அமெரிக்காவின் பேண்டோன் அமைப்பு 2022 ஆண்டிற்கான அதிகாரப்பூர்வமான நிறமாக ‘வெரி பெரி ப்ளூ ’ லாவண்டர் வண்ணத்தை தேர்தெடுத்துள்ளது.
வண்ணங்கள் நம் வாழ்வில் இரண்டற கலந்து இருக்கிறது. சுவர்களில் பிரகாசிக்கும் வண்ணங்கள் ஒளி, ஆற்றல், அழகோடு, நமது ஆளுமை மற்றும் குணநலன்களை பிரதிபலிக்கிறது. அதாவது பச்சை என்றால் புத்துணர்வு, மஞ்சள் தன்னம்பிக்கை, சிவப்பு துணிச்சல், ஆரஞ்சு செயல்திறன் என இப்படி வண்ணங்களுக்கான குணநலன்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். நமது வாழ்வோடு கலந்துவிட்ட வண்ணங்களில் இந்த ஆண்டு எது சிறப்பானது என்பதை அறிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..
அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் உள்ள பேண்டோன் என்ற நிறுவனம் வண்ணங்கள் தொடர்பாக நிறைய ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளை நடத்தி வருகிறது. மேலும் வண்ணங்களுடன் தொடர்புடைய கலர் பென்சில்கள் முதற்கொண்டு பெயிண்ட் வரையிலான பல பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
ALSO READ | வீட்டுக் கதவுகளை தனித்துவமாக அலங்கரிக்க பெஸ்ட் யோசனைகள்..!
இந்நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அந்த ஆண்டிற்கான சிறந்த நிறத்தை அறிவித்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் முக்கியமான சில நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை அழைத்து வைத்து, ரகசிய இடத்தில் வைத்து கணிப்புகளை மேற்கொள்ளும். அதன்பின்னர் டிசம்பர் மாதத்தில் அடுத்த ஆண்டிற்கான சிறந்த வண்ணம் எது என்பதை வெளியிட்டு வருகிறது.
ஆண்டுதோறும் பேண்டோன் நிறுவனம் வெளியிட்டு வரும் வண்ணம், உலகளாவிய கலாச்சாரம் மற்றும் மக்களின் சிந்தனைகளை பிரதிபலிக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. மேலும் கடந்த 23 ஆண்டுகளாக தங்களது நிறுவனம் தேர்தெடுக்கும் கலரானது ஃபேஷன், இன்டீரியர் டிசைன் மற்றும் தொழில்துறை வடிவமைப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுவதாகவும், தயாரிப்பு பாக்கெட்டுக்கள் மற்றும் கிராஃபிக் வடிவமைப்பு உட்பட பல தொழில்களில் வாடிக்கையாளர்களை அதனை வாங்க வைக்கும் முடிவிலும் பெரும் ஆதிக்கம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
ALSO READ | ஃபேவரட் கலரில் பர்சனாலிட்டியைக் கண்டறிவது எப்படி?
2022ம் ஆண்டிற்கான சிறந்த நிறமாக ‘வெரி பெரி’ கலரை பேண்டோன் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு உயிரோட்டமான ஊதா நிறத்துடன் சிவப்பு கலந்த டைனமிக் நீல நிற சாயல் தான் வெரி பெரி கலர் என பேண்டோன் நிறுவனம் விளக்குகிறது. நீலம் நிறத்தின் தன்மையான விசுவாசத்தை, சிவப்பு நிறத்தின் தன்மையான ஆற்றல் மற்றும் உற்சாகத்துடன் கலந்து ‘பெரி வெரி ப்ளூ’ நிறம் பிரதிபலிக்கும் என பேண்டோன் நிறுவனம் வரையறுக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் பேண்டோன் நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் குழு, அடுத்த ஆண்டிற்கான சிறந்த கலரை தேர்வு செய்வதற்கு முன்னதாக பொழுதுபோக்கு மற்றும் திரைப்படங்கள், பயணக் கலை சேகரிப்புகள் மற்றும் புதிய கலைஞர்கள், ஃபேஷன், வீட்டு அலங்காரங்கள், புதிய லைப் ஸ்டைல், விளையாட்டு, சமூக-பொருளாதார நிலைமைகள் போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து, உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய நிறங்களை தேர்வு செய்து, அடுத்த ஆண்டிற்கான சிறந்த ஒன்றை கண்டறிவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.