முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கட்டட அனுமதிக்கு குறைந்தது இரண்டு மரங்கள் நட வேண்டும்: கேரளாவில் அதிரடி உத்தரவு

கட்டட அனுமதிக்கு குறைந்தது இரண்டு மரங்கள் நட வேண்டும்: கேரளாவில் அதிரடி உத்தரவு

மரம் நடுவது அவசியம்

மரம் நடுவது அவசியம்

மரம் வாங்க போதிய பணம் இல்லை என்றாலும் அவர்களே இலவசமாகச் செடியும் , உரமும் தருவதாகக் கூறியுள்ளனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

சுற்றுச்சூழல் பாதிப்பால் பருவநிலை மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. புவி வெப்பமயமாதல் ஆபத்தும் நம்மை அச்சுறுத்துகிறது.

கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கலூர் நகராட்சி, அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

உத்தரவின் படி, வீடு கட்டுவோர், வீடு வாங்குவோர் பத்திரப்பதிவு செய்ய வேண்டுமாயின், வீட்டைச் சுற்றிலும் குறைந்தது வாழை, பலா என குறைந்தது இரண்டு மரங்களையாவது நட வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்படாது எனக் கூறியுள்ளது.

அதாவது 1,500 சதுர அடியில் வீடு கட்டுகிறார்கள் அல்லது 8 செண்டுகளுக்கு மேல் உள்ள இடம் பதிவு செய்யப்படுகிறதெனில், அங்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று மரங்கள் நட வேண்டும். அப்போதுதான் அதிகாரிகள் உத்தரவு அளித்துக் கட்டட எண்கள் வழங்குவார்கள் என்று கூறியுள்ளது.

”வீடு கட்டப்போவதற்கான திட்டத்தில் மரம் வளர்ப்பதற்கான இடமும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பின் பதிவு செய்வதற்கு உள்ளூர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உறுதி செய்தபின் கட்டட எண் வழங்குவார்கள்” என நியூஸ் மினிட்டிற்கு அளித்த பேட்டியில் நகராட்சித் தலைவர் ஜெய்த்ரன் கூறியுள்ளார்.

ஒரு வேலை அவர்களுக்கு மரம் வாங்க போதிய பணம் இல்லை என்றாலும் அவர்களே இலவசமாகச் செடியும் , உரமும் தருவதாகக் கூறியுள்ளனர். இதற்கு அந்த ஊர் வார்டு உறுப்பினர்கள், ஒத்துழைப்பும் அவசியம் என நகராட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: Kerala, Tree plantation