Nerolac இன் அற்புதமான தத்துவம், அதற்கு ஈடான ஒரு அழகான சமூகஊடக போட்டியின் மூலம் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது!

Nerolac இன் அற்புதமான தத்துவம், அதற்கு ஈடான ஒரு அழகான சமூகஊடக போட்டியின் மூலம் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது!

Aaj Careful toh Kal Colourful

Nerolac இன் #Aaj Careful toh Kal Colourful என்னும் வண்ணமயமான தத்துவத்திற்கு இணங்க, மக்களிடையே உற்சாகத்தை பரப்ப முடிவு செய்தனர்.

 • Share this:
  தொற்றுநோயால் நாம் அனைவரும் பல வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளோம். எதிர்பாராத ஊரடங்கில் தொடங்கி, பல்வேறு சுகாதார உத்திகளை  ஒரு பழக்கமாக்குவது வரை, காலத்திற்கு ஏற்ப நாம் அனைவரும் அனுசரித்து வாழ வேண்டிய அவசியம் எழுந்தது.  இது ஒரு பெரிய மாற்றமாக இருந்தபோதும், சில நேரங்களில் சிரமமாக இருந்தபோதிலும், வருங்காலத்தை மனதில் வைத்து, ஒரு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக, நம்மைப் பாதுகாத்துக் கொள்ள கவனமாக தேர்வுகளைச் செய்துள்ளோம்.

  Nerolac இன் #Aaj Careful toh Kal Colourful என்னும் வண்ணமயமான தத்துவத்திற்கு இணங்க, மக்களிடையே உற்சாகத்தை பரப்ப முடிவு செய்தனர். Kansai Nerolac தனது 100 வது ஆண்டுவிழாவை கொண்டாடுவதால், ​இந்த ACKC  போட்டி,மக்களிடையே உற்சாகத்தை பரப்புவதற்கும், அதே நேரத்தில் அனைவரும் காட்டிய துடிப்புக்கு மரியாதை செலுத்துவதற்கும் சரியான வழியாகத் தோன்றியது. தங்களையும் தங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக, மக்கள் தங்களது வாழ்க்கையில் தேர்ந்தெடுத்த கவனமான முடிவுகள் மற்றும் தங்களது வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக அவர்கள் ஏற்றுக்கொண்ட புதிய வழிமுறைகளைப் பற்றியக் கதைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு Nerolac கேட்டுக் கொண்டுள்ளது.சிறந்த கதைகளைப் பகிர்பவர்கள் Nerolac இடமிருந்து வண்ணமயமான ஆச்சரியத்தைப் பெறுவர், அதாவது அவர்களது  வீட்டில் ஒரு அறை முழுதாக வண்ணம் தீட்டி தரப்படும்!

  நிர்ணயிக்கப்பட்ட காலத்தின் முடிவில், ஒரு சிறந்த, பிரகாசமான, வண்ணமயமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக, மக்கள் இன்று தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய எவ்வாறு முயன்றார்கள் என்பது பற்றிய ஏராளமான மனிதாபிமானக் கதைகளுடன், 200-க்கும் மேற்பட்ட உள்ளீடுகள் வந்தடைந்தன. மக்களின் பதில்களை பார்ப்பது அருமையாக இருந்தாலும், மக்கள் எவ்வளவு நன்றாக காலத்திற்கு ஏற்ப அனுசரித்து, வாழ்க்கையை மாற்றி  அமைத்துள்ளார்கள் என்பதையும், பாதுகாப்பாக இருக்க தீவிரமாக, கவனமாகத் தெரிவுசெய்வதையும் பார்ப்பது மேலும் சிறப்பாக இருந்தது.

  இது சின்ன சின்ன விஷயங்களை குறிக்கிறது. ஒருவர் வீடு திரும்பியவுடன் குளிப்பதிலிருந்து, ஒரு சேனிடைசர் இல்லாமல் ஒருபோதும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்பதை உறுதிசெய்வது, முகக்கவசம் அணிவது, சுற்றியுள்ள மற்றவர்களும் இதைச் செய்யும்படி கேட்டுக்கொள்வது, இதுபோன்ற பல பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்து மக்கள் பகிர்ந்து கொண்டனர். இது ஒரு கடினமான பணியாக இருந்தபோதிலும், மூன்று அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களது வீட்டில் ஒரு முழு அறைக்கு, 99.9% வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களிலிருந்து  சுவர்களைப் பாதுகாக்கும் Nerolac Excel Virus Guard வண்ணப்பூச்சுக் கொண்டு வண்ணம் தீட்டி தரப்படும்.  இது வாசனையையும் ஈரப்பதத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் சர்வதேச தர, ஃபேப்ரிக் பூச்சு அளிக்கிறது.

  இப்போட்டி வெற்றியாளர்களில் ஒருவரான பூஜா கார்க், முடிந்தவரை வீட்டில் தங்குவது எப்படி ஒரு பழக்கமாக அமைந்தது என்பதைப் பற்றி பேசினார்; அதாவது,வெளியே செல்வதில், அவர் அதீத  ஜாக்கிரதையாக  இருந்தார் , மிகவும் அவசியமான  சூழ்நிலைகளில் மட்டுமே வெளியே சென்றதாகக் கூறியுள்ளார். இதன் மூலம், அவர் தன்னை மட்டுமல்ல, மற்றவர்களையும் பாதுகாத்துள்ளார். அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களில் மற்றொருவரான நிஷா திங்க்ரா, வழக்கமான சுத்திகரிப்பு பற்றி பேசியிருந்தார். மேலும் அவர், எந்த சூழ்நிலையிலும், காலணிகளை வீட்டிற்கு வெளியே விட்டுவிடுவதை உறுதி செய்யும் பழக்கத்தை வளர்த்துள்ளதாக கூறியுள்ளார். மூன்றாவது வெற்றியாளரான ரேணு தாக்கூரைப் பொறுத்தவரை,அதிகபட்ச தூய்மையை உறுதி செய்வதே நன்றாகும்.  வீட்டிற்குள் நுழைந்த அனைத்தையும் சுத்திகரிப்பதோடு, வெளியில் இருந்து திரும்பி வீட்டுக்கு வரும்போதெல்லாம், மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகமூடிகளையும் சுத்தமாக கழுவியதாக குறிப்பிட்டிருந்தார்.

  இந்த போட்டியில், சிறந்த, வண்ணமயமான எதிர்காலத்திற்கான கவனமான தேர்வுகளின் முக்கியத்துவத்தை அறிந்த  வெற்றியாளர்கள் இவர்கள்; ஆனால் உண்மையில் நாம் அனைவரும் வெற்றியாளர்கள் தான். இந்தியர்களாகிய நாம் சுத்தம் மற்றும் சுகாதாரம் நம் வாழ்வில் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம், பின்பற்றத்தக்க வகையில், தொற்றுநோயை எதிர்த்துப் போராடியுள்ளோம். எல்லாவற்றிற்கும் மேலாக, இது ஒரு சிறந்த எதிர்காலத்திற்கானது. இந்த புதிய வழக்கங்கள் ஒரு புதிய வாழ்க்கை முறையாக மாறி, நாம் அனைவரும் பாதுகாப்பான, சிறந்த, வண்ணமயமான எதிர்காலத்தை நோக்கி கைகோர்த்து ஒன்றாக நடக்க நம்புகிறோம்!
  Published by:Ram Sankar
  First published: