றம், பயம், நடுக்கம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்துமோ அதே அளவுக்கு நம் வீடு, காலனி மற்றும் தெருவில் உள்ள நாய் மற்றும் பூனைகளுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இன்னும் சொல்ல போனால் முதியவர்களுக்கு அல்லது வெடிசத்தம் அல்லது இதனால் எழும் புகையால் அலர்ஜி ஏற்படுபவர்களுக்கு வெடி எதற்காக வெடிக்கப்படுகிறது என்று விஷயம் தெரியும். அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ள முடியும்.

ஆனால் செல்லப்பிராணிகளின் நிலைமை.? எனவே தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களின் போது வீடுகள், காலனிகள் மற்றும் வீடுகளுக்கு அருகில் உள்ள செல்லப்பிராணிகளுக்கு பாதுகாப்பான இடத்தை ஏற்படுத்தி கொடுப்பது நமது கடமை.

பலத்த சத்தம் கொண்ட பட்டாசுகள் வெடிக்கப்படும் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு மத்தியில் வீட்டில் வளர்க்கும் அல்லது அருகில் இருக்கும் செல்லப்பிராணிகளை பாதுகாப்பாக வைத்து கொள்வதற்கான வழிகள் கீழே...

- தீபாவளி கொண்டாட்டங்களுக்கு முன்பே கால்நடை மருத்துவரை சந்தித்து பலத்த சத்தம் கொண்ட பட்டாசுகள் வெடிக்கும் போது செல்லப்பிராணிகள் பயம் கொள்ளாமல், அலறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை பெறலாம். தவிர உங்கள் செல்லபிராணிகளுக்கு தேவைப்படும் மருந்துகள் கைவசம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
- பட்டாசுகளால் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் தேவையற்ற விபத்தை தடுக்க விளக்குகள் மற்றும் பட்டாசு வெடிக்கும் இடங்களில் அவற்றை விடாமல் போதுமான பாதுகாப்பு தூரத்தில் அவர்கள் கொள்ள வேண்டும்.
- பெரும்பாலும் பட்டாசுகளின் சத்தத்தை தங்குவது அந்தந்த செல்லப்பிராணிகளின் கெப்பாசிட்டியை பொறுத்தது. சில பிராணிகள் சத்தத்திற்கு போக போக பழகிவிடும். ஆனால் உங்கள் செல்லபிராணி வெடி சத்தத்திற்கு தொடர்ந்து பயந்தால் மற்றும் அலறினால் சத்தம் மெதுவாக கேட்கும் பாதுகாப்பான இடத்திற்கு அவர்களை மாற்றி விடுங்கள்.
- செல்லப்பிராணிகள் தங்களால் பேச முடியாது என்பதால் உடல்மொழி மூலம் நம்மை தொடர்பு கொள்கிறார்கள். அவர்கள் பட்டாசு சத்தத்திற்கு வெளிப்படையாக அலறாவிட்டாலும் உடல் மொழி மூலம் பயத்தை வெளிப்படுத்த கூடும். அந்த சமயத்தில் நாம் அதனை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
- அதிக சத்தத்துடன் பட்டாசுகள் வெடிக்கும் சமயங்களில் பயத்தை போக்க அவர்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களுடன் விளையாட்டில் ஈடுபடுங்கள் அல்லது கொஞ்சுங்கள். பட்டாசுகளின் தாக்கத்தால் அவர்கள் பயந்தாலும் கூட உங்களின் அரவணைப்பு அவர்களுக்கு தைரியமளிக்கும்.
- மாலை மற்றும் இரவு நேரங்களில் சத்தமான பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கைகளின் கொண்டாட்டம் அதிகரிக்கும் என்பதால் மாலை நேரத்திற்கு முன்பே உங்கள் செல்லபிராணிகளை வாக்கிங் கூட்டி சென்று விடுவது நல்லது. இந்த வாக்கிங் மூலம் அவர்கள் ஃபிரெஷ்ஷாக உணர்வார்கள். மாலை நேர தீபாவளி கொண்டாட்டங்களின் போது சத்தம் கேட்டாலும் கூட சற்று புத்துணர்ச்சியாக இருப்பார்கள்.
வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் மட்டுமின்றி தெருநாய்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் பட்டாசுகள் வெடிக்கிறீர்கள் என்றால், தெரு நாய்கள் இல்லாத இடமாக பார்த்து வெடிக்க வேண்டும். அவற்றுக்கு உணவு மற்றும் தண்ணீர் ஓரிடத்தில் வைத்து விட்டால் அவை அங்கேயே இருக்கும், நீங்கள் வேறு இடத்தில் பட்டாசுகளை வெடித்து மகிழலாம்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Deepavali, Diwali, Fire crackers, Pet care