வீட்டை கொரோனா வைரஸிடமிருந்து பாதுகாக்க கிருமிநாசினிகளை அதிகம் பயன்படுத்துகிறீர்களா..? கெமிக்கல் ஆபத்து என எச்சரிக்கும் மருத்துவர்கள்..!

கிருமிநாசினி

எப்படி நாம் கை கழுவுகிறோமோ அது போலத்தான் வீட்டை சுத்தம் செய்யவும் தினசரி பயன்படுத்தும் சோப்பு தண்ணீரே போதுமானது. இதற்காக ஸ்பெஷலாக வாங்கி பயன்படுத்த வேண்டியதில்லை

 • Share this:
  கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள சுத்தமும், சுகாதாரமும்தான் அவசியம் என தெரிந்த பின் சிலர் எப்போதும், எதிலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் அதிகவனம் காட்டுகின்றனர். அது அவர்களுக்கு தற்போது புதிய பழக்கமாகவும் மாறிவிட்டது. ஆனால் இது ஒருவகையில் ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

  ஆம்..அதாவது வீட்டை துடைக்க, காய்கறிகளை கழுவ, வீட்டின் உபயோகப்பொருட்களை துடைக்க என எங்கு பார்த்தாலும் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த கிருமிநாசினிகள் அதிக கெமிக்கலை கொண்டிருப்பதால் அந்த கெமிக்கல் உங்கள் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறுகின்றனர்.

  ஃபோர்டிஸ் மருத்துவமனையின் தலைமை அதிர்ச்சி மற்றும் அவசரநிலை, மருத்துவர் டாக்டர் சுதிர் கோர் இந்தியா. காம் இணையத்திற்கு அளித்த பேட்டியில் பாரம்பரியமாக எந்த தொற்று, கிருமியாக இருந்தாலும் அவற்றை ஒழிக்க நாம் தினசரி பயன்படுத்தும் சோப்பு மற்றும் தண்ணீர் மட்டுமே போதுமானது. அப்படி இந்த கொரோனாவை ஒழிக்கவும் சோப்பும் தண்ணீருமே போதுமானது என்கின்றார்.  எப்படி நாம் கை கழுவுகிறோமோ அது போலத்தான் வீட்டை சுத்தம் செய்யவும் தினசரி பயன்படுத்தும் சோப்பு தண்ணீரே போதுமானது. இதற்காக ஸ்பெஷலாக வாங்கி பயன்படுத்த வேண்டியதில்லை எனக் கூறுகிறார். அதோடு அப்படி நீங்கள் வாங்கிப் பயன்படுத்தும் அதிகப்படியான கிருமிநாசினிகள் எந்த மாதிரியான பாதிப்பை உண்டாக்கும் என விவவரிக்கிறார். அதில்...

  தீவிரமான கெமிக்கல் : இந்த கிருமிநாசினிகளில் அமோனியம் மூலக்கூறு அதிகமாக இருப்பதால் ஆஸ்துமாவை உண்டாக்கும். எனவே வீட்டில் குழந்தைகள், வயதானவர்கள் இருந்தால் உடனே உங்கள் அதிக பயன்பாட்டை குறைக்க அறிவுறுத்துகின்றனர். அதோடு பிளீச்சிங் செய்வதும் சுவாசப்பாதை பாதிப்பு, சரும அலர்ஜி, கண்கள் எரிச்சல் போன்ற பக்கவிளைவுகளை உண்டாக்கும். மக்கள் ஹைட்ரஜன் பெர்ராக்சைட், ஆல்கஹால், சிட்ரிக் ஆசிட், லாக்டிக் ஆசிட் ஆகியவை அடங்கிய கிருமிநாசினிகளை பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை துணிக்கோ, கைக்கழுவவோ, உணவுப் பொருட்கள் மீது பயன்படுத்தக் கூடாது.  மேற்பரப்புகள் மூலம் பரவுவது குறைவு : கொரோனா மேற்பரப்புகள் மூலம் பரவுவதைக் காட்டிலும் மக்களின் நேரடி சந்திப்பில்தான் அதிகம் பரவும் என கூறப்பருகிறது. எனவே தினமும் ஒரு முறை வீட்டை துடைத்தாலே போதுமானது அடிக்கடி செய்ய வேண்டிய அவசியமில்லை. மற்ற உபயோகப்பொருட்களையும் அடிக்கடி துடைக்கத் தேவையில்லை எனக் கூறப்படுகிறது. அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு அமைப்பு அடிக்கடி வீட்டை துடைத்து கிருமிநாசினி கொண்டு துடைப்பது கொரோனாவை ஒழிப்பதற்கான மாற்று வழி இல்லை என்கிறது. வீட்டை காற்றோட்டமாக வைத்துக்கொள்வதே போதுமானது என்கிறது.

  Toilet Cleaner : வீட்டிலேயே டாய்லெட் கிளீனர் தயாரிக்கலாம்..! செய்முறைகள் இதோ...

  உங்கள் வீட்டையும், உங்களையும் கொரோனாவிலிருந்து பாதுகாக்க செய்ய வேண்டியவை....

  மேற்பரப்புகளை துடைக சோப்பு தண்ணீரை பயன்படுத்துங்கள்.

  கிருமிநாசினி வாங்கினால் அதன் பின்குறிப்பை தெளிவாக படிக்கவும்.

  ஆழமான சுத்தம் செய்யப் போகிறீர்கள் எனில் அதற்கு அதிக கெமிக்கல் கொண்ட கிருமிநாசினிகளை பயன்படுத்தினால் மாஸ்க், கண்களுக்கு கண்ணாடி, கையுறை போன்றவற்றை பயன்படுத்துங்கள். கதவு , ஜன்னல்களை திறந்து வையுங்கள்.  ஆழமான சுத்தத்திற்குப் பின் அந்த அறையில் குழந்தைகள், வயதானவர்களை 4 நாட்கள் அனுமதிக்காதீர்கள்.

  வீட்டை நன்கு சுத்தம் செய்த பின் ஜன்னல் , கதவுகளை திறந்து காற்றோட்டமாக வைத்துக்கொள்ளுங்கள்.

  வெளியே சென்று வந்தால் மாஸ்க் அணிவதை மறவாதீர்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். வீட்டிற்கு வந்தால் கை கால்களை சோப்பு கொண்டு கழுவுங்கள்.

   

   
  Published by:Sivaranjani E
  First published: